தொலை(கிறது) காட்சி
அபியும் நானும், அன்பே வா
வானத்தைப் போல, ராஜா ராணி
செம்பருத்தி , அண்ணாமலை
அத்திப்பூக்கள் , கோலங்கள்
செந்தூரப்பூவே , சூர்ய வம்சம்
புரியாத புதிர் , பாசம்
பராசக்தி , சதிலீலாவதி
கல்லூரிக் காலம், நினைத்தாலே இனிக்கும்
முந்தானை முடிச்சு, மௌன ராகம்,
சத்யா, சிவா மனசில சக்தி … … …
சின்னத்திரைத் தொடர்கள்
மாப்பிள்ளை, கொடி
வேலைக்காரன், கர்ணன், காளை
எங்க வீட்டுப் பிள்ளை,
இது நம்ம ஆளு , மனிதன், கைதி… … …
எனக்கு இன்னொரு பேர் இருக்கு,
க க க போ, அதே கண்கள்,
பொதுவாக எம் மனசு தங்கம்,
அண்ணனுக்கு ஜே, கண்ணே கலைமானே,
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்,
பொன்மகள் வந்தாள் , புத்தம் புது காலை,
ஆறு மனமே ஆறு
பிளான் பண்ணி பண்ணனும்… … …
வெள்ளித்திரைப் படங்கள்
தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சமாம்
தமிழ் இயக்குநர்களுக்கு தமிழ் பஞ்சமாம்.
இவை
பதங்களில் வாஸ்து நோக்கலோ?
ரசனைச் சிக்கலோ
ரசிகர்களின் மூடத்தனமோ?
சிந்தனையை முடக்கும் உத்திகள்
ஆயினும்
ஆயினும்
தொலைக்காட்சியால்
இன்றும் தொலைகிறது
இனிமேலும் தொலையும்
தமிழர்களின் நல வாழ்வு.
- விஜயன் முல்லை, சித்தூர், பாலக்காடு மாவட்டம், கேரளா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.