விரோத மனம்
ஒவ்வொரு முறையும்
விரோதிகளைப் பார்க்கும் போது...
வேட்டை விலங்குகள்
இரையைக் காணும் போது...
அடிக்கும் ஆசிரியர்
வகுப்புக்கு வரும் போது...
கேட்டதைப் பெற்றோர்
வாங்கித் தராத போது...
ஒவ்வொரு முறையும்
லாட்டரி வாங்கும் போது...
அப்பாவுக்காக
பீடி வாங்கும் போது...
ஒவ்வொரு முறையும்
பூக்காரன்
ரீத் கட்டும் போது...
ஒவ்வொரு முறையும்
தலைவன்
தலைவியைப் பார்க்கும் போது...
வாகன விபத்துகள்
நிகழும் போது...
நேரடியாகச் சந்திக்கும் போது... ... ...
- விஜயன் முல்லை, சித்தூர், பாலக்காடு மாவட்டம், கேரளா.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.