நலவாழ்வு
காரித் துப்பிய
மென்று துப்பிய
நோயர் துப்பிய
இடம்
சிறுநீர் கழித்த
மலம் கழித்த
கழிவுகள் வீசப்பட்ட
இடம்
அணுக்கள் நிறைந்த
நோய்கள் மறைந்துள்ள
மனதை நெருடச் செய்யும்
இடம்
பல போது
வெடிப்புகள் கொண்ட
வெறுங்காலுடன்
நடக்ககுமிடம்.
மாலை நேரம்
வடமாநில வகைகள் மணக்கும்
துரித உணவகம்.
அலங்காரத்துடன் வரும்
மேன்மக்களும்
கையேந்தி நின்று
ருசிக்கும் இடம்
பொருட்களையும்
கைகளையும்
அடிக்கடிக் கழுவாத
பணியாள் சமைக்கும்
பரிமாறும் இடம்
அடிக்கடி
வரவழைக்குமிடம்
நலவாழ்வு தருவதாக
தெய்வம்.
- விஜயன் முல்லை, சித்தூர், பாலக்காடு மாவட்டம், கேரளா.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.