சங்கே முழங்கு!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத மனிதமென்று சங்கே முழங்கு!
மயிலுக்குப் போர்வைத் தந்தான் பேகன்
மணிஓசைக்கு நீதி தந்தான் மனுநீதிச்சோழன்
மாரியாய் அள்ளிக் கொடுப்பான் பாரி
மக்கள் மனம் மகிழ வைப்பான் காரி
பாசமுள்ள மக்கள் எம்மக்கள் என்று சங்கே முழங்கு!
பொறுமையாய் இருப்போம் நாங்கள்
ஊமையென நினைக்க வேண்டாம் நீங்கள்
தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தால் நீயும்
தீராத துன்பத்தில் வாழ்வு அழியும்
மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டால் நீங்கள்
பெருந்தன்மையாய் மன்னிப்போம் நாங்கள்
குள்ளநரித் தந்திரத்தை நீயும்
உன் குட்டிச்சுவருக்குள்
வைத்துக்கொள் நியாயம்
மந்திரமின்றி மாயங்கள் புரியும்
தந்திரத்தை வேரறுக்கத் தெரியும்
ஒற்றுமை எங்கள் உணர்வு
பலிக்காது உங்கள் கனவு
வந்தவழி நீயும் செல்லு
எங்கள் தாய்மண்
எங்கள் உயிரெனச் சொல்லு
- சரவிபி ரோசிசந்திரா, சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.