நினைவுகள் எல்லாம்...!
நீ சென்ற
ஒரு நொடியில்
பிறந்து விடுகிறது
உனக்கு புது பெயர்...
ஒரு மணி நேரத்தில்
தூக்கி எறியப்படுகிறது
உடைமைகள்...
வாங்கியப் பதக்கங்கள்
தூங்கிக் கொண்டிருக்கிறது
அலமாரியில்...
உயரிய சான்றிதழ்கள்
எடைக்குப் போடப்படுகிறது
எட்டு மணி நேரத்தில்...
ஆயுள் காப்பீடு ஆராயப்படுகிறது
உட்பெட்டியில்...
அசையும் சொத்தின் அட்டவணை
அமைதியாய் தயாரிக்கப்படுகிறது...
அசையா சொத்துக்கள்
பிரிக்கப்படுகிறது
அன்றிரவே அலைபேசியில்...
பங்குச்சந்தையில்
பரிசீலக்கப்படுகிறது
பங்கின் பரிவர்த்தனை நள்ளிரவில்...
நீ சென்ற அன்றே முடிந்து விடுகிறது
உன் நினைவுகள் செல்லாக்காசாய்...
- சரவிபி ரோசிசந்திரா, சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.