மேம்பாடு
முதலில் சிமெண்ட்
தரை உடைக்கப்பட்டு
டைல்ஸ் போடப்பட்டது
சேதமாகாமல் இருந்த போதே
அவை மாற்றப்பட்டு
விலை கூடிய டைல்ஸ் போடப்பட்டது
அதன் பின்னர்
அவையும் நீக்கப்பட்டு
கிரானைட் பதிக்கப்பட்டது.
ஓரிரண்டு
புதிய கட்டடங்களும் கட்டப்பட்டன
நவீன கழிவறைகளுடன்.
கோடிகள் செலவு செய்து
வண்ணங்களும் தீட்டப்பட்டன.
நவீன இருக்கைகளும்
மேசைகளும் வாங்கப்பட்டன.
இப்படியெல்லாம்
கல்லூரியின் தரம் உயர்ந்தது.
ஆனால், கல்வியின்
தரம் மட்டும்...?
- விஜயன் முல்லை, சித்தூர், பாலக்காடு மாவட்டம், கேரளா.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.