பிறந்தநாள் பரிசு
ஒரு மரக்கன்று
ஒரு வீட்டு விலங்கின் குழந்தை
நயம் தரும் நூல்கள்
வங்கி அல்லது
அஞ்சலக சேமிப்புக் கணக்கு
இன்ன பிற...
ஏதேனும் ஒன்று
பிறந்த நாள்
பரிசாக அளிக்கப்படுறது
குழந்தைக்கு
ஒவ்வொரு ஆண்டும்...
மேலும்,
முதியோர் இல்லத்துக்கு
உணவளித்து
ஒரு நாள் அவர்களுடன் செலவிடல்.
ஆதரவற்ற குழந்தைகளுடன்
ஒரு பொழுது கழித்தல்
உணவும் பரிசும் அளித்தல்.
மருத்துவ மனையைப்
பார்வையிடல்
ஏழை நோயாளிகளுக்கு
உணவு தருதல்
ஏழை மாணவர்களுக்கு
கற்றல் பொருட்கள்
பரிசளித்தல்.
ஆதரவற்ற சில மாணவர்களின்
கல்விச் செலவை ஏற்றல்.
சாலை வாசிகளுக்கு
பரிசுப் பொட்டலங்கள்
வழங்குதல்.
மரக்கன்று நட்டுப்
பாதுகாத்தல்.
ஆதரவற்ற விலங்குகளுக்கு
உதவுதல்
இன்னும் இன்னும்
இயன்ற உதவிகள்
அத்துடன் குழந்தைக்காகச்
சுற்றுலா போவதும்
பிடித்த ஆரோக்கியமான
சுகாதாரமான சூழலுக்கு ஏற்ற
உணவு வாங்கித் தருவதும்
உடன் வழங்கப்படுகின்றன
பிறந்த நாள் பரிசாக...!
- விஜயன் முல்லை, சித்தூர், பாலக்காடு மாவட்டம், கேரளா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.