வழக்குரைத்தல்
தன் பெற்றோரைக்
குறைகூறாத நாளெல்லாம்
குறைவாழ் நாளே என
வழக்கிடும் தலைவியிடம்
பெற்றோருக்காகப்
பரிந்து பேசி
வாதிடுகிறான்
குடும்பத் தலைவன்.
அச்சொற்போர்
சிலபோழ்து
இட்டுச் செல்கிறது
மணவிலக்கு வரை.
தன் தலைவியைப்
பழிக்கும் பெற்றோரிடம்
தலைவிக்காக வாதிட்டு
தலைகீழாய் நிற்கிறான்
தலைவன்.
அப்பிணக்குத்
தம் பிணத்தின் முகத்திலும்
விழித்தலாகாது எனப்
பெற்றோர்
உரைக்கும் அளவு
காரமாகிறது.
உண்மைத் தெரியாமல்
இரு சாரரும்… … …
மத்தளமாக.
மனம் பதைக்கும்
தலைவன்
இதய நோய்வாய்ப்பட்ட
தலைவனுக்கு
அறிவுறுத்தினார்
மருத்துவர்
கொஞ்சம் மருத்துவமும்
கொஞ்சம் அறிவுரையும்
பெற்றோரை மறந்துவிடு
அல்லது
தலைவியைத் துறந்துவிடு
அல்லது
பைத்தியம்போல் நடித்துவிடு
குழந்தைகளுக்காக...
- விஜயன் முல்லை, சித்தூர், பாலக்காடு மாவட்டம், கேரளா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.