சொல்வது நிச்சயம்?
சொல்லலாமோ
கூடாதோ
சொல்லித்தான் ஆகனும்
சொல்லாவிட்டால்
வெடித்திடுமோ
மனசு?
கலைஞ்சிடுமோ
வேஷம்?
தொலைஞ்சிடுமோ
மதிப்பு
கலைஞ்சிடுமோ
காதல்
சொல்லிவிட்டால் !
கரைந்திடுமே
பாரம்
மகிழ்ந்திடுமே
உள்ளம்
நனவாகுமே
கனவு
உயர்ந்திடுமே
வாழ்வு.
முகம் பார்த்து
முன்னால் நின்று
சொல்லனும்
அதுதான்…………..!
ஏத்துக்குவானா?
முடியாதுன்னு
முட்டுக்கட்ட போடுவானோ?
முரண்டு பிடிப்பானோ?
முதல்லயே சொல்லியிருக்கலாமேன்னு
முறுவலிப்பானோ ?
ஆனாலும்
எப்படிச் சொல்றது?
தயக்கமா?
பயமா?
எங்க சொல்லறது?
குறுஞ்செய்தி
மின் அஞ்சல்
முகநூல்
வாட்ஸ் அப்
ட்விட்டர்
தொலைநகல்
கடிதம்
தூது
தோழி
… … … … …
எல்லாம் இருக்கு
பயந்தவள்னு நினைச்சிட்டா… … … ?
தொடை நடுங்கின்னு
சொல்லிட்டா… … … ?
பொம்பளையான்னு
ஏளனம் பண்ணிட்டா… … … ?
ஆனாலும் சொல்லனும்.
இன்று
நாளை
இப்போ
பிறகுன்னு
வருஷம் மூணாச்சி
வருத்தம் நூறாச்சி
இன்னும்
அவளுக்குள்
அதே வினா
அலைகளாக
அலைகளாக… … …
- விஜயன் முல்லை, சித்தூர், பாலக்காடு மாவட்டம், கேரளா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.