இவையனைத்தும்...!
சிந்தனை இல்லாத கவிதை !
பண்பாடு மறந்த படிப்பு !
விவேகம் விளையாத வேகம் !
வாசம் வீசாத பூக்கள் !
நதி ஓடாத நாடு !
உரிமை பாராட்டாத நட்பு !
பொருளையே எதிர்பார்க்கும் உறவு !
பாலுணர்வால் பாழ்படும் காதல் !
கற்பனை கனியாத கலை !
ஒப்பனை ஒழுகாத ஓவியம் !
ஊருக்கு மட்டுமே சொல்லும் உபதேசம் !
உண்மை ஊறாத வாழ்க்கை !
வறியார்க்கு வழங்காத பொருள் !
பெண்மையை இகழும் யுவத்துவம் !
பெரியோர்கள் வாழாத குடும்பம் !
சிறார்கள் விளையாடாத தெரு !
மதி உலவாத வானம் !
மனிதம் மலராத பூமி !
ஊழல் ஊறும் உலகம் !
அநீதியைப் போற்றும் சட்டம் !
காதல் இல்லாத காதலி!
கனிவு காட்டாத கணவன்!
பாகுபாடு பார்க்கும் அம்மா!
பயனின்றிக் கழியும் காலம்!
துன்பம் இல்லாத வாழ்க்கை !
தூய்மை மேம்படாத சுற்றுச் சூழல் !
வன்முறை வளரும் சமூகம் !
அவலம் கண்டு அஞ்சும் நெஞ்சம். !
நட்பு இல்லா நண்பர்கள் !
ஊழல் செய்யும் அலுவலர்!
வீரம் இல்லாப் பெண்மை !
தோல்வி பழகாத விளையாட்டு !
அச்சம் தரும் அறிவியல் !
உச்சம் தொடாத மிச்சம் !
- இவையனைத்தும் வீண்...!!
- விஜயன் முல்லை, சித்தூர், பாலக்காடு மாவட்டம், கேரளா.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.