மனம்
புதுமைகளை
வரவேற்பதில்
வளர்ப்பதில்
நாம்
பெருந்தன்மையாளர்கள்
கை தேர்ந்தவர்கள்.
வந்தாரை
வாழ வைப்போம்
ஒருபடி மேலே போய்
ஆளவும் வைப்போம்
கலாச்சாரத்தையும்
பண்பாட்டையும் அப்படியே
அர்த்தம் நிறைந்த
ஆழம் மிகுந்த
வார்த்தைகளாம்
அவை
கலைகளின் ஆச்சாரம்
இன்று...
வெடிகுண்டு கலாச்சாரம்
கொலைக் கலாச்சாரம்
வெடிகுண்டு க்லாச்சரம்
வழிப்பறிக் கலாச்சாரம்
போராட்டக் கலாச்சாரம்
வன்முறைக் கலாச்சாரம்
கற்பழிப்புக் கலாச்சாரம்
ஊழல் கலாச்சாரம்
கைபேசி கலாச்சாரம்
விளம்பரக் கலாச்சாரம்
எத்தனை எத்தனை
புதிய கலாச்சாரங்கள் !?
ஊழல் பண்பாடு
பாலியல் பண்பாடு
எனப் பண்பாடு
படும் பாடுதான்
எவ்வளவோ?
தாராள மனதுண்டு
நமக்கு
இன்னும்
வரவேற்போம்
வாய்ப்பளிப்போம்
என்னாகுமோ!
ஏதாகுமோ!
நம் நாடும்
பண்பாடும்
- விஜயன் முல்லை, சித்தூர், பாலக்காடு மாவட்டம், கேரளா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.