நம் அன்பிலில்லை பேதம்...!
பட்டமரமாய் மண்ணில்
வீழ்ந்தேன் நானே!
உன் நேசப் பார்வையில்
வேர்ப்பிடித்து வளர்ந்தேனே!
இலையுதிர் காலமாய்
என் வாழ்வு ஆனது
அன்பே! நீ பேசிட
பசுந்தளிர் துளிர்த்தது...
வண்ணப்பறவையாய்
எண்ணக் கிளையில் அமர
நல்லெண்ணக் கூட்டினைக்
கட்டிச்சென்றாய் நான் வசிக்க...
சின்னஞ்சிறு பறவையாய்
மண்ணில் பிறந்தேன்
சிறகை நீ விரித்திட
மேலே பறந்தேன்
அன்பெனும் வீட்டில்
வாழ வைத்த தெய்வமே!
உன் அன்பு ஒன்றில்
வாழும் ஜீவன் எந்நாளுமே!
நீயின்றி எனக்கு இங்கு யாருமில்லையே!
உன் நினைவில் வாழுது இந்தப் பிள்ளையே!
உன் திருவாக்கு வேதம்
உன் நினைவு இதயக்கீதம்
அன்பே! நீ உயிர்நாதம்
நம் அன்பிலில்லை பேதம்...!
- சரவிபி ரோசிசந்திரா, சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.