கண்ணா! கண்ணா! கண்ணா!

கண் கண்ட தெய்வமே!
மண் காக்கும் தெய்வமே!
தினம் பேசும் தெய்வமே!
மணம் வீசும் திருநாமமே!
கலியுகத் தெய்வமே!
கருணைத் திருவுள்ளமே!
பூவுலகத் தெய்வமே!
பூமுகத்தில் திருமுகமே!
கண்ணா! கண்ணா! கண்ணா!
உம்மை வணங்க...
ஏழேழு ஜென்மங்கள் போதாது
கண்ணா! கண்ணா! கண்ணா!
நான் தொலைவில் இருந்தாலும்
தினம் நினைவில் அணைப்பாயே!
நான் வறுமையில் வாழ்ந்தாலும்
என்னை மறுமையில் சேர்ப்பாயே!
மௌனம் காத்தாலும்
திருவாக்காய்ப் பேசுவாயே!
பரமாத்மா என்றாலும்
ஜீவாத்மாவில் வசிப்பாயே!
கண்ணா! கண்ணா! கண்ணா!
உம்மை வணங்க...
ஏழேழு ஜென்மம் போதாது
கண்ணா! கண்ணா! கண்ணா!
நான் எங்கேச் சென்றாலும்
என் வழித்துணையாய் வருவாயே!
பார்க்கும் திசையெங்கும்
திருமுகம் காண வைப்பாயே!
பேசும் மொழிதனிலே
திருக்குரலாய் ஒலிப்பாயே!
கண்ணீரில் கரைந்தாலும்
திருப்பாதம் தொழுதிட வரமளிப்பாயே!
கண்ணா! கண்ணா! கண்ணா!
உம்மை வணங்க...
ஏழேழு ஜென்மம் போதாது
கண்ணா! கண்ணா! கண்ணா!
கலங்கி நான் நின்றால்
என்னைத் தேற்றிடும் தாயாவாய்...
தடம் மாறிப் போகாமல்
என்னைக் காத்திடும் குருவாவாய்...
நலம் குன்றிப் போனால்
உடல்நலம் பேணுவாய்...
சிரிக்க நான் மறந்தால்
சொல்லில் புதுமைகள் செய்வாய்...
கண்ணா! கண்ணா! கண்ணா!
உம்மை வணங்க...
ஏழேழு ஜென்மம் போதாது
கண்ணா! கண்ணா! கண்ணா!
தன்னம்பிக்கை நான் தளர்ந்தால்
நம்பிக்கையாய் நீ வருவாய்...
வலியில் நான் தவித்தால்
மனவலிமை நீ தருவாய்...
உம் திருநாமம் உச்சரித்தால்
திருமுகம் காண அருள்வாய்...
மாய உலகில் கரைந்துவிட்டால்
குழலோசையில் மீட்டுவாய்...
கண்ணா! கண்ணா! கண்ணா!
உம்மை வணங்க...
ஏழேழு ஜென்மம் போதாது
கண்ணா! கண்ணா! கண்ணா!
- சரவிபி ரோசிசந்திரா, சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.