காதலிக்க வேண்டும் நீ!

காதலிக்க வேண்டும் நீ
காதலிக்க வேண்டும்
காதலிக்கவில்லை என்றால் நீ
பேதலிக்க வேண்டும்
காதலித்தால் நீயும்
மனிதனாகலாம்
காதலித்தால் நீயும்
கடவுளாகலாம்
காதலித்தால் நீயும்
கலைஞனாகலாம்
காதலித்தால் நீயும்
தலைவனாகலாம்
காதல் என்ற கோளில் தானே
மனிதம் வாழுமே!
காதலிக்கவில்லை என்றால்
மானுடம் விழுமே!
நீயும் நானும் பிறந்தது எப்படி
காதலில் தானே!
காதலின்றி உயிர் வாழ்ந்தால்
வாழ்க்கை வீணே!
காதல் என்ற வார்த்தைக்குக்
கலங்கம் கற்பித்தது யாரு?
காமம் என்று அதற்கு
அரிதாரம் பூசியது
யாரென்று கூறு?
அம்மா பிள்ளைக் காதலில்
அன்பு மேலோங்குமே!
அந்தக் காதலில் தான்
இனிய உலகம் இயங்குமே!
அக்கா தம்பி காதலில்
அரவணைப்பு உறையுமே!
அந்தக் காதலில் தான்
பகிர்தலின் பாசம் தெரியுமே!
அண்ணன் தம்பி காதலில்
சிறு சண்டைத் தெரியுமே!
அந்தக் காதலில் தான்
ஒற்றுமையின் வலிமை புரியுமே!
தாத்தா பாட்டி காதலில்
பழமை இருக்குமே!
அந்தக் காதலில் தான்
அனுபவம் கதை பேசுமே!
நட்பு என்ற காதலில்
கொண்டாட்டம் ததும்புமே!
அந்தக் காதலில் தான்
நல்லொழுக்கம் நறுமணமாய் வீசுமே!
காதல் என்ற வார்த்தைக்கு
அர்த்தம் வேண்டுமா?
கண்ணுக்குப் புலப்படாத
அன்பு தெய்வம் தானம்மா...
காதலிக்க வேண்டும் நீ
காதலிக்க வேண்டும்
காதலிக்கவில்லை என்றால் நீ
பேதலிக்க வேண்டும்
- சரவிபி ரோசிசந்திரா, சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.