வாழ்க்கை வெறுங்கனவு...!
நம்மைத் தேடிப் பார்க்கிறார்கள்
நாம் தொலைந்துப் போய்
சில வருடங்களாகிறது
இப்போது தான் தேடுகிறார்கள்
நாம் அமர்ந்திருந்த நாற்காலியை
அறையில் வைத்திருக்கிறார்கள்
நம் புகைப்படத்தைத்
தொட்டு ரசிக்கிறார்கள்
நம்மை அழ வைத்தவர்கள்
நமக்காக இன்று அழுகிறார்கள்
நாம் பேசுவதைச் செவிமடுத்துக்
கேட்காதவர்கள்
நம் குரல் கேட்கத் தவிக்கிறார்கள்
நம் உணர்வு அறியாமல் உளறியவர்கள்
உணர்வாய்ப் பேசுகிறார்கள்
இவை எல்லாம் நாம்
இறந்த பின்னால் தான் கிடைக்கும்
எனில் வாழ்க்கை எதற்கு?
வாழும்போதே கிடைக்க வேண்டும்
மனமகிழ்வு இல்லையேல்
வாழ்க்கை வெறுங்கனவு...
- சரவிபி ரோசிசந்திரா, சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.