உயரப் பார்வை
சீறும் சிங்கத்தை
சித்திரமாய் வரைய
வேறு கோணத்தில்
விவரமாய் நோக்கும்
ஒட்டகச் சிவிங்கி
உயரப் பார்வையில்
எட்டிப் பார்க்கும்
எண்ணிப் பார்க்கும்...
மாறிய வடிவமாய்
மன்னன் சிங்கமோ
நேரில் பார்ப்பதினும்
மாறிய தோற்றமாய்...
மேலிருந்து பார்க்க
பணிவான சிங்கமாய்...
அவரவர் கோணத்தில்
அடுத்தவர் அப்படியே
தவறில்லை இதுவொன்றும்
தனிக்கருத்து கொள்வதில்!
பார்வை பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
நேர்மைதான் எல்லாமே
நாமொன்றை பார்ப்பதில்!
உயர்ந்தவர் தாழ்ந்தவர்
என்பது எல்லாமே
அவரவர் எண்ணத்தால்
அப்போது உதிப்பதே!
- வைரமணி, சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.