வைரமணி
தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இடையில் சில ஆண்டுகள் சங்கரன்கோவிலில் வசித்தார்.
சென்னை உரத்தொழிற்சாலையில் ஓராண்டு பணி புரிந்த பின்னர், வங்கிப் பணிக்கு மாற்றமானார். வங்கியில் உயர் அதிகாரியாக நீண்டகாலம் பணிபுரிந்த இவர் சில வெளி மாநிலங்களுக்குச் சென்று தங்கி இருந்ததால் ஆங்கிலம், இந்தி, மராத்தி , கொங்கணி மொழிகளிலும், கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளை ஓரளவு அறிந்து கொண்டவர்.
ஜெர்மனி, இத்தாலி, பிரான்சு, தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்குப் பயணம் செய்திருக்கும் இவருக்குச் சுற்றமும் சூழலும் இன்னும் நட்புடன் தொடர்கின்றன.
"கவி, கவி" என நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர், கண்ணதாசன் முன்னிலையில் கவி படித்ததைத் தற்போதும் நினைவு கூர்ந்து மகிழ்கிறார். பல கவியரங்களில் பங்கு கொண்டு கவிதை வாசித்திருக்கும் இவர், தமிழார்வத்துடன் கட்டுரை, கதை போன்றவற்றிலும் பங்களித்துள்ளார்.
கவிதை
சிறுவர் பகுதி - கவிதை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.