காதல் ரசம்
ஏனிந்தக் காத்திருப்பு
என்னவன் வருகைக்காய்
ஆனந்தம் எப்போதும்
அவன் வருகையாலே
எழில்கோலம் பூண்டஎன்
எதிர்பார்ப்பைக் கண்கள்
எழிலாகச் சிந்த
எப்போதும் சந்திக்கும்
ஏரிக் கரையோரம்
அமைதியான காத்திருப்பு.
சேருமவனுடன் பேசவேண்டி
அதற்கான ஒத்திகையோ?
காதலில் விழச்செய்த
கண்பார்வை என்சொல்வேன்
ஆதலால் காதலில்
அதிகமாய் மூழ்கிவிட்டேன்
ஆசையாய் உதிர்த்த
அத்தனை முத்துக்கள்
பேசிய வார்த்தைகள்
பரவசம் தானே!
பூந்துகள் உதிர்த்திடும்
பூக்களும் இங்கே
மாந்திய இசையுடன்
மனமகிழ் ந்திங்கே!!
- வைரமணி, சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.