ஆசிரியரின் மந்திரக்கோல்

ஆசிரியரிடம் அன்று வாங்கிய அடிகளை
நினைத்து இன்றும் மகிழ்கிறேன்.
பள்ளிக்குத் தாமதமாகப் போனாலும் அடி விழும்
பல்துளக்காமல் போனாலும் அடி விழும்
தலைமுடி வெட்டிக்கொள்ளாமல் போனாலும் அடி விழும்
நகத்தைப் பல்லால் கடித்தாலும் அடி விழும்.
மனப்பாடப் பாடலை ஒப்பிக்காவிட்டாலும் அடி விழும்
மதிப்பெண் குறைந்தாலும்அடி விழும்
புத்தகம் கொண்டு வர மறந்தாலும் அடி விழும்
வீட்டுப்பாடம் முடிக்காமல் போனாலும் அடி விழும்.
அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுத்தாலும் அடி விழும்
அடங்காமல் அடாவடிதனம் செய்தாலும் அடி விழும்
அடுத்தவன் பொருளைஎடுத்தாலும் அடி விழும்
அடம்பிடித்தாலும் அடி விழும்.
குறும்பு செய்தாலும் அடி விழும்
வம்பிழுத்தாலும் அடி விழும்
தப்பு செய்தாலும் அடி விழும்
தவறு இழைத்தாலும் அடி விழும்.
வரிசையில் நிற்காவிட்டாலும் அடி விழும்
வாய்விட்டுப் படிக்காவிட்டாலும் அடிவிழும்
ஓதாமல் சென்றாலும் அடி விழும்
ஒழுக்கமில்லாவிட்டாலும் அடி விழும்.
ஆசிரியரிடம் அன்று வாங்கிய
அத்துனை அடிகளும் படிக்கற்களாகி
என்னை அடுத்த நிலைக்கு
உயர்த்தத் தயார்ப்படுத்தின.
ஆசிரியரின் கையிலிருந்த
அந்த மந்திரகோல் - எனது
மதிப்பெண்களைக் கூடுதலாக்கியதோடு
நின்றுவிடவில்லை.
இன்றும் அதுயென்
மதிப்பையும் மாண்பையும்
உயர்த்திக்கொண்டே
இருக்கின்றன.
- முனைவர் கு. சிதம்பரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.