கனவு மனம்
சங்க இலக்கியத் தேர்வெழுதத்
திணறிக்கொண்டிருந்தான்
தேர்வுக்கூட அரங்கில்
அமர்ந்துக்கொண்டு.
வினாத்தாளிலுள்ள
வினாக்கள் அனைத்தையும்
ஒவ்வொன்றாகப் படித்தான்
ஒன்றும் புரியவில்லை.
சட்டென்று
காட்டாற்று வெள்ளம்போல
பெருக்கெடுத்து ஒடிற்று
அவனது சிந்தனையோட்டம்
காதலியை நினைத்தப்பொழுது.
எழுதினான் எழுதினான்
அனைத்துப் பக்கங்களையும்
ஒன்று விடாமல் எழுதினான்
எழுதிக் கொண்டேயிருந்தான்!
அவன் பேனாவில்
மை தீருமுன்னே
அவள் ஒப்பனைக் கலைந்து
ஓய்ந்தே போனாள்.
- முனைவர் கு. சிதம்பரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.