வரிக் குதிரை
அய்யோ….கோ…..!
வாழும் இடத்திற்கு
வரி போடுறாங்க
உழும் நிலத்திற்கும்
வரி போடுறாங்க!
குடிக்கும் நீருக்கு
வரி போடுறாங்க
சுவாசக் காற்றுக்கும்
வரி போடுறாங்க!
வாங்கும் பொருளுக்கு
வரி போடுறாங்க
கற்கும் கல்விக்கும்
வரி போடுறாங்க!
இடியாப்பத்திற்கு
வரி போடுறாங்க!
இட்லி மாவுக்கும்
வரி போடுறாங்க!
வாகனத்துக்கு
வரி போடுறாங்க
வருமானத்துக்கும்
வரி போடுறாங்க!
காப்பீட்டுத் தொகைக்கு
வரி போடுறாங்க
சுடுகாட்டுச் சாலைக்கும்
இழவு வரி போடுறாங்க!
வாழ்க்கை வெளங்கிடுமுன்னு
வெளிநாடு போனாலும்
இரட்டை வரி போடுறாங்க
இரத்ததை உறுஞ்சுறாங்க!
தூங்கினாலும்
வரி போடுறாங்கா
தும்மினாலும்
வரி போடுறாங்க!
வரிமேல வரி கட்ட முடியல
வாங்கிய கடனுக்கும்
வட்டிகட்டி வாழ முடியல
வாய்தாவும் சொல்ல முடியல!
அய்யோ..கோ…!
தொடப்பக் கட்டபோல
தேயுதுங்க எங்க வாழ்க்கை
துவைத்தத் துணிபோல
கொடியில காயுதுங்க
எங்க பொழப்பு!
அய்யோ..கோ…!
வரிக்குதிரை
வசூல் சுமந்து போகையில
நாங்க கடன் சுமந்து
கட்டையில போறோமுங்க!
- முனைவர் கு. சிதம்பரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.