குயிலின் வரம்!
குயில்கள்
செங்கல் வாங்க
வேண்டியதில்லை!
மணல் தேடி அலைய
வேண்டியதில்லை!
சுள்ளிகள் பொறுக்க
வேண்டியதில்லை!
கூடு கட்டி
உறவுகளை அழைக்க
வேண்டியதில்லை!
முட்டைகளை
அடை காக்க
வேண்டியதில்லை!
குஞ்சுகளுக்கு
உணவு கொடுக்க
வேண்டியதில்லை!
இவ்வகைக் குயில்களின்
முதன்மைப் பணி
புணர்தலும் புணர்தல்
நிமித்தமும்தான்!
குயிலினத்தில்
ஆண் குயில்கள்
ஆண் தேனீக்களைப் போன்று
புணர்ந்தவுடன் இறந்து
போவதுமில்லை - அவை
மீண்டும் மீண்டும்
புணரும் வரம் பெற்றவை!
- முனைவர் கு. சிதம்பரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.