யாருமற்ற உலகம்!
அன்று
முக நூலால்
அக நூல்களையும்
புற நூல்களையும்
மறந்தோம்!
இன்று
பாட்டியின் பாசத்தையும்
தாத்தாவின் நேசத்தையும்
தெருமுனை விளையாட்டையும்
செயற்கை நுண்ணறிவுச்
செயலிகளால் மறந்தோம்!
எல்லாவற்றையும்
செயற்கையாய் வழங்க
செயலிகள் இருக்க
தொலைந்தே போனார்கள்
தாத்தாவும் பாட்டியும் !
அத்தை மாமாவின்
உலகம் வேற்றுலகமாய்
தாய் தந்தையின்
உலகம் தனியுலகமாய்
எங்கோ சுழல்கிறது!
யாருமற்ற உலகில்
எல்லாவற்றையும் தருகிறது
குழந்தையின் கையில்
இருக்கும் கைபேசி!
- முனைவர் கு. சிதம்பரம், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.