வேண்டாத பட்டம்
பலவர்ணப் பட்டம்
பஞ்சவர்ணக் கிளியாக
காற்றில் சிறகடிக்க
பட்டமுடன் பறப்பதாய்
கற்பனையை ஓட்டுகிறான்
பறக்கும் பட்டத்தின்
பயங்கரம் அறியாது
பாலகன் பறக்கின்றான்
பட்டமுடன் சந்தோஷத்தில்…
மனம் அள்ளும் நிறமுடன்
உயிர் கொல்லும் நூல்
பட்டத்தின் வால்
சிறுவனது கரங்களில்…
தவறுதலாய் அறுந்தாலும்
தவறி அதில் விழுந்திட்டால்
அறுத்திடுமே குரல் வளையை
எமனாகிய நூலது…
காற்றினில் படபடக்கும்
கடதாசிப் பட்டம்
காற்றை சுவாசிக்கும்
மானிடருக்கு எதிரி…
உயிரற்றப் பட்டம்
உயிர் கொல்லும் எமன்
உயிர் கொடுத்த பிள்ளை
உனக்கது வேண்டாமே…
- ஆஷிகா, கொழும்பு - 12..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.