காதல் எதுவரை?
விட்டில் பூச்சிக்கு
ஒரு நாள் காதல்
மின் விளக்கோடு…
பூமியோடு காதல்
மின்னலுக்கு
மின்னிடும் ஒரு நொடியில்…
தொட்டிலோடு
மனிதனுக்கு காதல்
குழந்தை பருவத்தில்…
கட்டிலோடு
மனிதனுக்கு காதல்
அவன் இளம் பருவத்தில்…
தாமரைக்கும்
தண்ணீருக்கும் காதல்
பகலவனின் மறைவு வரை...
கடவுளுக்கும்
பக்தனுக்கும் காதல்
கேட்டது கிடைக்கும் வரை...
சிப்பிக்கும்
முத்துக்கும் காதல்
ஆழ்கடலில்
உள்ளவரை…
சிற்பிக்கும்
கல்லுக்கும் காதல்
சிலை செதுக்கும் வரை…
உனக்கும்
எனக்கும் காதல்
உலகம் அழியும் வரை…
- ஆஷிகா, கொழும்பு 12, இலங்கை..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.