ஆசான்
கலைக் கண்ணின்
இமை போன்று
திறந்துவிட்ட
திறவுகோல்
ஆசானே!
ஏட்டு கல்வி
அகத்தில் வீற்றிட
எடுத்துரைக்கும்
தேசிகனே!
ஞானக் கோயிலின்
கருவூலத் தீபத்தின்
சுடர் பரப்பிடும்
அன்பு குருவே!
கலைக் கூடத்தில்
சீடச் செல்வங்களின்
மாதா பிதாவாம்
உபாத்தியாயனே!
சேயைப் போன்று
மனதில் கொண்டு
நறவு வித்தையை
ஊட்டிய குருவே!
பர்வதம் போன்ற
கல்விச் சிந்தையை
வழங்கி கீர்த்தி
பரப்பும் ஆசிரியரே!
சீற்றம் உருவாயினும்
புஷ்பம் போன்று
வதனம் மலர்ந்து
மணம் வீசும்
ஆசானே!
மடுவிலிருந்து எம்மை
மலைக்கு ஏற்றிடும்
ஏணி போன்ற
ஏந்தலே!
கல்வி ஆலயத்தின்
கடவுளாம் குருவை
மாணவ மணிகள் யாம்
மதித்திடுவோம்!
திங்கள் போன்று
பூதலத்தில் பவனி வர
வாழ்த்துக்கள்…
தங்கள் பணி வளர்க…
- ஆஷிகா, தெஹிவளை, இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.