அடுக்கு மாடி

அடுக்கி அடுக்கி
கட்டிய
அடுக்கு மாடி
அழகாதான்
இருக்குது…
ஆனாலும்
அடுக்க மாடிய
அண்ணாந்து
பார்க்க
கழுத்துதான்
வலிச்சது…
கழுத்து வலிச்சது
ஒரு காலம்…
இப்போ கால்களும்
நோவுது…
அடுக்கு மாடியில
ஏறி எறங்கியே….
அஞ்சாந் தட்டுக்கு
ஏறும் போது
நெஞ்சடைக்குது…
சாமான் வாங்க
கடைக்கு நடையா
நடந்து இடுப்பு
கடுக்குது….
பொழப்பு ஓட்டின
சில்லற யாவாரம்
படுத்து போச்சு
எடம் மாறினதால…
அடுக்கு மாடி
வீடு அழகா
இருந்தாலும்
குடியிருந்த
வீடு போல
கூடி வருமா?
கூடு மாறி
பறந்து போக
காக்கைகள்
இல்ல….
ஒண்ணா இருந்து
குறி சோறு
சமைச்சு
சேர்ந்து வாழும்
மனுசங்க நாங்க…
அடுக்கு மாடியில
வாழ்ந்தாலும்
மனசு நெறைய
கவலைகள்
பழச நெனைச்சு…
கழுத்து வலிச்சு
கால்கள் வலிச்சு
இப்போ…
மனசும் வலிக்குது…
பழைய வீட்ட
ஒடைச்சத
நெனைச்சா…
பரம்பரையா
வாழ்ந்த எடத்த
வெத்து நெலம்னு
வெரட்டி அனுப்பிட்டு
எடுக்கிறாங்க…
இந்த அநியாயம்
எந்த கோர்ட்டுக்கு
போகும்?
எத்தன பேர்
கெஞ்சினாங்க…
கதறினாங்க….
கண்முன்னால
பாத்து பாத்து
கட்டின வீட்ட
ஒடைச்சப்போ…
கெட்ட கனவ
மறக்கணும்…
நல்ல கனவ
நெனைக்கணும்…
பயங்கர கனவ
எப்படி மறக்குறது?
இன்னும் நெறைய
பேர் வீட்டுக்கு
துண்டு குடுத்தாச்சு
இது போல
மாடி வீட்டுக்கு
படி ஏற…
இன்னும் எத்தன
பேர் அழ
போறாங்களோ?
எத்தன குமர்
கலியாணம்
நிக்கப் போகுதோ?
தட்டி கேக்க
மனுசங்க இல்ல…
எப்ப முடியும்
இந்தக் கூத்து?
-ஆஷிகா, தெஹிவளை, இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.