பெண்
நினைக்கின்றாள்
பெற்றெடுத்தவள்
“வாழப் பிறந்தவள் என் மகள்”
வேண்டுகிறது
“தாயுள்ளம்”
அமைய வேண்டும்
“மனம் போல மாங்கல்யம்”
“கனவு”
காண்கிறது
“பூங்கோதை”
நெஞ்சம்.
“மந்திரி குமாரி”யாய்
“சக்கரவர்த்தித் திருமகளா”ய்
கட்டுகிறாள்
கோட்டை
கற்பனையில்…
வேண்டாம்
வீட்டினில்
“மாமியார்”
சாம்ராஜ்யம்….
“சுகம் எங்கே”
தேடினாலும்
கிடைத்திடுமே
பூஜ்யம்…
நினைத்திடுவாய்
“மருமகளை”
“எங்கள் வீட்டு மகாலஷ்மி”
“மக்களைப் பெற்ற மகராசி”
“தேவகி” நீ
“தாய்க்கு பின் தாரம்”
என உன் கணவர்
நினைத்திட…
“தாலிபாக்கியம்” பெற்று
“தீர்க்க சுமங்கலி” என
பெற்றோரிடம்
வரம் பெற்றிட…
“பத்தினி”யாய்
“பவித்திர(ர்)”மான
மனதை
கட்டிக் காத்திட…
“மாதர் குல மாணிக்கமா”ய்
மங்கையர் குலம்
உன்னை போற்றிட…
“மகுடம் காத்த மங்கை” போல்
குடும்பம் என்னும்
குல கோயிலை
காத்த மங்கையாய்…
தரணி
மதித்திடும்
“ராணி”யாய்
வாழ்ந்திடுவாய்…
- ஆஷிகா, தெஹிவளை, இலங்கை..
குறிப்பு: இந்தக் கவிதையானது பழம் பெரும் தென்னிந்தியத் திரைப்படங்களின் பெயர்களை வைத்து எழுதப்பட்டது. நானறியாத இந்தப் படங்களின் பெயர்களை பெற்றுக் கொள்வதற்கு உதவிய எனது தாய்க்கு நன்றிகள்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.