பெண்கள் உலகம்!
எமை மங்கையாய்
படைத்த கடவுளுக்கு…
மகளாய் பெற்ற
தாய்க்கு நன்றிகள்!
பாசத்தின் வேராம்
தாய்மை எனும்
பதவியைப் பெறுபவள்!
பெண்மையின்
மென்மையால்
வன்மையைப்
போக்குபவள்!
வீதியோர
சண்டை முதல்
நாட்டின் எல்லைப்புற
போர் வரை
வாழ்பவள்!
குலமகளாய்
குடியிருக்கும்
கூட்டின்
குலவிளக்காய்
சுடர் விடுபவள்!
மக்கள் சேவைக்காய்
சமூக சேவகியாய்
வாழ்ந்து மறைந்த
பெண்மையின் அன்னை
அன்னை தெரேசா!
ஆணுக்குப் பெண்
நிகர் என
விஞ்ஞானியாய்
விண்ணில் கரைந்த
நட்சத்திரம்
கல்பனா!
இவர்கள் மட்டுமல்ல
சுட்டெரிக்கும்
சூரியனைச்
சுற்றிக் கொண்டிருக்கும்
பூமி கூட
தாய்தான்!
- ஆஷிகா, தெஹிவளை, இலங்கை..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.