மகளிர் எட்டிய மார்ச் எட்டு
கங்கையென பாயும்
மங்கையவள் அன்பு…
வேங்கையென சீறும்
கோதையவள் கோபம்…
அன்னையென
அரவணைப்பாள்…
இடர் வந்தால்
நொடியினில் இரங்கிடுவாள்…
தமக்கையென
தங்கையென
தகுதிகள் பல
பெற்றிடுவாள்…
வாழ்வினிலே துணைவியென
வழி முழுதும் துணையாக
மனைவியென மின்னிடுவாள்…
மணம் வீசும்
தோட்டத்து ரோஜாவாய்
குலம் செழிக்க
நிறை குடமாய்
மகளென மலர்ந்திடுவாள்…
இல்லத்தில் இனிமையாக
அங்கங்கள் பல வகித்திட்டே
அகிலமெங்கும் அரசாள
அடியெடுத்து வைத்திடுவாள்…
அதிபராய் ஆசிரியராய்
வைத்தியராய் தாதியாய்
உலகமெனும் மேடையிலே
அவதாரங்கள் தனை
பூண்டே மிளர்ந்திடுவாள்…
விண்ணை அது எட்டியவள்
மகளிர் என்ற உண்மைதனை
மார்ச் அது எட்டினிலே
பெருமையுடன் நினைகூறிடுவோம்…
- ஆஷிகா, தெஹிவளை, இலங்கை..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.