வேறு!
காரணமின்றி கோபம்
வருகிறது
கர்மா என்பது
கெட்ட வார்த்தையா
உறுப்புகள் ஒவ்வொன்றாய்
செத்துக் கொண்டிருக்கிறது
செல்கள் தன்னைத் தானே
புதுப்பித்துக் கொள்ளுமோ
நேற்றைய புதிருக்கு
இன்று விடை கிடைத்தது
வாழ்க்கைப் புத்தகத்தில்
என் பக்கங்களைக் கிழிக்கிறேன்
சூதாட்டத்தில் என்னையே...
பணயம் வைக்கிறேன்
இந்த வயதிலும்
கொலுசுச் சத்தம்
திரும்பிப் பார்க்க வைக்கிறது
தென்றல் கொண்டு வரும்
சேதி என்னவோ
மாயை என்று பாடிய
சித்தரையெல்லாம்
போதையிலே பார்க்க
முடிகின்றது
மயானபூமி
சாகும் வரை
சகித்துக் கொண்டிருக்கச்
சொல்கிறது.
- ப. மதியழகன், மன்னார்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.