மரு. செந்தில்குமார் தண்டபாணி
மருத்துவர் செந்தில் குமார் இளநிலை ஓமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BHMS) பட்டமும், மாற்று முறை மருத்துவத்தில் முது நிலை பட்டமும் (MD- Alternative Medicine), உளவியலில் அறிவியல் நிறைஞர், உளவியல் தத்துவ நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார், ஆங்கிலம் மற்றும் தமிழ் மருத்துவ இதழ்களில் மருத்துவம் தொடர்பான கட்டுரைகளை எழுதி வருகிறார். இவர் பண்ருட்டி, சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் “விவேகானந்தா கிளினிக் மற்றும் உளவியல் ஆலோசனை மையம்” எனும் பெயரில் மருத்துவ ஆலோசனை மையத்தினை நடத்தி வருகிறார். நோயாளிகளுக்கு நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே மருத்துவக் கட்டுரைகளை எழுதி வருவதாகக் கூறும் இவர், இலவச மருத்துவ முகாம்கள் மற்றும் உளவியல் ஆலோசனை முகாம்கள் போன்றவைகள் மூலமாகவும் மக்களிடையே நோய்கள் குறித்த விழிப்புணர்வுகளை உருவாக்கியுள்ளார்.
மருத்துவம் - ஓமியோபதி

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.