முனைவர் நா. பிரபு

* திருவள்ளுவர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் பட்டங்களைப் பெற்றவர்.
* ‘செஞ்சி வட்டார வழக்காறுகள் - மொழியியல் ஆய்வு’ என்னும் பொருண்மையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார் அவர்களின் மேற்பார்வையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
* இவர் எழுதிய ‘நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் மரபும் மாற்றமும்’ (2015) ‘விந்தன்’ (2016) ஆகிய நூல்கள் முறையே உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது.
* மொழியியல், இலக்கணம், நாட்டுப்புறவியல் ஆகிய துறைசார்ந்த பன்னாட்டுக் கருத்தரங்கு, தேசிய கருத்தரங்குகளில் பங்குபெற்று முப்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார்.
* தமிழ்ச்சுடர், இதயக்கனி, புதுவையின் நன்முத்து, கலைமணி, ஆய்வுலக அறிஞர் ஆகிய விருதுகளைப் பெற்றவர்.
* திருவண்ணாமலை, சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் முதுகலை (ம) தமிழ் உயராய்வுத்துறையில் உதவிப் பேராசிரியராகவும் ஆய்வாளர்களுக்கு ஆய்வுநெறியாளராகவும் இருந்து வருகிறார்.
கட்டுரை - பொதுக்கட்டுரைகள்

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.