எஸ். ஷங்கர நாராயணன்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊரில் பிறந்த எஸ்.ஷங்கர நாராயணன் வேதியியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்று தொலைதொடர்புத்துறை அதிகாரியாக சென்னையில் பணியாற்றி வருகிறார். தமிழில் வெளியாகும் பல முன்னனி அச்சு இதழ்களில் இவரது சிறுகதைகள், நாவல்கள் வெளியாகி இருக்கின்றன. 35 நூல்கள் வெளியாகி இருக்கின்றது. இவரது படைப்புகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி போன்ற மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவருடைய ஒன்பது நூல்கள் பல்கலைக் கழகங்களிலும், தன்னாட்சிக் கல்லூரிகளிலும் நவீன இலக்கியப் பயில் நூல்களாக இடம் பெற்றிருக்கின்றன. தமிழக அரசு பரிசு, அக்னி அட்சர விருது, பாரத் ஸ்டேட் வங்கி விருது, திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசு, லில்லி தேவசிகாமணி விருது, அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது மற்றும் இலக்கியச் சிந்தனை, இலக்கிய வீதி பரிசுகள் போன்றவற்றை இவர் பெற்றிருக்கிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கதை - சிறுகதை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.