முனைவர் இரா. சுதமதி

திருநெல்வேலி, இராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் இவர் தமிழில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றிருக்கிறார். இவரது நெறியாளுகையில் 13 பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களையும், ஒருவர் முனைவர் பட்டத்தினையும் பெற்றிருக்கின்றனர். இவரது கட்டுரைகள் மாநில அளவிலான கருத்தரங்குகளில் 7 கட்டுரைகளும், தேசிய அளவிலான கருத்தரங்குகளில் 27 கட்டுரைகளும், பன்னாட்டுக் கருத்தரங்குகளில் 18 கட்டுரைகளும் இடம் பெற்றிருக்கின்றன. இவருடைய 6 ஆய்வுக் கட்டுரைகள் இதழ்களில் வெளியாகி இருக்கின்றன. இவரது நான்கு நூல்கள் வெளியாகி இருக்கின்றன. இவரது ‘குரங்கணி முத்துமாலையம்மன் வழிபாட்டுச் சடங்குகள்’ எனும் கட்டுரை சிறந்த நாட்டுப்புறவியல் கட்டுரையாகத் தேர்வு செய்யப்பெற்று ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை கொண்ட ‘காவ்யா அறக்கட்டளை விருது” பெற்றிருக்கிறது. மதுரை யாதவர் கல்லூரி & காரைக்குடி தமிழ் சக்தி ஆய்வு மன்றம் & சிவகாசி அரிமா சங்கம் நடத்திய ஆய்வுக் கட்டுரைகளுக்கான போட்டியில் இவரது ‘மாதவி ஏன் அஞ்சனம் எழுதவில்லை’ எனும் கட்டுரை ’தமிழ்ச்சுடர் விருது ’ பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுரை - இலக்கியம்

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.