முனைவர் த. விஜயலட்சுமி
கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் முனைவர் த. விஜயலட்சுமி, தமிழ்ப்பாடத்தில் முதுநிலைப்பட்டம் (M.A), ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil) மற்றும் முனைவர் பட்டம் (Ph.D) பெற்றவர். மேலும், இவர் ஆங்கிலம் பாடத்தில் முதுநிலைப் பட்டம் (M.A), சட்டம் பாடத்தில் இளநிலைப் பட்டம் (L.L.B) மற்றும் சில படிப்புகளில் சான்றிதழ்களையும் பெற்றிருக்கிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் 37 தேசியக் கருத்தரங்குகளிலும், 7 பன்னாட்டுக் கருத்தரங்குகளிலும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு ஆய்விதழ்களில் இவருடைய 35 ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. இவை தவிர, நான்கு நூல்களையும் எழுதி வெளியிட்டிருக்கும் இவர் சில மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதி இருக்கிறார். கேரளப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வு நெறியாளராக இருந்து வரும் இவரின் வழிகாட்டுதலில் 10 பேர் முனைவர் பட்டத்தினையும், 10 பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தினையும் பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுரை - பொதுக்கட்டுரைகள்
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.