இது சூரியனை நோக்க ஒரு உபக்கிரகம். இது பூமியை 27 இலட்சத்து, 38 ஆயிரத்து 800 மைல் தூரத்திற்கு அப்பாலிருந்து பூமியைச் சுற்றி வருகிறது. இதன் சுற்றளவு 6,800 மைல் எனவும், குறுக்களவு சுமார் 2162 மைல் எனவும் கூறுகின்றனர். இது, பூகோள வட்ட அளவில் எண்பதில் ஒரு பாகம் எனக் கணிக்கின்றனர். இது சூரியனுடைய ஒளியின் பிரதி பலத்தால் பிரகாசத்தை அடைகிறது. இது, 27 நாட்கள், 8 மணி அளவையில் தன்னைத் தான் ஒரு முறை சுற்றி வருகிறது. இது பூமியை 29 நாட்கள், 12 மணிகள், 44 விநாடிகளில் பூமியை ஒரு முறை சுற்றி வருகிறது. இவ்வாறு இது பூமியைச் சுற்றி வருதலால் சுக்ல கிருஷ்ண பட்சங்களும், மாதங்களும் ஏற்படுகின்றன. சந்திரன் பூமி, சூரியன், இம்மூன்று கிரகங்களும் ஒரு நேர் பாகையில் அமைகையில் நமக்குப் பூரணச் சந்திர நிலை தோன்றுகிறது. இது, பூமிக்குப் பின் புறமாகும் போது சந்திரவுதயமும் ஒளியும் முறையே குறைந்து 15 ஆவது தினத்தில் பூமி, சந்திரன், சூரியன் என்ற ஒரு நேர் பாகையில் அமைகையில் சந்திரன், பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் நிற்றலால் இரவில் காணப்படுவதில்லை. அத்தினமே அமாவாசை. அது போலவே பூரணச் சந்திர நிலையாகிய பௌர்ணமியும் உண்டாகிறது.
சந்திரன் பூமியை ஒரு முறை சுற்றி வருங்கதி ஒரு மாதம் எனப்படுகிறது. சந்திரன் பூமியைப் போல் உருண்டையான கோளம், இதற்கு ஒளியெல்லாம் சூரியனிடத்திலிருந்து வருகிறது. இது பூமியினும் சிறிது. 50 சந்திரர்கள் ஒன்றாகச் சேர்ந்தால் ஒரு பூமியாகும். சூரியனை விட நமக்குச் சமீபத்தில் இருக்கிறது. பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் 240,000 மைல். இது பூமியைச் சுற்றியோடும் கிரகம். பூமி சூரியனைச் சுற்றியும், சந்திரன் பூமியைச் சுற்றியும் ஓடுவதால், சில சமயங்களில் சந்திரன் நமக்கும் சூரியனுக்கும் இடையில் வரும்படி நேரிடும். இது உருண்டையான வஸ்து அல்லவா? இது பூமிக்கும், சூரியனுக்கும் நடுவில் வருகையில் அதன் மீது வெளிச்சம்படாத பாகந்தான் நமக்கு எதிரில் காணப்படுகிறது. அந்த தெரியாத நாள் அமாவாசை அ - இல்லை, மா - சந்திரன், வஸ் - இருக்கிறது. சந்திரனில்லாத நாள் அந்த இடத்திலிருந்து தன் வீதியாறா முந்திய இடத்திற்கு நேர் எதிரிலிருக்கும் இடத்திற்கு வரும் போது சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி வருகிறது. அப்போது சந்திரனது வெளிச்சமான பாகம் முழுதும் நமக்குத் தெரிகிறது. அது பௌர்ணமி. இது தேய்வதும் வளர்வதுமில்லை சூரிய வெளிச்சம் அதிகம் படுவது வளர்பிறை, சந்திரன் பூமியைச் சுற்றி வர 29 அரை நாட்கள் ஆகின்றன. இது பூமி தன்னைத் தான் சுற்றும் போது சந்திரன் தன் ஸ்தானத்தை விட்டு 12 டிகிரி நகருகிறது. ஆதலால் இதன் உதயம் பிற்படுகிறது.
சாப வரலாறு - வளர்பிறை, தேய்பிறை
1. தட்சன் பெண்கள் இருபத்து எழுவரை மணந்து அவர்களிடத்து ஒருமித்து ஆசை வைக்காது கார்த்திகை, ரோகணி இவர்களிடம் மாத்திரம் அன்பு வைத்ததால், மற்றையப் பெண்கள் தந்தையிடம் குறை கூறத் தான் தட்சன் நாடோறும் ஒவ்வொறு கலை தேயவும், சய ரோகம் அடையவும், சாபம் தந்தனன். சந்திரன் சாபம் அடைந்து சிவமூர்த்தியால் கலைகள் வளரவும், நோய் நீங்கவும் அனுக்கிரகம் அடைந்தனன். தட்ச யாகத்தில் வீரபத்திரரால் தேய்வுண்டு அநுக்கிரகம் பெற்றவன்.
2. சிவ சன்னிதானத்து சாரதர் கொணர்ந்து கொடுத்த கனியைப் பிரமன் கந்தமூர்திதிக்குக் கொடுக்க வேண்டும் எனக் கணபதி அவரைக் கோபிக்கையில் சந்திரன் விநாயகரைக் கண்டு நகைத்ததால், விநாயகரால் ஒளி இழக்கவும், சண்டாளத்துவமும் பெற்று மீண்டும் அவரால் அச்சாபம் வருடத்து ஒரு நாளில் அடைய வரம் பெற்றவன். அது ஆவணி மாதம் பூர்வ பட்ச சதுர்த்தியாம். இக்காலத்தில் சந்திரனைக் கண்டோர் சண்டாளத்துவம் அடைவர். ஆகையால் அது நீங்கக் கணபதியைப் பூசிப்போர் இட்டசித்தி பெறுவர்.
3. இச்சந்திரன் ஓஷதிகளுக்கு இறைவனாய் அநேக இராசசூயஞ் செய்த கர்ம பலத்தினால் பிரகஸ்பதியின் தேவியாகிய தாரையைப் புணர்ந்தனன். இந்தக் காரணத்தினால் தேவாசுர யுத்தம் உண்டாயிற்று. அந்த யுத்தத்தில் பிரமன் தாரையைப் பிரகஸ்பதிக்குக் கொடுத்தனன். தாரையிடம் இவனுக்குப் புதன் பிறந்தனன்.
4. 12,000 யோசனை விஸ்தாரம் உள்ள மண்டலத்தை உடையவன். இவன் கலையை முதல் பதினைந்து நாள் தேவர் அருந்துவர். மற்றவற்றைத் தென்புலத்தார் அருந்துவர். இவன் தேர்க்குச் சக்கரம் 3. குருந்த மலர் நிறம் உள்ள குதிரைகள் 10. சூரியனது சுகமுனை என்னும் கதிரால் ஒளி பெறுபவன்.
5. இராகு கேதுக்களின் வஞ்ச உருவத்தை மோகினி உருக்கொண்ட திருமாலுக்குக் காட்டினமையால் அவரால் பகைமை பெற்று விழுங்கப் பெற்றவன். அத்திரிக்கு அனுசூயையிடத்துப் பிறந்த புத்திரனாகிய சந்திரபகவான். அது அட்டமூர்த்தத்து ஒன்று. இச்சந்திரனுக்குத் தட்சப்பிரஜாபதி தன் புத்திரிகளாகிய இருபத்தேழு நட்சத்திரங்களையும் மணமுடித்துக் கொடுத்தான். இருபத்தெழுவருள் ரோகிணி பிரிய நாயகி பிருஹஸ்பதி பாரியாகிய தாரையைச் சந்திரன் சோர மார்க்கமாகக் கூடிப் பெற்ற புத்திரன் புதன். இது பற்றிப் புதன் மதிமகன் எனப்படுவன். மற்றொரு காலத்திலே சமுத்திர மதனத்துக்குக்கண் திருப்பாற்கடலிலே இச்சந்திரன் பிறந்தான். தட்சன் தன் குமாரத்திகள் இருபத்தேழு பெயர்களுள் ரோகிணியிடத்து அதிப் பிரீதியும் மற்றையரிடத்து அறப்பிரீதியும் வைத்தொழுகும் சந்திரன் மீது கோபமுடையவனாகி ஷய ரோகத்தால் வருந்துகவென்று சந்திரனைச் சபித்தான்.
சீணசந்திரன் - தேய்பிறை, அமரபட்சத்துச் சந்திரன், தேய்பிறைச் சந்திரன்.
சந்திரனாள்
திங்கட்கிழமை, கலை, திதி, விளக்கம் அன்றியும் சந்திரன் ஒரு கலை. அன்றியுஞ் சந்திரானாறு கலை தெரியுமிராசிநீவாலி: கலை தெரியாவிரா குகு: முன் பக்கத்தின் பெயர் - சுக்கிலம். அன்றியுஞ் சந்திரனாட் கூறுபாடு - கலை. மூன்று நாள் வட்டம் - பக்கம். முதற்பக்கம் - நந்தை: இரண்டாம் பக்கம் - பத்திரை: மூன்றாம் பக்கம் - சயை: நான்காம் பக்கம் - இருத்தை: ஐந்தாம் பக்கம் - பூரணை. சந்திர நாள் - கலை, சுக்கிலம், திங்கட்கிழமை, திதி, பூருவம், விளக்கம், அன்றியும் சந்திரனோடு கலை தெரியும் இரவுக்கு சினிவாலி, என்றும் கலை தெரியாத இரவுக்கு குகு என்றும் பெயர். மற்றும் இருத்தை, சயை, நத்தை, பத்திரை இவைகள் சந்திரன் கூறுபாடுகளாகும்.
சந்திரன் பெயர்
அமுதகதிரோன், அமுதகிரணன், அம்புலி, அரி, அரிச்சிகன், அலவன், அல்லோன், ஆலோன், இந்து, இமகரன், இராக்கதிர், இடை, கலை, இடை நாடி, இளஞ் சந்திரன், இனன், உடுபதி, உடுவின் வேந்தன், கலாநிதி, கலையினன், களங்கன், குபேரன், குமுத நண்பன், குரங்கி, குழவி, சந்திரன், சந்திர பகவான், சம்பவ புதன், சசி, சீதன், சுதாகரன், சோமன், தண்சுடர், தண்ணவன், தாராபதி, தானவன், திங்கள், தெவ்வு, நண்பன், நிசகரன், நிசாபதி, நிலவு, பசுங்கதிர்த்தே, பிறை, மதி, மதியம், மானேந்தி, முயலின் கூடு, விது, வெண்கதிரோன், வேந்தன்,