செவ்வாய் நவக்கிரகங்களில் ஒன்று. இது அங்காரகன், அரத்தன், அழலோன், அழல், அறிவன், ஆரல், உதிரன், குசன், குருதி, செந்தீவண்ணன், சேய், நிலமகன், பௌமன், மங்கலன், வக்கிரன் எனப்பெறும். ஒரு கிரகம், ஒரு நாள். செவ்வாய் கிழமை. ஓர் கிரகம், ஓர் நாள்.
1.அங்காரனைக் காண்க.
2.இது சூரியனுக்கு நான்காவது வட்டத்தில் நின்று சூரியனைச் சுற்றி வருகிறது. இது 14 கோடியே, 10 இலட்சம் மைல் தூரத்திற்கு அப்பாலிருந்து சூரியனைச் சுற்றி வருகிறது. இது 24 மணி, 37 நிமிடம், 23 விநாடியில் தன்னைத் தானே ஒரு தரஞ் சுற்றி வருகிறது. இது 687.9 நாட்களில் சூரியனை ஒரு முறை சுற்றி வருகிறது. இதன் குறுக்களவு 4230 மைல், இதற்கிரண்டு உபகிரகங்கள் உண்டு, இது தோற்றத்தில் சிறு நட்சத்திரம் போலக் காணப்படுகிறது. இதனைச் சோதனை செய்ததில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன என்பர். இதில் பூமியும், சமுத்திரங்களும், ஆறுகளும், கால்வாய்களும், நாகரிக வேலைப்பாடுகளாகக் காணப்படுதலால் இது நமது பூமியைப் போல் மனிதர் வசிக்கும் இடம் என்று எண்ணப்படுகிறது. இது செந்நிறம் உடையது. இந்துக்கள் இதைப் பூமி புத்ரன் என்பதற்கு இது ஒரு அத்தாட்சி. இது செந்நிறமாய்க் காணப்படுதலால் செவ்வாய் எனப்படும். இதனை அங்காரகன், குஜன் என்பர். இது சுக்ரனுக்கு அருகில் இருப்பது.
செவ்வாய் காரகம் - சகோதரம், சிறந்த போர், பூமி, பித்தரோகம், பராக்கிரமும் ஆகும்.
செவ்வாயின் பெயர்
அங்காரகன், அரத்தன், அழலோன், அழல், அரிவன், ஆரல், உதிரன், குசன், குருதி, செந்தீவண்ணன், சேய், நிலமகன், பௌமன், மங்கலன், வக்கிரன் ஆக 15 இன்னமும் உள.
பூமகன் - செவ்வாய், ஒரு நட்சத்திரம். அது நிறம் பேதித்துத் தோன்றின் நோய் கலக முதலிய உற்பாதங்கள் தோன்றுமாம். ஒரு கிரகம். இது பல நிறம்படத் தோன்றின் பூமிக்குத் தீமை விளைவிப்பது. பூமகன், பூமன், பூமிகாரகன் - செவ்வாய்.
பூமி
இது சூரியனுக்கு மூன்றாவது வட்டத்தில் உள்ள கிரகம். இது சூரியனுக்கு 9 கோடியே 20 இலட்சம் மைல் துாரத்திற்கு அப்பால் இருந்து சூரியனைச் சுற்றி வருகிறது. இதன் சுற்றளவு சுமார் 24,902 மைல் குறுக்களவு 79265 மைல், வடக்குத் தெற்குத் துருவ முனைகளின் நேரளவு 78997 மைல் நீளம். போளப்பரப்பின் விரிவு 19 கோடியே 69 லட்சத்து 40 ஆயிரம் சதுர மைல், கனம் சுமார் 600000 000000000000000 டன் எடை என்றும் கணித்திருக்கின்றனர். இப்பெருங்கோளம் 23 மணி, 56 நிமிஷம், 4.09 விநாடியில் தன்னைத் தானே ஒரு முறை சுற்றிக் கொள்கிறது. இதனால் பூமிக்கு இரவு பகல் உண்டாகிறது. இது சூரியனை 365 நாள், 5 மணி 40 வினாடியில் ஒரு தரம் சுற்றி வருகிறது. அது ஒரு வருடம். பூமி சூரியனைச் சுற்றி வரும் வட்டம் சுமார் 58 கோடியே 60 லட்சம் மைல் தூரம் இருக்கலாம் என எண்ணுகின்றனர். இது ஒளியற்றதாகத் தோன்றினும் மற்றக் கிரகங்களின் நோக்கின் ஒளியுள்ளதாகக் காணப்படும் என எண்ணுகின்றனர். இதனைச் சந்திரன் மாத்திரம் சுற்றி வருகின்றது.
இது ஓர் கிரகம். இது சூரியனை 366 நாட்களில் ஒரு தடவை சுற்றி வருகின்றது. மற்றக் கிரகங்களில் இருந்து இதைப் பார்த்தால் இது ஒளி உள்ளதாகத் தெரிகின்றதாம். இது ஒரு காலத்தில் திரவ உருவாக இருந்தது என்றும் காலக்கிரமத்தில் உஷ்ணம் தணிய இறுகி உறுதியாயிற்று என்றும் பூமி சாஸ்திர நிபுணர்கள் கூறுகின்றனர். பூமி உருண்டையாய்த் தன்னைத் தானே சுற்றுகின்றது. பூமியின் அடிப்பாகம் அதிக உஷ்ணமானது என்பதற்கு அக்னிமலைகளே சாட்சியாம். பூமியை அகழுங்கால் அந்நில வேறுபாடுகளால் அவை பூர்வத்தில் இருந்த நிலை தெரிகின்றது. இதற்குச் சந்திரன் உபக்கிரகம். சில துாரம் அகழ்ந்தால் ஒரு வித மண்ணும் அதற்கப்பால் வேறு வித மண்ணும் வருதலால் இது படிப்படியாய் வேறுபட்டது என்பது தெளிவாய் விளங்குகின்றது. பூமிசன் - செவ்வாய்.
(தொடரும்)

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.