Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை


27. தமிழ்ச் சிறுகதைகளில் கற்பனை உலகுக் கதைகள்

சி. நவீன் குமார்

யுடோபிய என்பதற்குக் ‘கற்பனை’ என்று பொருள் கொள்ளப்படுகிறது. “யுடோபிய என்பதற்குக் குறிக்கோளாக இருக்கக் கூடிய, கற்பனைக் கெட்டிய உயர்ந்த பரிபூரணநிலை, மனோராஜ்யம், குணபூரணமான கற்பனைக் கனவேயன்றி நினைவாக்க முடியாத ஒரு மனோராஜ்யம், அனுபவ சாத்தியமில்லாத (நடைமுறைக்கு உதவாத) சீர்திருத்தவாதி, மனோசிருஷ்டியான கற்பனையான மனக்கோட்டையைக் கட்டுபவர்” (லிப்கோ டிக்ஸ்னரி ப.218) என்று அகராதி விளக்கம் தருகிறது. மேற்குறிப்பிட்ட விளக்கங்களின் மூலம் யுடோபிய என்பதற்குக் கற்பனையாகப் படைக்கப்படுவது, எதார்த்தத்துக்கு முரணானது என்று கொள்ளமுடிகிறது. “கற்பனை என்பது ஒன்றைப் புதிதாகப் படைக்கும் அல்லது உருவாக்கும் ஆற்றல், இல்லாததை இருப்பதாக நினைத்துப் பார்ப்பது" (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, ப.87) என்று தற்கால தமிழ் அகராதி குறிப்பிடுகின்றது. கற்பனையான உலகைச் சிறுகதையாளர்கள் எவ்வாறு படைத்துள்ளனர் என்பதை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கம். தமிழ்ச் சிறுகதைகளில் கற்பனை உலகைப் பற்றி குறிப்பிடும் சில சிறுகதைகள் மட்டும் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

தமிழ்ச் சிறுகதைகளில் கற்பனை உலகைப் (ருவழியை) பற்றியதாக அமைந்த முதற்சிறுகதையாக அ. மாதவையாவின் ‘திரௌபதி கனவு' என்னும் சிறுகதையே. தமிழ்ச் சூழலில் பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்த முன்னவர்களுள் அ. மாதவையாவும், பாரதியாரும் முதன்மையானவர்கள் ஆவார்கள். பெண் அடிமைத்தனத்தின் சீர்கேடுகளைத் தம்கால சமூகத்தினருக்குத் தோலுரித்துக் காட்டுவதற்காகவே பெரும்பான்மையானோர் தம் படைப்புகளை அர்ப்பணித்தாலும் ‘திரௌபதி கனவு' கதையின் மூலம் பெண் விடுதலையைப் பெண்ணே கற்பனையான உலகத்தை உருவாக்க முற்படுகின்றாள்.குழந்தைப் பருவத்தில் மணமுடிக்கப்பட்டு, மறுநாளே விதவையான திரௌபதி என்ற சிறுபெண் தான் படும் கைம்மைத் துன்பங்களைக் கூறுவதாகக் கதை தொடங்குகிறது. வயோதிகரான அவள் தந்தை ஐம்பது வயதிற்கு மேல் அவளை விட சிறிய பெண்ணை மணந்து கொண்டு, மகிழ்ச்சியோடு வாழ, தான் மட்டும் ஏன் கைம்மை மேற்கொண்டு துன்புற வேண்டும். தானும் ஒருவனை மணந்து மகிழ்ச்சியாக வாழ இச்சமூகம் ஏன் அனுமதிக்க மறுக்கிறது? என்று திரௌபதி எண்ணுகிறாள். இளம் வயதிற்கே உரிய ஆசாபாசங்களை அடக்க முடியாமல் அவள் துன்புறுகிறாள்.

திரௌபதி உறங்கும் போது விசித்திரமான கனவு காண்கிறாள். பெண் ஆட்சி செய்யும் நாட்டைக் கனவில் காண்கிறாள். அந்நாட்டில் பெண்கள் தலைமை இடம் பெற்று விளங்குகின்றனர். ஆண்கள் அவர்களின் அடிமைகளாக உள்ளனர். அந்நாட்டில் பெண்கள் புருஷனை இழந்தபின் உடனடியாக அடுத்தடுத்து எத்தனை மணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். பெண் குழந்தை இல்லையென்றால் அதற்காகக் கணவனைத் தள்ளி வைத்துவிட்டு மறுமணம் செய்து கொள்ளவும் பெண்களுக்கு உரிமை உண்டு. சொத்துரிமையும் அவர்களுக்கே உண்டு. அந்நாட்டில் மனைவியை இழந்த ஆண் விதவையாகிறான். அவன் மறுமணம் செய்துகொள்ள இயலாது. சமூக சீர்திருத்தவாதிகள் சிலர் சேர்ந்து ஆண் விதவைகளுக்கு மறுமணம் செய்து வைக்க முயன்றாலும் ஊருக்குப் பயந்து அவர்கள் மறுமணத்திற்கு மறுக்கின்றனர்.

அப்பெண்கள் நாட்டில், பெண்கள் கல்விக் கற்றுச் சுதந்திரமாக வாழ்ந்தனர். ஆண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டிருந்தது. அவர்கள் அறியாமையில் மூழ்கி வீட்டிற்குள் அடைந்து கிடக்கின்றனர். அந்நாட்டில் புருஷர்கள் கற்பு பேணுதல் வேண்டும். சுமங்கலனாக வாழ நோன்பு மேற்கொள்ள வேண்டும். இப்படியாகக் கதை முடிகிறது. இக்கதையே கற்பனையுலகு பற்றிய முதல் தமிழ்ச் சிறுகதை எனலாம்.இந்தச் சமூகத்தல் பெண்கள் அனுபவிக்கும் துன்பம் அடிமைத்தனம் மோகப்பொருள் போன்ற ஆணாதிக்க போக்குகள் அப்படியே அந்நாட்டில் ஆண்கள் அனுபவிப்பதாகக் காட்டுவதுடன் இவ்வுலகில் ஆண்கள் பெறும் சமூகமதிப்பு, அதிகாரம் இவற்றை பெண்கள் அனுபவிப்பதாகவும் காட்டுகிறது. ஒரு கருத்தை, நேரடியாகக் கூறுவதைவிட அதை எதிர்மறையாகக் கூறின், சில நேரங்களில் சரியாக உணரப்படுகிறது. இந்த உத்தியின் மூலம் புதியதோர் உலகை உருவாக்கி படைப்பதன் மூலம் இவ்வுலகில் பெண்களின் துயரத்தை ஆண்கள் புரிந்து கொண்டு அவர்கள் மேம்பாட்டிற்கு வழிவகை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை முன்வைக்கிறது.

அ. மாதவையாவோடு சமகாலத்தவரான பாரதியாரும் இதைப் போன்று பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக தம் சிறுகதை படைப்பின் மூலம் குரல் கொடுக்கின்றார். இதற்குச் சான்றாக ‘மிளகாய்ப்பழ சாமியார்’ சிறுகதையை குறிப்பிடலாம்.

அவருடைய ‘காக்காய்ப் பார்லிமெண்ட்’ சிறுகதையில் காகங்களின் பார்லிமெண்டில் நடைபெறும் நிகழ்வுகளைக் கற்பனையாகப் படைத்து அன்றைய மன்னராட்சி முறையைக் கேலியும் கிண்டலும் செய்வது போல புனையப்பட்டுள்ளது. மன்னராட்சியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், அதில் பங்குள்ளவர்களும் மக்களின் வரியைத் தங்கள் தங்கள் உடைமைகளாக மாற்றுவதை காகங்கள் தங்களுக்குள் உரையாடித் தாங்களும் அப்படி வாழப் போவதாக குறப்பிடுகின்றன. மன்னராட்சியில் நாட்டில் செல்வம் ஒரு சிலருக்கு மிகுதியாகச் சேர்ந்து கொள்கிறது. மக்களிடையே ஏற்றத்தாழ்வு மிகுந்து காணப்படுகிறது.

“காகங்களின் தலைமைக் காகம், காகங்களை அழைத்து ஒரு கூட்டம் போட்டது. காகங்களின் தலைவன் தன் இனத்திடம் ரஷிய தேசத்திலிருந்து நம் தேசத்திற்கு வந்துள்ள கொக்கு என்னிடம் தங்கள் நாட்டு ஜார் சக்கரவர்த்தி கோடான கோடி சம்பளம் வாங்குவதாகவும், அனைத்துக் குடிமக்களின் சம்பளத்தை விட அவர் ஒருவரிடம் செல்வம் மிகுதியாக உள்ளது” என்று கூறுவதாகக் குறிப்பிட்டது.

“கேட்டீர்களா, காகங்களே, அந்த ருஷியா தேசத்து ஜார் சக்கரவர்த்தி இப்போது அடித்துத் துரத்தி விட்டார்களாம். அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடானு கோடியான சம்பளம். இப்போது நம்முடைய தேசத்திலே கூடத் திருவாங்கூர் மகாராஜா, மைசூர் ராஜா முதலிய ராஜாக்களுக்குக் கூட எல்லா ஜனங்களும் சேர்ந்து பெரிய பெரிய ஆஸ்தி வைத்தருக்கிறார்கள். நானோ உங்களை வீணாக ஆளுகிறேன். ஏதாவது சண்டைகள் நேரிட்டால் என்னிடம் மத்தியஸ்தம் தீர்க்க வருகிறீர்கள். நான் தொண்டைத் தண்ணீர் வற்றடித்து உங்களுக்குள்ளே மத்தயஸ்தம் பண்ணுகிறேன். ஏதேனும் ஆபத்து நேரிட்டால், அதை நீக்குவதற்கு என்னிடம் உபாயம் கண்டுபிடித்துச் சொல்லுகிறேன். இதற்கெல்லாம் சம்பளமா? சாடிக்கையா? ஓர் இழவும் கிடையாது” என்று கூறியது.

எனவே ராஜா காகம் தன் இனத்திடம் நாள்தோறும் உங்களுக்குக் கிடைக்கிற ஆகாரத்தில் ஆறிலே ஒரு பங்கு எனக்குக் கொடுத்துவிட வேண்டும். இதனைக் கொண்டு எனது குடும்பத்தார் ஆகார கஷ்டமில்லாமல் வாழ்க்கை நடத்துவார்கள் என்றது. இதன் மூலம் எனது குடும்பத்துக் காக்கைக்கும் மற்ற காகங்களுக்கும் எவ்விதமான வேறுபாடும் இல்லாத நிலைமாறி பொருளாதாரம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு வேற்றுமையைக் காண முடியும் என்கிற தன் கருத்தை கூறுகிறது.‘மூத்த காகங்களில் ஒன்றான மந்திரி காகம் இராஜா காகத்திடம் உமது வரும்படியில் மூன்றில் ஒரு பாகம் தங்களைப் போன்ற மந்திரிமார் செலவுக்குக் கொடுக்க வேண்டும் என்று தன் கோரிக்கையை முன் வைக்கிறது. இதனால் காக்காய் கூட்டத்தில் கலகம் ஏற்பட வேறொரு காகம் அனைவரையும் சமாதானப்படுத்திற்று’ (பாரதியார் வேடிக்கைக் கதைகள் ப.81) என்று முடிகிறது இச்சிறுகதை.

மனிதன் தன் சுயநலத்திற்காக உருவாக்கப்படுகின்ற ஆளுவோர், ஆளப்படுவோர் என்னும் திட்டமிட்ட சமூகத்தைக் கிண்டல் செய்வதாக இக்கதையைப் பாரதியார் படைத்துள்ளார். ஆளுவோரும் ஆளப்படுவோரும் இடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகுதியாக உருவாகி ஏற்றத் தாழ்வு மிக்க சமுதாயம் உருவாகின்றது. செல்வம் மேல்தட்டு மக்களைச் சேர்வதற்குக் கீழ்த்தட்டு மக்களின் உழைப்புச் சுரண்டல் மையமாக இருப்பதையும் வெளிப்படுத்துகிறது.

அ. முத்துலிங்கத்தின் ‘செங்கல்’ என்னும் சிறுகதையில் உருண்டையான வீடு கட்ட வேண்டும் என்று திட்டமிடுகின்றான் ஒருவன். தன்னுடைய உருண்டையான வீட்டிற்குத் தேவையான வரைபடம் போடுகிறான். அவனது குடும்பத்தார் தங்கள் தேவையான அளவில் அறைகளை ஒதுக்கி கொள்கின்றனர். உருண்டையான வீடு உருண்டோடும் எனவே அதனைத் தண்ணீரில் மிதக்க விடலாம், என்றும் பறக்கவிடலாம் என்றும் திட்டமிட்டுக் கொள்கின்றான். தண்ணீரிலோ, பறக்கவோ விட்டால் வீடு ஓரிடத்தில் நிலையாக நிற்காமல் இடம் பெயர்ந்துவிடும் என்பதற்காக அஞ்சுகின்றான். அதனால் யானைத் துருத்திகளை நாலு மூலையிலும் வைத்துக் காற்றை எழுப்பினால் அந்தப் பலத்தால் வீடு ஒரே இடத்தில் நிலையாக மிதக்கும் என்று முடிவு செய்து கொள்கிறான். வீட்டின் அறைகளுக்குச் செல்வதற்கு ஏணி வைப்பது என்ற முடிவு எடுக்கப்படுகிறது. வீட்டிற்கு வளைவாக உள்ள ஓவியம், வளைந்த முகக்கண்ணாடி, மனக்கூண்டு என்று எல்லாம் ஏற்பாடு செய்கிறான். வீடு கட்டுவதற்குத் தேவையான ஆலோசனைகளைப் பெற செய்தித்தாளில் விளம்பரம் செய்யப்படுகின்றது. கடிதம், மின் அஞ்சல், தொலைநகல், என பலவற்றிலும் தகவல்கள் வருகின்றன. உருண்டையான செங்கல்லை வாங்குவதற்கு செங்கல் வியாபாரிகளிடம் செல்லும் போது, அப்படியான செங்கல் இல்லை என்றாலும் கூட வணிகரீதியில் அவர்கள் பேசுவதைக் கேலியாக இச்சிறுகதை குறிப்பிடுகின்றது.

“ஒரு கடைக்காரன் என்னுடைய பெயர், விலாசம், தொலைபேசி எண் எல்லாவற்றையும் குறித்து வைத்துக்கொண்டான். அவனுடைய முதற் பார்வையிலேயே வெறுப்பு முழுச் சம்மதத்துடன் வெளிவந்தது. செங்கல் வந்ததும் எனக்கு அறிவிப்பதாக உறுதி கூறினான். அவனுடைய வாக்கில் எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.


நான் களைத்து இணைத்து வீடு திம்பும் சமயம் இன்னொரு கடை எனக்கு நம்பிக்கை தரும் விதமாக நடந்து கொண்டது. அந்தக் கடைக்காரர் என்னுடைய கேள்வியில் ஆச்சரியம் காட்டவில்லை. அத்துடன் அவர் ஆம், இல்லை என்றும் பதில் கூறவில்லை. மாறாக எத்தனை கல் வேண்டும்? என்று விசாரித்தார். அதனுடைய விட்டம், பருமன், நிறம், பருவம் போன்ற நுணுக்கமான விபரங்களைக் கேட்டு, கம்ப்யூட்டரில் பதிந்து கொண்டார்” (அ.முத்துலிங்கம் கதைகள் பக்.536, 537)

யுவன் சந்திரசேகரின் “மீகாமரே... மீகாமரே" என்னும் சிறுகதையும் கற்பனையுலகச் சிறுகதையாகப் படைக்கப்பட்டுள்ளது. கடலில் பாய்மரப்படகில் பயணம் செய்கிறான் ஒருவன். காற்றின் திசை நோக்கி செல்லும் தன்மை கொண்ட பாய்மரப் படகு கடலில் ஏற்பட்ட புயல் சீற்றத்தால் சமுத்திரத்தின் ஒரு சிறு நிலபரப்பிற்கு அப்பாய்மரப்படகு சென்று விடுகின்றது. அத்தீவு பகலில் ஓசை இல்லாத தன்மையுடனும் இரவில் பேரோசை எழுப்பக் கூடியதாகவும் இருக்கிறது. இரவில் ஓசை எழும்பும் நேரங்களில் கடலில் நீர்த்திவலைகளில் மிதந்தபடி பெண்ணொருத்தி தவழ்ந்து இவன் அருகில் வருகின்றாள். மார்பகத்திற்கு மேல்பகுதி பெண் உடலாகவும், கீழ் பகுதி மீனின் உடல் போலவும் இருக்கிறாள். ஓர் இரவு பொழுதில் அவள் இவனை ‘மீகாமரே’ என்று பெயரிட்டு அழைக்கின்றாள். அவள் பேசும் மொழி இவனுக்கு முன்பின் அறிந்தது இல்லையானாலும் புரிகிறது. அவளின் மேற்புற பெண் உடல் கவர்ச்சியாக இருந்தாலும் அவளும் இவனை விரும்பியதாலும் இருவரும் இரவு பொழுதுகளில் கணவன் மனைவியாக வாழ்கின்றனர். அவளுக்கு இவன் ‘அஷோபா’ என்று பெயரிடுகிறான். அர்த்தம் புரியாத அந்தப் பெயரை அவள் ஏற்றுக் கொள்கிறாள். இருவரும் அந்தத் தீவிற்குக் ‘கனவுக் கோளம்’ என்று பெயரிடுகின்றனர். சில நாட்கள் கழித்துப் புயலில் சிக்கித் தொலைந்து போன அவளை அழைத்துச் செல்லப் பாய்மரக்கப்பலில் கடலில் நண்பர்கள் வருகின்றனர். இதனை உணர்ந்து கொண்ட பெண் அவனை விட்டுப் பிரிய போகிறோம் என்பதால் வருந்துகின்றாள். இருவரும் உரையாடும் போது அவள் கடல் பரப்பில் என்னென்ன நடக்கும், சமுத்திரத்தில் காணப்படும் ஒவ்வொரு தீவின் தன்மைகளைக் கூறுகிறாள். “சொல்லாத சில தகவல்களை அஷோபா எனக்கு எடுத்துரைத்தாள். நாங்கள் இருந்த கனவுக்கோளம் பகலில் நிசப்தத்தை ஆடையாய்ப் பூணுவதும், அஷோபாவும் நானும் சந்திக்கும் இரவுகளில் ஓசையின் ரீங்காரத்தைப் போர்த்திக் கொள்வதும் பற்றி அவளிடம் கேட்ட போது அவள் சொன்ன சங்கதிகளின் பிரகாரம் ஒற்றைக் கூரையிட்ட சிறு குடிசை என்பது போன்ற சித்தரம் உண்டானது எனக்குள் அவள் சொன்னதைக் கேளுங்கள்.


“சில நிலப்பரப்புகளில் இதற்கு விரோதமாய் இருக்குமாம், பகற்பொழுதுகள் பேரிரைச்சலுடனும், இரவுகள் மௌனமாகவும் இருப்பவை. சிலவற்றில் காற்று வெண்மேகக் கூட்டம் போல கண்ணுக்குத் தென்படுமாம். தீண்டின மாத்திரத்தில் மரணத்தை வழங்கும் கனிகளும் உணவாகப் பயன்படும் பாம்புகளும் உள்ள நிலவெளிகளும் உண்டாம். திராட்சைத் தோட்டங்களின் மத்தியில் ஒயின் ஊறும் கிணறுகள் உள்ள பிரதேசம் ஒன்றுக்குத் தான் சென்றதுண்டு என்று தெரிவித்தாள். மனிதர் வசிக்கும் பகுதிகள் பெரும்பாலும் மனிதர்களைப் பிரதிபலிப்பதாகவும், மனிதர் இல்லாத பகுதகளில் ஆமைகள் சுதந்திரமாய் ஓடித் திரியும் என்றும் சொன்னாள் (ஏற்கனவே ப.4). மீகாமரை விட்டு பிரிவது என்பது பெருந்துன்பமாக அவள் கருதுகிறாள். இறுதியில் அவள் உடல் நீலம் பரிக்க உயிர் விடுகின்றாள் என்று இச்சிறுகதை முடிகிறது. மேலும் யுவன் சந்திரசேகரின் மூன்றாம் ஜாமங்கள் கொண்ட இரவு, நூற்றுச் சொச்சம் நண்பர்கள், சோம்பேறியின் நாட்குறிப்பு, சுழல் நாணயம், தாயம்மாப் பாட்டியின் நாற்பத்தோரு கதைகள், ஒளிவிலகல் போன்றவை கற்பனை உலகம் சார்ந்த கதைகளாக கருதலாம்.

ஆய்வு முடிவுகள்

1. யுடோபிய என்னும் உத்தி உள்ளடக்கம் சார்ந்த ஒரு உத்தியாக கொள்ளவேண்டும்.

2. கற்பனை உலகு சிறுகதைகள் எதார்த்த உலகில் நிகழும் நிகழ்வுகளைக் கிண்டல் செய்வதற்காக, கற்பனையான ஒரு கதையை கதாசிரியன் படைக்கிறான்.

3. ஒரு நிகழ்வை நேரடியாகக் கூறாமல், அதனையே மாற்றாகக் கூறும் போது ஒரு கருத்தை வலியுறுத்த இந்த உத்தியைப் பயன்படுத்தும் போது படைப்பு சிறக்க மேலும் வலு சேர்க்கிறது.

துணைநூற்பட்டியல்

1. லிப்கோ டிக்ஸ்னரி, சிறுமலர், தி.நகர், சென்னை - 17, முதற்பதிப்பு - 2004.

2. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, காஜாலை நகர், திருவான்மியூர் சென்னை-41, முதற்பதிப்பு - 2001.

3. பாரதியார், பாரதியார் வேடிக்கைக் கதைகள், குமரன் பதிப்பகம், தியாகராய நகர் சென்னை - 17, முதற்பதிப்பு - 2001.

4. அ.முத்துலிங்கம், அ.முத்துலிங்கம் கதைகள், தமிழினி, 342. டி.டி.கே. சாலை, சென்னை-14, முதற்பதிப்பு - 2003.

5. யுவன் சந்திரசேகர், உயிர்மை பதிப்பகம், சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-600 018.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s2/p27.html


  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License