Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை


29. கி. ராஜநாராயணனின் கோமதி சிறுகதையில் திருநங்கை

செ. புனிதவதி

முன்னுரை

தமிழ்ச் சிறுகதை மரபு கதை சொல்லுதல் என்ற நிலையில் இருந்து தொடங்குகின்றது. பண்டைய தமிழ் இதிகாசங்களிலும் புராணங்களிலும் எண்ணிலடங்காச் சிறுகதைகள் இடம்பெறுகின்றன. 19ஆம் நூற்றாண்டில் மேலை நாட்டில் தோன்றி வளர்ந்து இன்று உலகெங்கிலும் ஏற்கப்பட்ட இலக்கிய வகையாகத் திகழ்ந்தது. அதனைத் தமிழ் இலக்கியத்திற்குக் கொண்டு வந்த பெருமை வ. வே. சு. ஐயர் அவர்களைச் சாரும் என்பதை நாம் அறிவோம்.

சமகால வாழ்வியல் சிக்கல்களையும் தனிமனித உணர்வுகளையும் வாழ்க்கை அனுபவங்களையும் சுருக்கமாகக் கூறுவதற்கு ஏற்றதொரு வடிவமாகச் சிறுகதை காணப்பட்டது. காலப்போக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறுகதை புதிய சிந்தனைகளையும் கருத்துகளையும் வெளிக்கொணர்ந்து மிகுந்த செல்வாக்கு பெற்றது. தொடக்கக்காலச் சிறுகதை ஆசிரியர்களாகப் பாரதியார், வ.வே.சு. ஐயர், மாதவய்யா முதலானவர்களைக் கூறலாம். பின்பு சிறுகதை உலகில் புதுமைப்பித்தன், கு.ப.ரா., மௌனி, லா.ச.ரா., ஜெயகாந்தன், கி. ராஜநாராயணன் முதலியோர் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்துக் கொண்டவர்கள். இவர்கள் பெரும்பாலும் சமூகச் சிக்கல்களை மையமாகக் கொண்டு சிறுகதைகளைப் படைத்துள்ளனர். அதில் ஆண். பெண் இருவரால் ஒதுக்கப்பட்ட, வேடிக்கைப் பொருளாய் மூன்றாம் பாலினராய்த் திகழும் திருநங்கையரைப் பற்றிக் கி. ராஜநாராயணன் கோமதி எனும் சிறுகதையில் சமையல் வேலைக்காக வந்த திருநங்கையின் வாழ்வியலையும் மன உணர்வினையும் விளம்பியுள்ளார். இவற்றினை மையமாக வைத்துத் தமிழ் இலக்கியத்தில் திருநங்கையர், அவர்களின் பிறப்பு பற்றிய செய்திகள், இன்றைய சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதற்கான தீர்வுகள் கூறி விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.திருநங்கை விளக்கம்

மனித சமூகம் ஆண், பெண் என்ற இரு பாலினத்தவர்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக மூன்றாம் பாலினத்தவர் (Trans Gender) என்று திருநங்கையரை அழைப்பதை நாம் பார்க்கின்றோம். திருநங்கையர் எனப்படுபவர்கள் பிறப்புறுப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டுப் பின்னர்த் தம்மைப் பெண்ணாக உணர்ந்து பெண்களாகவே வாழ முற்படுவோர்களைக் குறிக்கும்.

திருநங்கையர் நாள்

திருநங்கையர்களின் சமூகப் பாதுகாப்பு கருதியும் அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில் ஏப்ரல் 15, 2008ஆம் ஆண்டு தமிழக அரசு திருநங்கைகளுக்குத் தனி நல வாரியம் அமைத்தது. இந்த நலவாரியம் அமைக்கப்பட்ட அந்த நாளைத் திருநங்கையர் நாளாக ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடத் தமிழக அரசு மார்ச் 5, 2011 அன்று ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழ் இலக்கியத்தில் திருநங்கையர்

இலக்கியங்களில் எத்தனையோ தமிழ்ச் சமூகங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழர்களில் தமிழ்ச் சமூகங்களில் ஒருவராக வாழ்ந்து வருகின்ற திருநங்கைகள் அடையாளம் காணப்படாதவர்களாக இருந்து வருகின்றனர். தமிழ் இலக்கியங்களில் இவர்களுடைய வரலாற்றையும் வாழ்வியலையும் அடையாளம் காணும் நோக்கில் இலக்கியம், இலக்கணம், காப்பியம், புராணம், நிகண்டு போன்றவை திருநங்கை குறித்துத் தங்களுடைய பதிவுகளை வெளிப்படுத்தியுள்ளன. தொல்காப்பியம்

“பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்” (தொல்-சொல்:4)

என்று கூறுகிறது. திவாகர நிகண்டு திருநங்கையின் தோற்றம் நடை உடை பாவனை பற்றித் விரிவான விளக்கம் கொடுத்துள்ளது.

“பேடி இலக்கணம் பேசுங்கலை
நச்சுப் பேசலும் நல்லுரை ஓர்தலும்”

பெண்டகன் - பெண் தன்மை மிக்கவன். பேடி - ஆண் தன்மையற்ற பெண்ணுருவம் மிக்கவன். நபுஞ்சகன் - பெண், ஆண் அல்லாதது. கண்டகன் - பால் உணர்வற்றவன் என்று சூடாமணி நிகண்டு திருநங்கை குறித்து விளக்கம் தருகிறது. ஆண் தன்மை மிக்க பெண்ணைப் ‘பேடன்’ என்ற சொல்லால் பிங்கல நிகண்டு கூறுகிறது. மகாபாரதத்தில் ‘சிகண்டி’ என்றொரு கதாபாத்திரம் திருநங்கையாகக் காணப்படுகிறது.பிறப்பு பற்றிய செய்திகள்

திருநங்கையர் வடமாநிலங்களில் தெய்வத்தின் பிறப்பாக நம்பப்படுகின்றனர். தமிழ்நாட்டில் அவர்களின் பிறப்பு இழிவாகப் பார்க்கப்படுகிறது. அறிவியலாளர்களின் கருத்துப்படி குரோமோசோம்கள் கூடுதல் குறைதலினால் பால் ரீதியான மாற்றங்கள் மரபணு அடிப்படையில் இயற்கையாகவே பிறக்கின்றனர் என்று கூறுகிறார்கள். மானுடவியலாளர்கள் சமூகச் சூழலால்தான் திருநங்கைகள் உருவாக்கப்படுவதாகக் கூறுகின்றனர். இவ்வாறு காணப்படச் சித்தர்களில் முன்னோடியான திருமூலர்

“குழவியும் ஆணாம் வலத்ததுவாகில்
குழவியும் பெண்ணாம் இடத்ததுவாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கும்
குழவி அலியாதம் கொண்ட கால் ஒக்கிலே...” (திருமந்திரம் - 402)

திருநங்கையின் பிறப்பு பற்றி அறிந்து கூறியுள்ளார்.

கோமதி சிறுகதையில் திருநங்கை

கி. ராஜநாராயணனால் எழுதப்பட்ட இச்சிறுகதை திருநங்கையை மையமிட்டுப் பேசக்கூடியது. பால்மாறுபாடு கலாச்சாரத் தளத்தில் ஏற்படுத்தும் உடைப்பு என்பதாக முன்வைக்கப்படுகிறது. இதன் தலைப்பே இவர்களின் சிக்கலை உணர்த்துவதாக அமைந்துள்ளது. கோமதி என்பது பெண்பாலைக் குறிக்கும். ஆனால் இப்பெயரைப் பெற்று வரும் பாத்திரம் ஆணுமல்லாத பெண்ணுமல்லாத திருநங்கையைக் குறித்து வருகின்றது. இச்சிறுகதையில் திருநங்கைகள் மாற்றுப் பாலினப் பண்புகளை உள்வாங்கிக்கொண்டு தங்களின் செயல்களை எவ்வாறு மாற்றிக் கொள்கின்றனர் என்பதையும் அதனால் சமூக அமைப்பிலும் குடும்ப அமைப்பிலும் அனுபவிக்கின்ற சிக்கல்கள் என்னென்ன என்பதையும் மிகவும் இயல்பாகக் கி. ராஜநாராயணன் பதிவு செய்துள்ளார்.தொழில்முறை

சமூகத்தில் பல்வேறு நிலைகளில் ஒதுக்கப்பட்டவர்களாகவும் கேலிப் பொருளாகவும் திருநங்கைகள் காணப்படுகின்றனர். அதனால் வாழ வழியில்லாமல் தவறான தொழில்களில் ஈடுபடுகின்றனர். அத்தொழிலில் இன்று பெரும்பாலான திருநங்கைள் ஈடுபட்டு வருவதற்கு வறுமையும் ஒரு காரணமாகும். ஒப்பாரி பாடுதல், சமையல் செய்தல், கடைகளுக்குச் சென்று கைதட்டிப் பணம் வாங்குதல் போன்ற வேலைகளைச் செய்து வருகின்றனர். சில திருநங்கைகள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளனர். இவர்களது இந்நிலையினைக் கி. ராஜநாராயணன் விளக்கியுள்ளார்.

“இப்பேர்ப்பட்ட ஒரு இடத்துக்குத்தான் கோமதி சமையல் உத்தியோகத்துக்குப் பெட்டி படுக்கையுடன் போய்ச் சேர்ந்தான். பக்கத்து வீட்டுப் பெண்கள் இவனை ஓர் வேடிக்கைப் பொருளாகப் பார்க்க வந்தனர். அன்று எல்லாருக்கும் பெரிய விருந்து நடந்தது. அவன் படைத்த உணவை ருசி பார்த்த பின்தான் அப்பெண்களுக்கு அவன் மீதுள்ள இளப்பம் ஓரளவு நீங்கியது.

சாப்பிட்டு முடித்த ரகுபதி நாயக்கர் இந்தப் புதுச் சமையல்காரனைப் பார்க்க வேண்டுமென்று சொல்லி வரவழைத்தார். கோமதி அஞ்சி ஒரு பூனைபோல் அவர் எதிரே போய் நின்றான். இவனைப் பார்த்ததும் ஏளனமாகக் கடகடவென்று சிரிக்கத் தொடங்கிவிட்டார். அவனுடைய அச்சத்தைக் கண்டு ரகுபதி நாயக்கர் இன்னும் உரக்கச் சிரித்தார். இவனா? என்பதைப்போல். சமையல் தொழிலில் ஈடுபட்ட கோமதியின் வாழ்வியலையும் அவனின் மன உணர்வுகளையும் கி.ராஜநாராயணன் கூறியுள்ளார். தற்காலத்தில் இறப்பு வீடுகளில் ஒப்பாரிப் பாடல்கள் பாடுவதற்கு அவர்களைப் பயன்படுத்துவதை ஆசிரியர் கூறியுள்ளார்.

தன் இனிமையான பெண்குரலில் சோகம் ததும்ப ஓர் ஒப்பாரியைப் பாடினான் கோமதி. உணர்ச்சியோடு விதவைக் கோலம் பூண்டுவிட்ட ஒரு பெண் சொல்லுவதாக

“கருப்பும் சிகப்புமாய் நான்
கலந்துடுத்தும் நாளையிலே
சிகப்பும் கருப்புமாய் நான்
சேர்ந்துடுத்தும் நாளையிலே”

பாடியதைக் கேட்டவுடன் அங்கிருந்த பெண்கள் அழுது விட்டனர். அதோடு நாடோடிப் பாடல் ஒன்றையும் பாடினான்.

“சோளம் இடிக்கையிலே சொன்னையடி ஒரு வார்த்தை ஐயோ
கையை பிடிக்காதீங்க என் கருவளைவி சேதமாகும்”

அப்பெண்கள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சிரித்தனர். திருநங்கைகளின் வாழ்வியல் மிகவும் நுட்பமானதென்றும் பெண்களின் ஆதரவுதான் அவர்களுக்கு மனரீதியான ஊக்கத்தைத் தரும் என்று கி.ராஜநாராயணன் கூறியிருக்கிறார்.


கோமதியின் பரிதாப நிலை

திருநங்கைகளின் பிறப்பே சிக்கல் கொண்டது. மனிதப் பிறப்புகளில் சமூகம் ஏற்றுக்கொள்ளாத பிறப்பு. மனித இனத்தில் ஒருவராகக்கூட இவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. பிறப்பு ஒன்றாக இருக்கப் பாலினப் பண்புகள் வேறொன்றாகக் கொண்டு பிறப்பது இயற்கையின் விளைவு. இதனைப் புரிந்து கொள்ளாமல் காலங்காலமாக ஒதுக்கியே வருவது இச்சமூகம் இழைத்து வரும் பெருங்கொடுமையாகும்.

“கோமதிக்கு உடம்பெல்லாம் வேர்த்துப் படபடவென்று தம்மைச் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு கண்ணாடியின் முன் போய் நின்று தன்னைச் சரிபடுத்திக் கொண்டு பால் டம்ளரை ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு மாடியை நோக்கி மணப்பெண் போகிறதைப் போல் ஏறிச் சென்றான். கோமதி... கோமதி... உள்ளே வாயேன் என்று சுலோ கூப்பிட்டாள். ‘யார் கோமதி’ என்று கேட்டான் ரகு. அது ‘நான் அப்போ சொல்லவில்லையா?’ சமையலுக்கு ஒரு புது ஆள் என்று ‘ஓஹோ’, ‘யாரோ பெண்பிள்ளை போலிருக்கிறது’ என்று எண்ணிக்கொண்டு இருந்த போது “அண்ணா பாலை எடுத்துக்கொள்” ரகு திரும்பிப் பார்த்தான். முகத்தைச் சுழித்தான். இந்த முகத்தை அவனால் தாங்க முடியவில்லை. சுலோவை இதெல்லாம் என்ன என்ற முறையில் கோபத்தோடு பார்த்தான். கோமதி என்ற பெயரை வைத்துக்கொண்டு திருநங்கையாக வருவதைப் பார்த்ததும் ரகு அருவெறுப்பு கொள்கிறான். சமூகத்தில் திருநங்கையர் (அரவாணிகள்) இழிவாகவும் நகைச்சுவைப் பொருளாகவும் பார்க்கப்படுவதை ரகு கதாப்பாத்திரத்தின் வழியாகக் கி. ராஜநாராயணன் உணர்த்துகிறார்.

இன்றைய சூழலில் திருநங்கையர்

தனிமையும் தீண்டாமையும் தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுச் சகித்து வாழ்ந்து கொண்டிருக்கும் இழிநிலை திருநங்கையரின் வாழ்வில் எப்போதும் தொடர்கிறது.

சமூக மதிப்பு எதுவுமில்லாமல் எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் கேளிக்கை நடனம் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கையின் பொருள் தெரியாமல் அவலத்தில் வாழ்ந்து வருபவர்கள், தங்களுக்கென்று வாழ இடமில்லாமல் தங்களது உரிமைகளைப் பெற முடியாமல் இருக்கின்றனர். இது ஒருபுறமிருக்கத் தற்போது பெரும்பாலான திருநங்கைகள் சாதிப்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.

ஊடகங்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், பல நிறுவனங்களில் பணிபுரிபவராகவும் காணப்படுகின்றனர். தற்பொழுது அரசு அவர்களுக்கென்று கல்வி, வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் தனி இட ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களின் வாழ்வு சக மனிதர்கள் போலக் காணப்பட வேண்டுமென்று அக்கறை கொண்டு திகழ்கின்றது.

கல்வி, வேலைவாய்ப்பு விண்ணப்பப் படிவங்களில் மூன்றாம் பாலினம் ஆண், பெண் மூன்றாம் பாலினம் என்று குறிப்பிடப்படுகின்றது. இதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படுகிறதை அறிய முடிகின்றது. அண்மையில் சேலத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி என்ற திருநங்கை தமிழகத்தில் காவல்துறையில் பெண் உதவி ஆய்வாளராகத் தேர்வாகியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.


திருநங்கையர்களின் வாழ்வு மேம்படுவதற்கான தீர்வுகள்

1. தங்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டுப் புறக்கணிக்கப்படுகிற போதுதான் திருநங்கையர் இத்தகைய வாழ்வியல் துன்பங்களை எதிர்கொள்ளப் பிச்சை எடுக்கவும் பாலியல் தொழில் செய்யவும் துணிந்து விடுகின்றனர். இதற்குச் சமூகத்தின் புறக்கணிப்பு முக்கியக் காரணமாகும். ஆகவே அவர்களுக்கான வாய்ப்புகளைத் தர அரசு முன்வர வேண்டும்.

2. வேற்றுக் கிரகத்து மனிதனைப் போல் எண்ணாமல் அவர்களின் சராசரி மனிதன்தான் என்ற நிலையினைச் சமூகத்திற்கு உணர்த்தும் விதமாகக் குறும்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி போன்றவற்றின் மூலம் அவர்களைப் பற்றிய நல்ல கருத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

3. பொது இடங்களில் திருநங்கைகள் இழிவாக நடத்தப்படுகின்றனர். இதனைத் தடுக்க வழிமுறை செய்யப்பட வேண்டும். அவர்களும் மனிதர்கள்தான். தகாத வார்த்தை கூறி அவர்களின் மனத்தைப் புண்படுத்துகின்றனர். இது குறைக்கப்பட வேண்டும்.

4. உணவு, இடம் பிழைக்க வழியின்றி பல திருநங்கைகள் பாலியல் தொழில் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். கனடா நாட்டில் சட்டப்படி உரிமை பெற்று வாழ்வது போல் நமது நாட்டிலும் செய்யப்பட வேண்டும். 5. அலி, ஒம்பது, பேடி, உஸ் என்ற சொற்களைவிட்டு ‘Sister’, ‘அக்கா’ என்றுகூட அழைக்கலாம். அவ்வாறு அழைப்பதையே அவர்கள் விரும்புகின்றனர். எனவே அப்படி அழைத்தால் நன்றாக இருக்கும்.

முடிவுரை

தற்பொழுது திருநங்கைகள் வெளியுலக அறிவும் கல்வியறிவும் பெற்றே காணப்படுகின்றனர். குறிப்பிட்ட அளவினர் மட்டுமே பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்குப் பல்வேறு வழியிலும் ஆதரவுக் கரங்கள் நீட்டுவதால் விழிப்புணர்வு ஏற்பட்டு மக்களுக்குச் சமமாகத் தங்களது வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்து வருகின்றனர். அவர்களுக்கென்று தனி வலைத்தளங்கள், நிறுவனங்களில் முன்னுரிமை, ஊடகங்கள் போன்ற நிலைகளில் தங்களை முன்னிறுத்திக் கொண்டுள்ளனர். தங்களுக்கென்று தேர்தல் அடையாள அட்டை குடும்ப அட்டை போன்றவற்றைப் பெற்றுப் பிறரைப் போன்று நாமும் சமுதாயத்தில் ஓர் இடத்தைப் பெற வேண்டும் என்ற அவர்களின் எண்ணமும் உணர்வும் வரவேற்கத்தக்கன. நம்மில் ஒருவராக மனித நேய உணர்வுடன் அவர்களைப் பார்க்க வேண்டும். வேடிக்கைப் பொருளல்லர் அரவாணிகள். உயிருள்ள மனிதர்கள்.

பார்வை நூல்கள்

1. 21 ஆம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகள் ஆய்வு

2. தமிழ் இலக்கியத்தில் அரவாணிகள்

3. மறுவாசிப்பில் மரபிலக்கியம்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s2/p29.html


  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License