இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை


31.முனைவர் கோ. மீனாவின் சிறுகதைகளில் பெண்ணியம்

முனைவர் க. யோகாம்பாள்

இன்றைக்கு உள்ள இலக்கியப் பிரிவுகளில் சிறந்து செழித்து வளர்ந்து செல்வாக்கு பெற்றுத் திகழ்வது சிறுகதைகள்தான் என்று கூறலாம். ஐரோப்பியர் காலத்தில்தான் சிறுகதை வடிவம் பெற்றது. பின் எட்கர் ஆலன்போ, கோகோல் ஓ ஹென்றி செட்விக் போன்ற புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர்கள் சிறுகதைகளை எழுதியும் அதற்குச் சில இலக்கணங்களையும் வகுத்தனர். முதன்முதலில் தமிழில் சிறுகதைக்கு உருவும் உயிரும் கொடுத்தவர் வ.வே.சு.ஐயர். அவரே சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படுவர். அவருடைய குளத்தங்கரை அரசமரம் 1910ல் ‘விவேக போதணி’ என்னும் இதழில் வெளிவந்தது. அதன் பிறகு, இக்கதை தம் மனைவி பாக்கியலட்சுமி அம்மாள் பெயரில் 1917 ல் ‘மங்கையர்க்கரசியின் காதல்’ என்னும் சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்தது. இப்படி முந்தைய தலைமுறை தொடங்கி இன்றைய தலைமுறை வரை ஒரு நூற்றாண்டின் பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சிறுகதைகளுள், தரமான சிறுகதைகளாக முனைவர் கோ. மீனா அம்மா அவர்களின் இரண்டு சிறுகதைகளை மட்டும் எடுத்துக் கொண்டு ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆசிரியர் குறிப்பு

முனைவர் கோ. மீனா அவர்கள் தம் அறிவியல் தொழில்நுட்ப அறிவைப் போலவே இலக்கியப் படைப்பாற்றலையும் சமூக மேம்பாட்டுக்காக பயன்படுத்தியிருக்கிறார். சிறுகதைக்கு ஏதேனும் ஒரு நிகழ்வு ஒரு பொழுது, ஒரு சில கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு குறைந்த நேரத்தில் படித்து முடிக்கப்படும் வகையில் படைக்கப்படுவது. கதையின் தொடக்கமும் முடிவும் குதிரைப் பந்தயம் போல் இருக்க வேண்டும் என்றெல்லாம் வரையறை கூறுவர். அதன்படியே ‘தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்’, ‘சுகந்தி டீச்சர்’ இரண்டு சிறுகதைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகப் பெண்மையின் மென்மை திண்மையைச் சித்தரிக்கின்றன. குறிப்பாகப் பெண்கள் - வாழ்வில் நம்பிக்கையும் நல்லுணர்வும் கொள்ளத்தக்க கருத்துக்களை முதன்மைப்படுத்தும் நோக்கில் படைக்கப்பட்டுள்ளன.தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

‘தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்’ என்ற சிறுகதையில், ஜெயா ஒரு உலகப் புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனத்தின் மேலாளர். மாதச் சம்பளமே ரூபாய் எண்பதாயிரம், இந்தப் பதவிக்குப் பின்னால் இருப்பது அவளுடைய சலிக்காத உழைப்பு, முயற்சி, தன்னம்பிக்கை இவை மூன்றும்தான் அவளுடைய வேதம். ஜெயலெட்சுமி என்ற ஜெயா பிறந்த சில மாதத்திலேயே போலியோ அட்டாக் காரணமாகக் காலின் அளவு சற்று குறைந்துவிட்டது. விந்தி விந்தித்தான் நடக்க முடியும். விளைவு... அவளிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியது. ஆனால் படிப்பில் படுசுட்டி. சொந்த ஊர் திருச்சி. தந்தை நடராஜன் ரிடையர்டு பள்ளி வாத்தியார். நடுத்தரக் குடும்பத்தினர்.

எல்லோரும் படிப்பு படிப்பு படிப்புதான். படிப்பு மட்டுமே அவளுடைய சிந்தனையாக இருக்கும். கணினிப் படிப்பில் முதல் மாணவியாக வரப் பெற்று, தாழ்வு மனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை என்ற வேர் நன்றாக வளர்ந்தது. தானும் சமுதாயத்தில் நல்ல நிலையில் உயர்ந்து, வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை அதிகப்படுத்தியது. இந்நிலையில் ஜெயாவிற்குக் கல்யாணம் செய்துவிட அம்மா அப்பா முடிவெடுத்தார்கள். மாப்பிள்ளை ராதாகிருஷ்ணன் இன்ஜினியர், வரதட்சணை, சீர் என்று எதுவும் வேண்டாம் என்று புரோக்கர் மூலம் தெரிந்து கொண்டு மகிழ்ந்தனர்.

பெண் பார்க்கும் நாளும் வந்தது. ஜெயாவும் பல கற்பனைகளோடு காத்திருந்தாள். மாப்பிள்ளை வீட்டாரும் வந்தனர். பெண்ணைப் பார்க்க வரச் சொல்லுங்க என்று வந்தவர்களில் ஒருவர் சொல்ல, பட்டுப்புடவை சரசரக்க பலவித ஆசைகளுடனும், கனவுகளுடனும், வெட்கம் கலந்த புன்னகையுடன் காப்பி ட்ரேயை கையில் ஏந்தி வந்தாள். அனைவரின் கண்களும் ஜெயாவின் காலையே மொய்த்திருந்தன. உங்க குடும்பத்தை எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, ஆனா, பொண்ணுக்கு கால் ஊனம். நடக்க வராதுன்னு எதிர்பார்க்கல என் பையன் நாலு இடத்துக்கு பொண்டாட்டியுடன் போகும் நேரத்தில் அவனுக்கு அவமரியாதையாக இருக்கும். அதனால் நீங்க தப்பா நினைக்கலேன்னா, உங்க இரண்டாவது பெண் ராஜலெட்சுமியை என் பையனுக்கு பிடித்துள்ளது. சிம்பிளா கோயில்ல கல்யாணத்தை வச்சுக்கலாம் என்று கூறி, அவள் தங்கையை திருமணம் செய்து கொண்டார் மாப்பிள்ளை ராதாகிருஷ்ணன்.ஜெயாவும் மன தளர்ச்சி அடையாமல் வேலையில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து, தன் குடும்பத்திற்கும் தன் தங்கை வீட்டார் கேட்கும் போதெல்லாம் பணம் காசு கொடுத்துக் கொண்டு, தன்னைப் பற்றி எந்தக் கவலையும் படாமல், ஒருத்தர் தன்னை வேண்டாம் என்று உதாசினப்படுத்தினால் என்ன, நம்மால் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையோடு அவளை மாதிரி ஊனம் நிறைந்தவர்களுக்கும் உதவி செய்து கொண்டு வாழ்ந்தாள்.

தன் தங்கையின் இரண்டாவது பிரசவம் ஸீரியஸ் ஆகிவிட்டது. அடிக்கடி காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை போன்று ஒன்று மாற்றி ஒன்று வந்த வியாதியால், கரு சரியாக வளர்ச்சியடையாத காரணத்தால், ராஜி இறந்துவிட்டாள். தன் தங்கை ராஜியின் பெண் புவனா மூன்று வயதே, ‘அம்மா இனிமே வரவே மாட்டாளா பெரியம்மா’ என்று ஜெயாவின் காலைக் கட்டிக்கொண்டு அழும் அந்த குழந்தையைக் கட்டி அணைத்துக் கொண்டு கதறித் தீர்த்தாள் ஜெயா.

ஒரு மாதம் ஓடியது. ஜெயாவின் அம்மா, அப்பா மீண்டும் கல்யாணப் பேச்சைத் தொடங்கினார்கள். புவனா குட்டிக்காகவது நீ மாப்பிள்ளையை இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்துக் கிடனும் என்று, இது உங்க விருப்பமா? அல்லது உங்கள் மாப்பிள்ளையின் விருப்பமா? என்ற ஜெயாவின் கேள்விக்கு எங்கள் ரெண்டு பேரோட விருப்பமும் தான் என்றார்.

மாப்பிள்ளையிடம் பொண்டாட்டி செத்த ஒரு மாதத்திற்குள் எப்படி உங்களால் அடுத்த பெண்ணைத் தேட முடியுது.

பத்து வருஷத்துக்கு முன்னால் ஊனமான என்னை வேண்டாமென்று சொன்னவர்தானே நீங்கள்? இப்ப எப்படி பிடிக்கும் என்னை? அன்று என்னிடம் பணம் இல்லை. அதனால் என் ஊனம் மிகவும் பெரிதாகத் தெரிந்தது. இன்று என்னிடம் பணம் நிறைய உள்ளது. அதனால் என் ஊனம் உங்கள் கண்ணுக்குத் தெரியல அப்படித்தானே!

வரதட்சணை வேண்டாம்னு சொல்லிவிட்டு... எத்தனை முறை ராஜி மூலமாகப் பணம் வாங்கிக் கொண்டீர்கள். என் தங்கை மேல் உள்ள பாசத்தால் வாயைத் திறக்காமல் பொறுத்துக் கொண்டேன். இன்று அவளே போய்விட்டாள். இனிமே என்ன. பிள்ளைத்தாச்சி பெண் இறந்து போன துக்கம் இன்னும் எங்களைவிட்டு அகலவேயில்லை. ஆனால் நீங்கள் அடுத்த வாழ்க்கைக்குத் தயாராகிட்டீங்க! முடியாது. நான் இதற்குச் சம்மதிக்கவே மாட்டேன். என்னை மாதிரி எத்தனையோ பேர் ஊனம் உடையவர்களா எந்த பிடிமானமும் இல்லாமல் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காகக் கடவுள் என்னைப் படைச்சிருக்கார்னு நான் நினைக்கிறேன் என்றாள் ஜெயா.

வாயடைத்து நின்றார் மாப்பிள்ளை ராதாகிருஷ்ணன். “புவனாவைத் தாயில்லாமல் எப்படி வளர்ப்பது என்றெல்லாம் நீங்க யாரும் கவலைப்பட வேண்டாம். அவளை எதிர்காலத்தில் பெரியாளா கொண்டு வருவது என் பொறுப்பு” என்று சொல்லிவிட்டுப் புவனாவின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு காரை நோக்கிப் புறப்பட்டாள் ஜெயா.

இதில் ஜெயாவின் நம்பிக்கை, விடாமுயற்ச்சி, துணிச்சல், பகிரங்கமாக எடுக்கும் முடிவு வெளிப்படுகிறது.சுகந்தி டீச்சர்

‘சுகந்தி டீச்சர்’ என்ற சிறுகதையில் சுகந்திக்கு டீச்சர் வேலைக்குப் படிக்கனும், நல்ல டீச்சராக ஆகணும் என்ற ஆசை. 12 ஆம் வகுப்பில் ஆயிரம் மார்க்கு மேல எடுத்திருந்தும் அவள் அப்பா செங்கல் சூளையில் வேலை செய்யும்போது சூளை சரிந்து விழுந்து அநியாயமா செத்துப்போயிட்டாரு. அதுக்குப் பிறகு படிக்கிறதை பற்றி நினைக்கவே முடியலை. அதனால் கல்யாணம் செஞ்சி வச்சிரலாமுன்னு நல்ல வரன் வந்தது செய்திட்டோம் என்கிறார் அவள் அம்மா.

சுகந்திக்கும் நல்ல கணவன் கிடைத்தார். ஆனா தான் டீச்சர் வேலையை விடாம பார்க்கணும் நாளு பேருக்கு சொல்லித் தரணும் என்ற ஆவல். 12 ம் வகுப்பு படித்திருந்தாலும் டீச்சர் வேலைக்கு சேர்த்துக்கிட்டாங்க. தன் கணவரும் அதற்குச் சம்மதித்தார். ஆயிரத்து ஐநூறு ரூபா சம்பளம் தந்தாங்க. எல்லா குழந்தைகளுக்கும் சுகந்தி டீச்சரைப் பிடிக்கும். நிறைய கதை சொல்லி, அடிக்காம பாடம் நடத்துறவுங்க. முனிசிபாலிட்டி ஸ்கூல்ல படிக்குற படிப்பு வராத புள்ளைங்களுக்கு இலவசமாக டியூசன் எடுக்கிறது சுகந்தி டீச்சர் என்றால் அந்தப் பகுதியில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த சுகந்தி டீச்சருக்காகவே அந்தப் பகுதி மக்கள் அந்தப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்த்தார்கள். குழந்தைகளின் கனவு நாயகியாகவே அவள் டீச்சருக்கே உரிய சிறிய கொண்டையுடன், நெற்றி நிறைய குங்குமம் வைத்து மார்பில் புத்தகத்தை அணைத்தபடி சுகந்தி டீச்சர் நடந்து சென்றாலே அந்த லட்சுமியே நடந்து போகிறமாதிரி இருக்கும்.

சுகந்தியின் அருமையை உணர்ந்து கொண்ட பள்ளி நிர்வாகம் அவளுக்குத் தலைமை ஆசிரியை பொறுப்பு. அதிக சம்பளம் தர முன்வந்த போது அவள் அதை ஏற்கவில்லை. வேண்டாம் சார். என் கணவர் கை நிறைய சம்பாதிக்கிறார். தலைமை ஆசிரியையாயிட்டா பள்ளி நிர்வாகம், ஆசிரியர்களை கண்காணிப்பது என்று மைண்ட் டைவர்ட்டாகி குழந்தைகளைக் கவனிப்பது குறைந்துவிடும். நான் இப்படியே இருக்கிறேன் என்று சொல்லிவிட்டாள்.

சுகந்தி சேகரின் கல்யாண வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லை. அவர்களுக்கு என்று குழந்தை பேறு இல்லை அதுதான். அந்த வருத்தம் சிறிது இருந்ததே தவிர, சுகந்தி நமக்குன்னு பொறந்தாத்தான் குழந்தையா இப்பவும் நான் தினமும் நூறு குழந்தைகளோடு வாழ்ந்திட்டிருக்கேன். கடவுள் என்னைக்கு கொடுக்கனும்னு நினைக்கிறாரோ அன்னிக்குத் தரட்டும் என்று சொல்லிவிடுவாள்.


அவளுக்கு டீச்சர் வேலையில் ஒரு சந்தோஷம், குழந்தை இல்லை என்கிற குறையே அவளுக்குத் தெரியவில்லை. கணவர் சேகரும், அவளின் சந்தோஷத்துக்குக் குறுக்கே நிற்கமாட்டார். அப்போதுதான் வந்தது அந்தப் பள்ளிச் சுற்றுலா. ஆண்டுதோறும் செல்லும் சுற்றுலா தான்.

குற்றாலத்தில் தினமும் ஒரு அருவிக்குச் சென்று குளிப்பது, மலைப்பிரதேசத்தில் எங்காவது அடர்த்தியான இடத்தில் அமர்ந்து சாப்பிடுவது என்று மகிழ்ச்சியாக சென்ற பள்ளி குட்டீஸ்களுக்கு திடீரென்று நடந்த சம்பவம் தான் இது. நீண்ட வரிசையில் குழந்தைகள் அருவியில் குளிக்க நின்று கொண்டிருந்தார்கள். சுகந்தி டீச்சர் அருவிக்கு அருகில் நின்று கொண்டு குளித்த குழந்தைகளைத் திரும்பி அனுப்பிக் கொண்டிருந்தார். கண் இமைக்கும் நேரத்தில் திடீரென தண்ணீர் சூறாவளியாக கொட்டத் தொடங்கியது. குழந்தைகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். அதிர்ச்சியடைத் சுகந்தி அருவிக்குள் குளித்துக் கொண்டிருந்த குழந்தைகளைக் காப்பாற்ற சென்றாள். இரண்டு இரண்டு குழந்தைகளாக வெளியே கொண்டுவந்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றாள். இந்தமுறை திரும்பி அவள் வரவில்லை. கடைசியா உயிரற்ற சடலமாக சுகந்தி டீச்சரை அள்ளி வந்தார்கள். மொத்தப் பள்ளியும் மெழுகுவர்த்தி ஏந்தி சுகந்தி டீச்சரின் படத்துக்கு மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தியது.

ஆக இரண்டு கதைகளிலுமே ஆசிரியர் மிக நுட்பமாகப் பெண்களின் மனதிடத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஜெயாவும் சுகந்தியும் ஏன் இது போன்ற பெண்கள் தான் இந்த சமுதாயத்திற்குத் தேவை என்பதை ஆணித்தரமாக இச்சிறுகதை மூலம் படைத்துக் காட்டுகிறார்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s2/p31.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License