Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

18. சிலம்பில் கண்ணகி உரைத்த எழுகை பெண்டிரின் கற்பறம்


நா. கவிதா
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருச்செங்கோடு.

முன்னுரை

சிலப்பதிகாரம் பெண்களின் கற்பின் திறனைப் பற்றிப் பேசும் காப்பியமாக விளங்குகிறது. சங்ககாலம் தொட்டுத் தமிழகத்தில் பெண்ணடிமை இல்லை. பெண்ணித்தை இழிவுப்படுத்தும் செயற்பாடுகள் இடைக்காலத்தில்தான் தோன்றின. அதனால், பெண்ணினத்திற்குப் பெருமை சேர்ப்பதும் பெண்ணொருத்தியைத் தெய்வமாக்கி அவளை மணந்து மாந்தரெல்லாம் வழிபடும் செய்தியைத்தான் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. பாண்டியன் தன் இன்னுயிரை நீத்த காட்சி, கண்ணகியை வியப்பில் ஆழ்த்தியது. கோப்பெருந்தேவியின் கற்பின் நிலைப்பாடு அவளை வெகுண்டெழச் செய்தது. எனவே, தானும் கற்புடை மகளிர் பலர் பிறந்த நகரிலே பிறந்தவள் என்றும் தானும் பத்தினியே என்றும் அரசனோடு மட்டும் அமையாது மதுரை நகரினையும் தீக்கிரையாக்குவேன் என்றும் வஞ்சினம் கூறிச் செயல்படுத்துகிறாள்.

இயற்கையைச் சான்றாக்கியவள்

பெண்களால் முடியாததொன்றுமில்லை. எந்தவொரு செயலையும் நினைத்த உடனேயே முடித்துவிடும் ஆற்றல் உடையவர்கள். நினைத்ததை மனதில் நிறுத்தி அக்கொள்கையைப் பின்பற்றி நடப்பவர்கள். கணவன் இறந்த பின்பு தன்னுடைய திடமான ஆற்றலால் அவனை உயிருடன் மீட்கும் பலம் பெற்றிருந்தனர் என்பதை,

‘நற்பகலே வன்னி மரமும் மடைப்பள்ளியுஞ் சான்றாக
முன்னிறுத்திக் காட்டிய மொய்குழலாள்” (சிலம்பு, வஞ்சினமாலை, அடி: 4 - 6)

என்ற பாடல் வரிகள் சுட்டிக் காட்டுகின்றன.

கணவனைக் காப்பாற்றிய பெண்

ஆண்கள் பெண்களை மதித்தல் என்பது சமுதாயத்தில் வழக்கிழந்த ஒரு செயலாகும். முற்றிலும் மாறுபட்டுப் பேச்சளவில் ஒரு பெண் கூறிய விளையாட்டுச் சொல்லை ஏற்று மணற்குவியலை,

‘மணற் பாவை நின் கணவன் ஆம் என்று
ஊரைசெய்த மாதரொடும் போகாள், திரை வந்து
அழியாது சூழ் போக ஆங்கு உந்தி நின்ற
வரி ஓர் அகலல்குல் மாதர்” (சிலம்பு, வஞ்சினமாலை, அடி : 9 - 10)

என்று கணவனாக ஏற்றுக் காத்திருந்தாள் ஒரு பெண்.ஆதிமந்தியின் கற்பு மேம்பாடு

கணவன் தன் மனைவியைப் பல காரணங்கள் வைத்துப் பிரிந்து செல்வான். ஆனால் மனைவி தன் உயிரினும் மேலாகப் பாவித்துக் கணவனை அரவணைப்பாள். ஆதிமந்தி கடல் நீராட்டில் தன் கணவன் சேர இளவரசன் ஆட்டனந்தியை அலைகொண்டு செல்லத் தன்கற்புத்திறத்தால்,

‘உரைசான்ற
மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக்கோன்
தன்னைப் புனல்கொள்ளத் தான் புனலின் பின் சென்று
கன்னவில் தோளாயோ, என்னக் கடல் வந்து
முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக் கொண்டு
பொன்னங் கொடி போலப் போதந்தாள்” (சிலம்பு, வஞ்சினமாலை, அடி : 10 -15)

என்று சிலப்பதிகாரக் கூற்றுகள் மெய்ப்பிக்கின்றன. பெண்ணியப் பண்புகள் காப்பியங்களில் ஒளிர்வதைக் காணமுடிகின்றது. செயற்கரிய செயல்கள் சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் படைப்பைப் பெற்றதால் சிறப்பினை எய்துகின்றது சிலப்பதிகாரக் காப்பியம்.

கல்லுரு ஆன பெண்

பூம்புகார் நகரின் வேறு ஒரு பெண் தன் கணவன் கடற்பயணம் மேற்கொள்ளத் தன் அழகால் ஈர்க்கப்பெற்று வேறுஆடவர் தன்னை நோக்காமலிருக்கக் கல்லுருவானாள் என்பதை,

‘மணன்மலி பூங்கானல் வருகலன்கள் நோக்கிக்
கணவன் வரக் கல்லுருவம் நீத்தான்” (சிலம்பு, வஞ்சினமாலை, அடி : 16 - 17)

என்பதை என்ற கூற்று மெய்ப்பித்துக் காட்டுகின்றது.

தாய்மை உணர்வை நிலைநாட்டியவள்

தன்னோடொத்த மாற்றாளுடைய குழந்தை கிணற்றில் வீழ்ந்ததனால் உலகத்தார் தன்மீது பழிச்சொல் சுமத்தாத வகையில் தன்னுடைய குழந்தையையும் கிணற்றில் வீழ்த்தி இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் இருந்து மீட்டாள்.

இதனை,

‘இணையாய மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று
வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள்” (சிலம்பு, வஞ்சி, அடி: 18 -19)

என்று சிலம்பு உணர்த்துவதன் மூலம் தாய்மை உணர்வை நிலைநாட்ட எச்செயலையும் செய்ய முயலும் முனைப்பு உடையவர்களாகப் பெண்கள் இருந்துள்ளனர் என்பதை உணர முடிகிறது.குரங்கு முகமாக மாற்றுதல்

கணவனுக்காக வாழ்பவள் மனைவி. குடும்ப நிறுவனத்தில் அனைத்து உணர்வுகளையும் அடக்குபவளாகப் பெண் காட்சியளிக்கின்றாள். மாற்றானொருவன் தன்னைப் பார்க்கிறான் என்பதற்காகவேப் பெண்ணொருத்தி தன் முகத்தைக் குரங்கின் முகமாக மாற்றிக் கொள்கிறாள். கணவன் வந்த பிறகு தன் முகத்தை இயல்பான நிலைக்கு வரச் செய்கின்றாள். இதனை,

‘தானோர் குரங்குமுகம் ஆக என்று போன
கொழுநன் வரவே குரக்கு முகம் நீத்த
பழுமணி அல்குல் பூம் பாவை” (சிலம்பு, வஞ்சினமாலை, அடி : 21 - 23)

என்று சிலம்பு குறிப்பிடுகின்றது. இறைவன் படைத்த படைப்பினையே மாற்றும் ஆற்றல் பெற்றவர்கள் பெண்டிர் என்பதை இதன்வழி அறியலாம்.

தாய் தந்தை சொல் காத்தவள்

பெண்கள் முன்னறிவில்லாதவர்கள் என்ற கூற்றினை அகற்றி புத்திக் கூர்மையை நிலை நாட்டியவர்கள் பெண்கள். இதற்குச் சான்றாக,

‘விழுமிய பெண்ணறிவு என்பது பேதைமைத்தே என்றுரைத்த
நுண்ணறிவினோர் நோக்கம் நோக்காதே எண்ணிலேன்
... ... ... ... ... ... ... ... ... ...
சிந்தை நோய் கூறும் திருவிலேற்கு என்று எடுத்துத்
தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய் முந்தியோர்
... ... ... ... ... ... ... ... ... ...
நீடித் தலைமை வணங்கித் தலைசுமந்த
ஆடகம் பூம் பாவை” (சிலம்பு, வஞ்சினமாலை, அடி : 21, 25 - 30, 34)

இத்தகைய கற்புடைய பெண்கள் தோன்றிய நாடு என்று கூறுவதன் மூலம் பெண்கள் பெற்றிருந்த மதிப்பினையும், பெண்களின் ஒழுக்க நிலைப்பாடு நாகரீகம் அடைந்துள்ளது என்பதையும் அறியமுடிகின்றது. காப்பியம் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாகவும், பண்பாட்டின் நிலைகளாகவும், சிறந்த சான்றாகவும் திகழ்கின்றது. ஏழு கற்பு மகளிர் கதைவாயிலாகப் பண்டைய சமூகத்தில் மகளிர் ஒழுக்கமுறை பெற்றிருந்ததையும் சிறப்பான இல்லறப் பண்புகள் நிறைந்து இருந்ததையும் அறிய முடிகின்றது.

பெண்களின் அன்புள்ளம்

கணவனுடன் சேர்ந்து வாழ்வதே பெண்டிர்க்கு அழகு. பிரிவுத்துயர் பெண்களைத் துன்பக் கடலில் ஆழ்த்தும். இத்தகையச் சமூக நியதியினை மூதாதையர் பெண்கள்மேல் ஏற்றிக் கூறிவந்தனர். திருமணம் முடிந்த பின்னர் கணவன் பிரிந்துவிட்டால் அச்செயலுக்குக் காரணம் மனைவியின் முற்பிறப்புச் செயலே என்பர். அன்று முதல் இன்றைய காலம்வரை எச்சூழலிலும் பெண்தான் பழிச்சொல்லிற்கு ஆளாகின்றாள். இந்நிலையினைச் சிலப்பதிகாரத்திலும் காணமுடிகிறது என்பதை,

‘கைத்தாயும் அல்லை கணவற்கு ஒரு நோன்பு
பொய்த்தாய் பழம்பிறப்பில், போய்க் கெடுக உய்த்துக்
கடலொடு நெய்தல் அம் கானல், தடம் உள
சோமகுண்டம், சூரிய குண்டம், துறை மூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதால், கணவரொடு
தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார்” (சிலம்பு, கனா.தி. முரை.காதை, 55 - 61)

என்று தேவந்தி கூறுகின்ற கருத்துகள் சமுதாயத்தில் ஆண்களை விடப் பெண்கள்தாம் துன்பம் வருவதற்குக் காரணமானவர்கள் என்பதை உறுதி செய்கின்றது.சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளையும், அவமானத்தையும் தன்னகப்படுத்திக் கொண்டு, அடிமையாகவும் எதிர்த்துப் பேசாமலும் வாழ்வதே பெண்ணிற்கு அழகு எனவும் போதிக்கப்பட்டுள்ளது.

‘பெண்டிர்க் கழகு எதிர்பேசாதிருத்தல்’ என்றும், ‘பேதைமை என்பது பெண்ணுக்கு அழகு’ என்றும் ஆரம்பகாலக்கட்டத்தில் இருந்தே சொல்லிப் பெண்களைப் பேசவிடாமல் தடுத்துள்ளனர். பெண், ஆணை எதிர்த்துக் கேள்வி கேட்டால் அது பெண்ணிற்கு ஏற்படும் இழப்பிற்குக் காரணமாகப் பெண்ணை மதிப்பிடுகின்றனர். பெண் எதிர்வாதம் செய்யாமல் இருந்தால் குடும்ப அமைப்பானது உடையாது என்ற கருத்தாக்கத்தினை அன்றைய சமூகத்தில் முன்வைத்துள்ளனர். கண்ணகி கோவலனை எதிர்த்து எதிர்வினா எழுப்பாமல் இருந்ததற்குக் காரணம் என்னவெனில், அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு கொண்டவளாக இருக்கவேண்டும் என வற்புறுத்தப்பட்டமைதான். இதனை,

‘அச்சமும், நாணும், மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்கு குரிய என்ப” (தொல், களவியல். நூ.எ.8)

எனத் தொல்காப்பியர் வலியுறுத்துகின்றார். பெண் என்பவள் மனபலம், அறிவுபலம், உடல்பலம் கொண்டவளாக இருந்தாலும் அவற்றை வெளிக்காட்ட முடியாமலும் உலகிற்கு எடுத்துச் சொல்ல முடியாமலும் வெளி உலகிற்கு வரமுடியாமலும் இல்லறக் கடமைகள் அமைந்து விட்டிருக்கின்றன. பெண் தன் அனைத்து ஆசைகளையும் தன் நெஞ்சில் கட்டுப்படுத்தி அடிமையாய் வாழ்ந்து வந்துள்ளாள். பெண்களுக்குரிய உரிமைகள் காப்பியக் காலத்தில் மறுக்கப்பட்டதே பெண்ணடிமைக்கு முக்கியக் காரணமாகும்.

முடிவுரை

பெண்கள், நிறைந்த நற்குணங்களால் தன்னைத்தானே காத்துக் கொள்வதுதான் கற்பாகும். இதனால்தான் கற்பிற்கு நிறை என்று பெயர் இட்டனர். இத்தகைய கற்புடையவர்களே பத்தினிப் பெண்டிர். இவர்கள் தம் கணவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தினையும் வணங்கமாட்டார்கள். கணவரையே தெய்வமாகத் தொழுவதை,

‘சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை” (திருக், வாழ்க்கைத்துணைநலம் - 07)

‘நிறையின் காத்துப் பிறர்பிறர்க்காணாது
கொண்டேன் அல்லது தெய்வமும் பேணாப் பெண்டிர்” (மணி, உதயகுமாரன் அம்பலம்புக்க காதை, அடி : 100 - 102)

போன்ற பாடல் வரிகள் தெளிவுபடுத்துகின்றன.

மேற்கோள் நூல்கள்

1. சிலப்பதிகாரம், அடியார்க்குநல்லார் உரை, உ. வே. சா.பதிப்பு.

2. மணிமேகலை, உ.வே.சாமிநாதையர் உரை, உ. வே. சா. பதிப்பு

3. பரிமேலழகர், திருக்குறள், வி. எம். கோபாலகிருஷ்ணமாச்சாரி பதிப்பு.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p18.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License