Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

19. பாரதி - பாரதிதாசன் - கண்ணதாசன் - மூவரின் அரசியல் தொடா;புகள்


ப. கவிதா எம்.ஏ., எம்.எட்., எம்.ஃபில்.,
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருச்செங்கோடு.

பாரதியார் அரசியல்

அரசியலைக் கண்டு அஞ்சக்கூடாது என்பது பாரதி கற்பித்த பாடம்.

“தந்த பொருளைக் கொண்டே - ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்
அந்த அரசியலை - இவர்
அஞ்சுதரு பேயென் றெண்ணி நெஞ்சம் அயர்வார்” (மகா., ப.37)

“முனையிலே முகத்து நில்… எனும் புதிய ஆத்திச்சூடி அரசியல் போர் முனையையேக் குறிக்கும் வெள்ளை ஆட்சி, பாரதியைக் கைது செய்ய முனையும் அளவிற்குப் பாரதியின் அரசியல் தீவிரம். இந்தியாவில் எழுத்துகளில் அனலைக் கக்கிற்று. அதனால் பாரதி, புதுவையைத் திறந்தவெளிச் சிறைச்சாலையாகக் கொள்ள நேரிட்டது. பாரதியின் தோழர்களும் சிறைச்சாலைகளைக் கண்டு அஞ்சாதத் தீவிர அரசியல்வாதிகளாகவே இருந்தார்கள். பாரதிதாசனோ, ‘எனக்கு இளமையிலிருந்தே அரசியலிலே ஈடுபாடு அதிகம். காரணம் பாரதியார் தொடர்புதான். யாராயிருந்தாலும், அவனுக்கென்று ஓர் அரசியல் கொள்கை வேண்டும். அதிலே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். நான் அப்படித்தான் இருந்து வருகிறேன். என்னால் அரசியல் இல்லாமல் இருக்கமுடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் போராட்டங்களில் பாரதியுடன் இணைந்து பங்கெடுத்துக் கொண்டார். புதுவையில் தலைமறைவாகியிருந்த பல போராட்ட வீரர்களுக்கு உதவிகள் புரிந்துள்ளார். திருபுவனையில் ஆசிரியராக இருக்கையில் பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டான் என்று குற்றம் சாட்டி 1¼ ஆண்டு சிறைபிடித்த அரசு, தவறுணர்ந்து விடுதலை செய்தது. இந்தக் குறிப்பால் அரசாங்கத்தை எதிர்த்துக்கொள்ள அஞ்சாத அரசியல்வாதி என்பது தெரியவரும். 1955-ம் ஆண்டு நடைபெற்ற புதுவை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அவைத் தலைமை ஏற்றுள்ளார். பாரதியைப் போல் இவரும் அரசியல் மேடைகளில் வெளிப்பட்டுத் தோன்றி சொற்பொழிவாற்றியதுண்டு. பாரதி முதலில் தீவிரவாதியாகத் தோன்றி பின்பு மிதவாதியாக விளங்கினார். பாரதிதாசன் பாரதியின் மறைவிற்குப் பிறகு பெரியாரின் அணிக்கு வந்து விடுகின்றார். அது முதல் அந்நிலையிலேயே இறுதிவரை நின்றுவிட்டார்.

கண்ணதாசனோ, அண்ணா - சம்பத் - நேரு - காமராசர் - இந்திராகாந்தி - நெடுமாறன் ஆகிய அரசியல் தலைவர்களைக் கண்ட பின்பு, முடிவில் அரசியல் வெறுப்பு எனும் குளிரில் நடுங்கி ஆன்மீகம் எனும் தீக்காயத் தலைப்பட்டார். ‘இனி நான் எழுதக் கூடியவைகள் எல்லாம் ஆன்மீக வடிவங்களாகவே அதிகமிருக்கும்” என்பது கவிஞர் எழுத்து. நான் அரசியல்வாதியாக இருந்து நூற்றுக்கணக்கான மேடைகளில் முழங்கியிருக்கிறேன். கட்சிகளின் கொள்கைகளை உற்சாகமாகப் பிரச்சாரம் செய்திருக்கிறேன். பத்திரிக்கைகளில் எழுதியிருக்கிறேன். தத்துவ விளக்கங்களை மெய்மறந்து கூறியிருக்கிறேன். என் அரசியலுக்கும் வயது இருபத்தைந்து ஆகிவிட்டன. இவ்வளவு காலங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டதற்கு ‘காரியம் என்ன நடந்திருக்கிறது” என்று எண்ணும்போது, அலுப்பும் சலிப்புமே மிஞ்சுகின்றன. ஒருவன் அரசியல்வாதியாயிருப்பதில், ஒன்று நாட்டுக்கு லாபம் இருக்கவேண்டும். என்னுடைய அரசியலில் நாட்டுக்கு என்ன லாபம் கிடைத்தது என்று எனக்குத் தெரியவில்லை. சத்தியமாக எனக்கு எந்த லாபமும் இல்லை. நஷ்டமே அதிகம். ஆகவே, வெறும் ஆரவாரங்கள், ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள், மாநாடுகள் இவற்றில் எனக்கு நம்பிக்கை போய்விட்டது (1979) இப்படிக் குறிப்பிடும் கண்ணதாசன் ‘ஒவ்வொரு கட்சிக்காரருக்கும் நான் கத்தியும் கொடுத்திருக்கிறேன், கேடயமும் கொடுத்திருக்கிறேன்” என்று எழுதும் போது, அக்கட்சிகள் இவருக்குக் கேடயமாகவும் கத்தியாகவும் பயன்பட்டன என்பதையும் மறுப்பதற்கு இல்லை.கவிஞர் திரைப்படத்தின் மூலமாகப் பொதுமக்களுக்கு அறிமுகமானார் என்பது உண்மை. அரசியல் மேடைகள் மூலமாகவும் அறிமுகமானார் என்பதும் உண்மை. அரசியல் மேடைகளை ஏற்படுத்திக் கொடுத்தவை அரசியல் கட்சிகளே‚ அரசியலால் கவிஞர் செல்வாக்குப் பெற்றதும் உண்டு. அரசியல்வாதிகள் பயனடைந்ததும் உண்டு‚ ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துப் பார்க்க முடியாது‚ பல சமயங்களில் மாநில அரசு எனும் எதிர்க்கட்சிக் கத்தியினைச் சுழற்றும் போது மத்திய அரசு எனும் கேடயத்தால் பாதுகாத்துக் கொண்டார் என்பதே உண்மையாகும்.

திராவிட நாடு

“பாரத சமுதாயம் வாழ்க…” - பாரதி

“வாழ்க வாழ்கவே
வளமார் எமது திராவிடநாடு வாழ்வே!” - பாரதிதாசன் (புர., II: ப.15)

"தாயின் மணிக்கொடி பாரீர்…” - பாரதி

“வானில் உயர்ந்த திராவிட நாட்டு
மணிக்கொடி தன்னை வணங்குவோம்” - பாரதிதாசன் (புர., வே.எ., ப.30)

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமன்பதில்லையே…” - பாரதி

“அஞ்சும் வழக்கம் திராவிடர்க் கில்லை
ஆள்வலி தோள்வலிக் குப்பஞ்சம் இல்லை” - பாரதிதாசன் (புர., ஐஐ: ப.105)

“விடுதலை விடுதலை விடுதலை…” - பாரதி

“விடுவாயடா தன்ன லத்தை - உன்
விடுதலை திராவிடர் விடுதலையி லுண்டு” - பாரதிதான் (புர., ஐஐ: ப.101)

பாரதிதாசனின் அரசியல்

பெரியாரின் ‘திராவிடநாடு” பிரிவினைக் கருத்தைக் கவிதைகள் மூலம் ஒலிபரப்பியவர் பாரதிதாசன் ஆவார். பாரதிதாசன் வளர்ந்த நிலையில் நின்று பிரிவினை பாடும்போது, கண்ணதாசன் கவிஞராகப் பரிணமித்து வருகின்றார். கண்ணதாசன் திராவிடநாடு கேட்டதற்கு அரசியல் குரு அண்ணா என்றால், கவிதைக்குரு பாரதிதாசனே ஆவார். திராவிடநாடு திராவிடருக்கே என்று கவிதை புனையும்போது, வடநாட்டவரால் தமிழ்நாட்டின் பண்பாடு கெட்டது, தமிழ்மொழி சீர்குலைந்து, தொழில்வளர்ச்சி தேய்ந்தது. சாதிப்பிரிவினைகள் தமிழ்நாட்டுப் பிராமணரால் வளர்ந்தன. வடநாட்டார்க்குத் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் துணைநிற்பவர்கள், தமிழ்நாடு வேறு - வடவர் பண்பாடு வேறு, இந்தித் திணிப்பென்பது வடவர் ஆதிக்கத்தை மிகுவிக்கும், தமிழ் உயர்ந்தது, தமிழை ஆட்சிமொழி ஆக்க வேண்டும் போன்றே கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுத் தமிழரே போருக்கு எழுவீர் என அழைக்கப்பட்டது. பாரதிதாசனின் பிரிவினைப் பாடல்களின் நெடுகிலும் இக்கருத்துக்களே திரும்பத் திரும்ப எதிரொலிக்கும். இக்கருத்துக்கள் கண்ணதாசனின் பிரிவினைப் பாடல்களுள் சிறுஅளவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கண்ணதாசன் கவிதைகளில் ‘மொழி இனம் நாடு - ஓர் ஆய்வு” எனும் தலைப்பின் ஆய்வாளர் ஸ்ரீதரன் பின்வரும் கருத்தைத் தெரிவித்துள்ளார்.1955 ஆம் ஆண்டில் ‘திராவிடநாடு திராவிடருக்கே” என்பது எங்களது ஜீவலட்சியம் என்று கண்ணதாசன் எழுதியுள்ளார். திராவிடநாடு சாத்தியமானதே என்று அப்போது அவர் நம்பியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பெரும் விடுதலை இயக்கமாகவே அவர் கருதியுள்ளார். இதுவெறும் அரசியல் கட்சியல்ல, மாபெரும் விடுதலை இயக்கம். பிரெஞ்சுப் புரட்சி போலவும், ரஷ்யப்புரட்சி போலவும் பெரும்புரட்சி ஒன்றை நடத்தப் போகிற ஒரு இயக்கம். இத்தாலிய வீரன் கரிபால்டி, துருக்கியின் கமால் பாட்சா, தத்துவ மேதை இங்கர்சால், கிரேக்க நாட்டு சாக்ரட்டீஸ், சோவியத் நாட்டு லெனின் என இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து வந்து பிறந்த வடிவமே அண்ணாத்துரை! இப்படிக் கட்சிப் பேச்சாளர்களும் பேசினார்கள். அவனும் முழு நம்பிக்கையோடு பேசினான்.

“இனத்தாலும் மொழியாலும் கலைக ளாலும்
இயல்புமிகும் நாகரீகத் துறையி னாலும்
தனித்ததொரு வரலாற்றுச சான்றி னாலும்
தமிழ்மாந்தர் தனித்தோரே தமிழர் நாடும்
தனித்தேதான் வாழ்வுபெறும் ஆத லாற்றான்
“தமிழ்நாடு தமிழர்க்கே” என்கின்றோம்நாம்
மனத்தே ஓர் களங்கமிலாப் பெரியீர் இந்த
வழிவருவீர் தனிநாட்டைப் பிரித்தே வாழ்வோம்” (கவி., I+II, ப.137)

மூவேந்தர் பெருமை சொல்லித் திராவிடத்தின் பெருமை கேட்பார் பாவேந்தர்.

“சின்ன தல்ல தம்பி - நம்
திராவிட நன்னாடு
முன்னரசர் நாடு - கல்ல
மூன்றரசர் நாடு
மன்னர்வில் எடுத்தால் - பனி
வடமலை நடுங்கும்
பாண்டியன்பேர் சொன்னால் - இந்தப்
பார்நடுங்கும் தம்பி
ஆண்டிருந்த சேரன் - அவன்
ஆரியரை வென்றான்
மாண்ட துண்டு சோழன் - அவன்
மாநிலத்தைக் காத்தான்” (புர.111, ப.147)

கண்ணதாசன் இன்றைய தமிழ்நாட்டை மூவேந்தர் ஆண்ட தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டு மனமுடைவார்.

“பொன்னே திருநாடே பூந்தமிழே பண்பாடே
தன்னே ரிலாத தமிழ்மகனே நம்வீட்டைச்
செப்பரிய மூவேந்தர் செங்கோலோ டிப்பொழுது
ஒப்பிட்டுப் பார்த்தால் உடைந்த குடமாகும்” (கவி., I+II, ப.107)

கண்ணதாசன் தாமே தயாரித்த “மாலையிட்ட மங்கை” எனும் திரைப்படத்திற்கு எழுதிய “விந்தியம் குமரியிடை விளங்கும் திருநாடே” என்ற பாடல் நோக்கப்பட வேண்டியதாகும்.

“தென்னாடுதான் எங்கள்நாடு - நல்ல
செந்தமிழ்தான் எங்கள் தாய்மொழியாகும்
புன்மைகொள் ஆரிய நாட்டை - எங்கள்
பொன்னாட்டினோடு பொருந்துதல் ஒப்போம்”

ஆங்கில நாட்டான் எனும் பொது எதிரியை வீழ்த்த நாமெல்லாரும், இந்த முகமதியர், மேல்சாதி, கீழ்சாதி எனும் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு இந்தியராக நிற்க வேண்டும் என்று தம் பாடல்களில் முழங்கிய பாரதியைப் போலப் பாவேந்தர் தமிழ்நாடு விடுதலையடைவதற்குத் தமிழர்கள் சாதி வேற்றுமைகளை மறந்து ஒன்றிவிட வேண்டும் என்று விரும்புகின்றார்.

“நாமெல்லாம் திராவிடர்கள் என்ற எண்ணம்
நல்உளத்தில் வேரூன்ற வேண்டும் மேலும்
நாமெல்லாம் ஒரே வகுப்பார் என்ற எண்ணம்
நன்றாக நம் உணர்வில் ஏற வேண்டும்
தீமையுற நமையெல்லாம் சமயம் சாதி
சிதறடிக்க இடம் கொடுத்தல் நமது குற்றம்
ஆமைஉயிர் காக்குந்தன் முதுகின் ஓட்டை
அகற்றென்றால் அவ்வாமை கேட்கலாமா
உடையினில் ஒன்றாதல் வேண்டும் உண்மை
உணவினிலே ஒன்றாதல் வேண்டும் நல்ல
நடையினிலே ஒன்றாதல் வேண்டும் பேசும்
நாவிலும் எண்ணத்திலும் ஒன்றாதல் வேண்டும்
மடைதிறந்த வெள்ளம்போல் நம்தேவைக்கும்
மாற்றாரை ஒழிப்பதற்கும் ஏறிப்பாயும்
படையினிலே ஒன்றாதல் வேண்டும் வாழ்வின்
பயன்காண வேண்டுமென்றோ திராவிடர்கள்” (1948) (புர., வே.எ., பக்.38-39)

கண்ணதாசன் இவற்றை உட்கொண்டே ‘ஒற்றுமை வளர்ப்போம்” எனும் தலைப்பில் ஒரு கவிதை பாடுகின்றார்.1938-ஆம் ஆண்டில் இந்தியைக் கட்டாயமாக்கியதாகவும், 1952 ஆம் ஆண்டில் 6000 கிராமப்புற பள்ளிகளை மூடியதற்காகவும், 1953 ஆம் ஆண்டில் புதிய கல்வித்திட்டத்தினைக் கொண்டு வந்தமைக்காகவும் தமிழக அரசியலில் அன்றைய முதலமைச்சர் இராசகோபாலாச்சாரியாருக்குப் பெரும் எதிர்ப்புகள் உருவாகியிருந்தன. இந்த எதிர்ப்புகளின் விளைவாக எழுந்த போராட்டங்களைக் கண்டித்தமைக்காக, பிரதமர் ஜவகர்லால் நேருவின் மீதும் வெறுப்புக்கள் தோன்றியிருந்தன. இவற்றின் விளைவால் நேருவையும் இராசாசியையும் தமிழ்க் கவிதைகள் சாடின. பாரதிதாசன் இந்தக் கவிதைப் போரில் முன்னின்றவர்

‘நேரு தமிழரை நெருக்குவது போல்” (புர.கு.பா., ப.72)

‘நேருவின் ஆட்சி தீருகின்ற நாள் நெருங்கிற்றென்று கொட்டடா முரசம்” (புர., வே.எ.ப.63)

என்று நேருவையும்,

‘பள்ளி இருபத்தாயிரம் படிப்பவர்கள் படிக்காமல் கொள்ளிவைத்தான் ஆச்சாரிதான் போகாதே - அக்கொள்ளை நோய்க்கு மருந்துமில்லை சாகாதே” (புர., வே.எ.,ப.87)

குள்ளநரியாய்ப் பதுங்கி ஆச்சாரி, கொடுக்கும் ‘குலக்கல்வி திட்டம்” என்று இராசாசியையும் பாரதிதாசன் கவிதைகள் இழித்துரைக்கும்.

கண்ணதாசனின் அரசியல்

முத்தையா எனும் பெயரைக் கண்ணதாசன் என மாற்றிக் கொண்டபோது, கண்ணனின் ஈடுபாட்டினால் அப்படிச் செய்து கொண்டதாகக் குறிக்கவில்லை. திருநீற்றை நெற்றியில் இட்டுக்கொள்ளும் சிவமரபில் வளர்ந்தவரே கண்ணதாசன்! கண்ணதாசன் எனப் புனைபெயர் கண்டுவிட்ட பின்னும் திருநீற்று நெறியே நீடித்தது (1994).

தி.மு.கழகப் பற்றாளராக (1949) மாறியபின் இருந்த பக்தி உணர்ச்சி தலைதூக்க வாய்ப்பில்லாமலே இருந்தது. அப்பொழுதும் அவர் கிருஷ்ணபக்தராக மாற வாய்ப்பிருக்கவில்லை என்ற போதுங்கூடக் கண்ணன் மீதான பாடல்களைப் பாடத்தொடங்கியிருந்தார். ‘கண்ணதாசன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தபொழுது பாடிய திரைப்பாடல்களிலும் கண்ணன் இடம்பெறுவது சிந்தித்தற்குரியது” என்பார் தமிழண்ணல். ( ‘வானம்பாடி’ ‘நானும் ஒரு பெண்’ போன்ற படங்கள் தயாரான காலமாக இருக்கலாம்! ‘கங்கைக்கரைத் தோட்டம்...’ ‘கண்ணா கருமைநிறக் கண்ணா...’ ஆகிய பாடல்கள் முறையே அப்படங்களில் இடம்பெற்றவை) 1963-ஆம் ஆண்டு சித்தூர் மாவட்டத்தைச் சார்ந்த பிரம்மமசமாஜத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் கண்ணதாசனைச் சந்தித்து, அரசியல் விட்டுவிட்டு ஆன்மீகத்தில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிடுவர். அதுமுதல் கண்ணதாசன் ‘தெளிவு பெற்றவராகிவிட்டார்” என்பர். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகியதும் (1961) அடிமனத்தில் கிடந்து அவ்வப்போது தலைகாட்டி வந்த பக்தியுணர்ச்சி முழுதாக வெளிவரத் தொடங்கிற்று எனலாம்.

மேற்கோள் நூல்கள்

1) வையாபுரி, எஸ்., “பாரதியுகம்”, எ.கா., சிவதம்பி, கா., “பாரதி மறைவு முதல் மகாகவி வரை”, என்.சி.பி.எச்., சென்னை - 98, மு.ப. 1984, ப. 213.

2) கேசவன், கே., “சுப்ரமணிய பாரதியார் - ஓர் அரசியல்வாதியின் உருவாக்கம்”, (கட்டுரை)

3) ராமச்சந்திரன், சே., “தமிழ்கவிதையில் திராவிட இயக்கத்தின் தாக்கம்”, பூமணி பதிப்பகம், சென்னை - 39, மு.ப. 1985, ப.148.

4) தி.மு.கழகக் கொடி விளக்கம், “தி.மு.க.வரலாறு”, எனும் நூலில் பார்த்தசாரதி, டி.எம்., பாரதிநிலையம், சென்னை - 17, நா.ப. 1984, ப.94.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p19.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License