Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

27. பெரியவாச்சான் பிள்ளையின் உரைநயச்சிந்தனைகள்


வ. கோபாலகிருஷ்ணன்
உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
எம். ஜி. ஆர் கல்லூரி, ஓசூர்.

முன்னுரை

“ஞானச் சுடர்விளக்குஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தநான்”

இத்தகு சிறப்புக்கும் சீரமைக்கும் உரிமையான செந்தமிழில் பன்னிரு ஆழ்வார்களும் பாடியருளிய பாடல்களின் தொகுப்பே நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமாகும். இப்பாடல்களைப் பக்திப் பாசுரங்கள் என்பது மரபு. இப்பாசுரங்களின் முழுமைக்கும் உரை எழுதிய சிறப்பு பெரியவாச்சான் பிள்ளைக்கு மட்டுமே உண்டு. அதனால் இவரை வியாக்கியான சக்கரவர்த்தி என்று வைணவப் பெரியோர்கள்அழைக்கின்றனர். அதுமட்டுமின்றி, இவருடைய உரைநெறியும், உரைநயமும் மிக ஆழமானதாகவும் உரைநடை செறிவானதாகவும் அமைந்துள்ளது. பிறவியிலேயே வைணவக் கடவுளான திருமால் மீது பற்றுடையவராகவும், திருமாலைப் பாடிப் பரவுவராகவும் திகழ்ந்தார். அதனுடைய திறத்தாலே பிரபந்தங்களுக்கு உரை வகுக்கும் ஆற்றல் இவருக்குக் கிட்டியது எனலாம். இச்சிறப்பு மிக்க பெரியாவாச்சான் பிள்ளை பற்றியும் இவருடைய உரைநயச் சிந்தனையைப் பற்றியும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பெரியவாச்சான் பிள்ளையின் வரலாறு

பெரியவாச்சான் பிள்ளையின் “இயற்பெயர் ஸ்ரீ கிருஷ்ணபாதர். தந்தை யாமுனதேசிகர், தாய் நாச்சியாரம்மை. இப்பெரியார் சோழநாட்டில், திருவெள்ளியங்குடி என்கிற ஊருக்கு ஒரு கல் தொலைவில் உள்ள,சேங்கநல்லூர் எனும் தலத்தில் கலி 4329 சர்வஜித்து வருடம் ஆவணி மாதம் ரோஹிணி நட்சத்திரத்தில் அவரித்தார்.” (1) அதாவது, கி.பி. 1228-ல் பிறந்தார். “ஆச்சான் என்பது வைணவ பரிபாஷையில் ஆசாரியன். பலர் ஆச்சான் என்ற பெயரோடிருந்தமையால், இவரை வேறு பிரித்துக் காட்டப் பெரிய ஆச்சான் பிள்ளை என இருந்த பெயர் உடம்படு மெய் பட்டு பெரியவாச்சான் பிள்ளை என அழைப்பதை அறிய முடிகின்றது. வைணவ மரபில் ஆச்சான் என்று மட்டும் சொன்னால் இவரே. கிருஷ்ணசூரி என்றும் இவர் வழங்கப் பெற்றார்.” (2) என்பதன் மூலமாக இவருடைய வரலாற்றை அறிகிறோம்.

பெரியவாச்சான் பிள்ளையை வியாக்கியான சக்ரவர்த்தி என்றும், உரைமன்னன் என்றும், உரைவித்தகர் என்றும் பரம காருணிகர் என்றும் பற்பல அறிஞர்கள் போற்றுகின்றனர். ஒரு சமயம் திருவரங்கத்திலே தங்கி வாழ்ந்து வந்த இவர் நஞ்சீயரிடத்தும் நம்பிள்ளையிடத்தும் எல்லா வகையான சாத்திர உண்மைகளையும், திருவாய்மொழி வியாக்கியானங்களையும் நன்குகேட்டுணர்ந்தார். நம்பிள்ளையை அவர் தம்முடைய ஆசாரியராகக் கொண்டிருந்தார். அவர்தம் புலமையை நன்குணர்ந்த நம்பிள்ளை, திருவாய்மொழிக்கு வியாக்கியானம் எழுதுமாறு கட்டளையிட்டார். அவருடைய கட்டளையின்படி அவரும் திருவாய்மொழிக்கு உரை வகுத்தார். இராமயணத்தில் அவருக்கு மிகுந்த ஈடுபாடுண்டு. அதன் விளைவால் அவர் தம்முடைய உரை விளக்கத்தில் பல இடங்களில் இராமாயணப் பாடல்களைச் சான்று காட்டுவார். தம் குருவின் கட்டளைக்கு ஏற்ப அவர், இராமாயணப் பாடல்களின் எண்ணிக்கையுடையதாக 24000 கிரந்தத்தில் திருவாய்மொழிக்கு உரை வழங்கியுள்ளார். பெரியவாச்சான் பிள்ளையின் மருமகனாகவும், மகனாகவும் அவர் தம் சீடராகவும் விளங்கியவர் நயினாராச்சான் பிள்ளைஎன்பவர். பரகாலதாசர், ஸ்ரீரங்காசாரியார், பின்பழகிய பெருமாள் ஜீயர் ஆகியோரும் அவருடைய மாணவர்களாவர் என்ற செய்தியையும் இதன் வாயிலாக நாம் அறியலாம்.உரைநயம்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திற்குப் பெரியவாச்சான் பிள்ளை உரை எழுதியுள்ளவற்றில் நயமான பகுதிகள் பல உண்டு. அவற்றில் வினாவிடை நயம், உரையாடல் நயம்,சொற்பொருள் நயம், உவமை நயம் ஆகிய நான்கு நயங்கள் மட்டும் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

வினா-விடைநயம்

உரையை ஒரு மாணவனுக்குக் கூறுவது போன்று அமைக்கும் முறையே வினா-விடைப் போக்காகும். இது பண்டை இலக்கிய இலக்கண உரையாசிரியர்களிடம் காணலாகும் ஒரு பொதுப்பண்பாகும். இப்போக்கு பெரியவாச்சான் பிள்ளையிடம் உரையில் காணப்படுகிறது. சமயநிலையில் அவர் உரை வகுக்கின்றார். பக்குவம் பெற்ற பக்தர்களுக்கு ஏற்ப அவர் உரை அமைகின்றது. அதில் அவர் வினா விடையாக அமைத்து உரை காணும் நயத்தை அறிய முடிகின்றது.

திருப்பாவை ஒன்பதாம் பாட்டில் வருகின்ற ‘சுற்றும் விளக்கெரிய’ என்ற தொடரை விளக்கும் போது அவர் பின்வருமாறு கூறுவார்.

“கிருஷ்ணன் வந்தால் தன் கையைப் பிடித்து உலாவுமிடமடையப் படுக்கையும் விளக்குமாக்கி வைத்தபடி. புறம்பு நிற்கிறவர்களுக்கு உள்ளு விளக்கெரிந்தது தெரிகிறபடி எங்ஙனே?” என்று ஒருத்தி வினா எழுப்புவாள். உடனே மற்றவள், “என் என்னில், மாணிக்கக் குப்பி போலே புறம்பே நிற்க உள்ளுள்ளதெல்லாம் தோற்றா நிற்கும்” (திருப்.பெரிய.ப.138)

என்று மறுமொழி கூறுவாள். இது தருக்கநெறியில் அமைந்து மறுமொழி தருகின்ற விடையாக அமையும்.

உரையாடல் நயம்

திருப்பாவை வியாக்கியானத்தில் பெரியவாச்சான் பிள்ளை உரையாடல் நயம் தோன்றும் வண்ணம் தம்முடைய விளக்கத்தினை எழுதிச் செல்கின்றார். சான்றாக,‘புள்ளும் சிலம்பின்’என்பதுஆறாம் பாட்டின் தொடக்கச் சொல்லாகும். அதன் விளக்கம் உரையாடல் பாங்கில் அமைந்துள்ளது என்பதை இறைவன் மீது சிந்தை செலுத்த வேண்டும் என்பதற்காகவே உறங்கிக் கொண்டிருக்கும் பறவையினங்களை விடியலானது வேண்டுமென்றே நேரமாகவே எழுப்பிவிட்டு, அதாவது விடிந்ததற்கான அடையாளம் வாசலிலே தெரிகின்ற அளவிற்கு உருவாக்கி விட்டது. இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள். பறவையினங்களும் இரைத் தேடப் போயிற்றல்லவா! இறைவனின் அருளைப் பெற எழுங்கள். நம்மூரில் உள்ள பறவையினங்கள் கூட பகவான் மீது சிந்தை செலுத்திக் கொண்டு உறங்காமலே இருந்திருக்கிறது என்றால் நாம் எவ்வாறு பகவான் மீது சிந்தை செலுத்த வேண்டும் என்பதை யோசித்துப் பாருங்கள் எனும் விளக்கத்தின் வாயிலாக நம்மால் அறியமுடிகிறது.சொற்பொருள் நயம்

பெரியவாச்சான் பிள்ளையின் உரைநயத்தின் ஆழத்தை அறிந்து கொள்வதற்குக் களமாக அமைவன அவர் கூறுகின்ற சொற்பொருள் நயங்கள் ஆகும். ஆயர்பாடியிலே இருக்கும் பசுக்களின் முலையினைச் “சீர்த்தமுலை”என்கிறது திருப்பாவை. அதற்கு விளக்கம் கூற வந்த உரைகாரரோ,

“விரலிட்டுச் சுற்றிப் பிடிக்கவொண்ணாது, இரண்டு கையாலும் அணைத்துக் கறக்க வேண்டும் படிகனத்திருக்கை” (திருப்.பெரிய.பக்.66-67)

என்று கூறுவார். விரல்களைஎல்லாம் ஒன்றாகச் சேர்த்து வளைத்துப் பிடித்தாலும் நம் உள்ளங்கைக்குள்ளே அடங்காத அளவிற்குப் பருத்த முலைகளாகப் பசுவின் காம்புகள் இருக்கின்றது என்று‘சீர்த்தமுலை’எனும் சொல்லுக்குப் பொருள் தந்து விளக்குகிறார். அதாவது, ஆயர்பாடியின் செல்வவளத்தையே நம் சிந்தையின் முன்னே கொண்டு வந்து காட்டிவிடும் நுட்பமான நயம் இதில் அமைந்துள்ளது.

மேலும், கண்ணன் ‘ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தான்.’ இரண்டாவது வரும் ‘மகனாய்’ என்ற சொல்லிற்குப் பெரியவாச்சான் பிள்ளை, பிறப்பில்

“புரையில்லாதாப் போலே இவள் மகனானவிடத்திலும் புரையற்றிருக்கை” (திருப்.பெரிய.ப.346)

என்பார். அதாவது, புரை என்ற சொல்லுக்குக் குற்றம் எனும் பொருளாகும். கண்ணபிரான் குற்றமற்றவனாக உள்ளான். எவரிடத்தில் பிறந்தானோ அவர்களெல்லாம் குற்றமற்றவர்களாகவே உள்ளனர் எனக் கண்ணன் பிறப்பின் உயர்வை உணர்ந்து அதன் புனிதத் தன்மையை இவ்விளக்கத்தின் வாயிலாக நமக்கு அவர் உணர்த்துகின்றார்.

உவமை நயம்

பெரியவாச்சான் பிள்ளை தம்முடைய உரையில் பல உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார். அவை கற்பவர் உள்ளத்தில் களிப்பை ஏற்படுத்துவதாகும். அவர் வழக்கிலிருந்தும், இராமாயணம் போன்ற இலக்கியங்களிலிருந்தும் பற்பல உவமை கூறி விளக்குவார். அவர் எடுத்துப் பேசும் உவமைகள் நம் அறிவிற்குவிருந்தாக அமைவனவாகும்.

கிடந்த கோலத்தில் இருக்கின்ற திருமாலை விளக்கும் போது அவர்,

“தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே, திருவநந்தாழ்வான் மேலே சாய்ந்தருளின பின்பு வடிவிற் பிறந்த புகரின் பெருமையைச் சொல்கிறது” (திருப்.பெரிய.ப.43)

இதனை, பதக்கமாலையில் பதித்து வைக்கப்பட்ட மாணிக்கம் போலப் பாம்பின் மீது திருமால் படுத்திருக்கிறார் என மாணிக்கத்திற்குத் திருமாலை உவமையாகக் காட்டுகிறார்.மாவலி கொடுத்த மூன்றடி மண்ணைத் தன் திருவடி கொண்டு அளக்கும் போது திருமால் எவ்வாறு பேருருவம் கொண்டு எழுந்தான் என்பதனைப் பின்வருமாறு அவர் விளக்குகின்றார்.

“பனிப்பட்டுச் சாய்ந்த மூங்கில் போலேயாய், அதுஆதித்ய கிரணம்பட்டுக் கிளம்புமா போலே மஹாபலியாலே நோவுபட்ட தேவர்கள் ஆர்த்தத்வநி கேட்ட பின்பு பேர்ந்து வளர்ந்தபடி” (திருப்.பெரிய.பக்.57-58).

இவ்வுரையின் மூலம் பனித்துளிபட்டு மூங்கில் மரம் சாய்வதாகத் திருமாலின் வாமனவதாரத்தைக் கூறுகிறார். அதாவது, பனித்துளிப் போன்ற திருமால் மூங்கில் போன்ற மாவலி மன்னனின் கர்வத்தை அடக்கியதை உவமைநயம் தந்து உரைப்பதை இங்குக் காணலாம். மேலும்,

ஆயர்ப்பாடியில் வாழ்கின்ற எருமைகள் தம் கன்றுகளை எண்ணியவுடனே பாலைச் சொரிந்தன. இதற்கு அவர் கூறும் உவமையானது,

“திருமலையில் திருவருவிகள் போலே பால் மாறாதே சொரிகை” (திருப்.பெரிய.ப.169)

என்பதுசமயத் தொடர்புடன் வருகின்றது. ஆயர்ப்பாடியில் உள்ள எருமைகள் தன் கன்றுகளை நினைத்தவுடனேயே தானாகத் தன் மடியிலிருந்து பாலைச் சொரிகின்றது. இத்தன்மை திருமலையில் உள்ளஅருவிகள் போன்று ஒத்துள்ளது என உவமித்துக் காட்டுவது சிறப்புடையதாகும்.

இவ்வாறு அணிகலன், தாவரவினம், அருவி ஆகியவற்றைத் தன் உரை விளக்கத்திற்கு நயமுடையதாக்கச் செய்கின்றார்.

முடிவுரை

பெரியவாச்சான் பிள்ளைஅவர்களின் தனிச்சிறப்பாகச் சிறிய தொடரை விளக்குவதற்குக் கூட வினா எழுப்பி தருக்க முறையில் விடை தருவதும், சீர்த்தமுலை, மகன் என்ற சொற்களுக்குப் பொருள் நயம் கூறுவதாகும். மேலும், இவருடைய உரையாடல் நயமும், உவமைநயமும் மட்டுமின்றி பிற உரை மரபுகள் வைணவ உலகிற்குப் புதுமையைத் தந்து புத்துயிரூட்டியிருப்பது பிற்கால உரையாசிரியர்களுக்கு வழிகாட்டியாகவும் உள்ளார் என்பதையும் அறிய முடிகின்றது. அதுமட்டுமின்றி, இலக்கிய ஆய்வாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் இவரது உரை புதையலாக அமைகின்றதையும் காண முடிகின்றது. இது போன்ற காரணங்களினால் இவரை ‘வியாக்கியானசக்கரவர்த்தி’ என இலக்கிய உலகம் புகழ்கின்றது.

சான்றெண் விளக்கம்

1. மயிலை மாதவதாசன், திருப்பாவை வியாக்கியானங்கள், ப.518.

2. மு. அருணாசலம், தமிழ் இலக்கியவரலாறு, ப.334.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p27.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License