ஆன்ம இயல் பற்றிப் பேசும் திருவாசகம் விண்ணியலையும் விவரமாகக் கூறுகிறது, “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும் அளப்பருந்த தன்மை வளப்பெருங்காட்சி ஒன்றனுக்கொன்று நீன்றெழில் பகான் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன”. இந்தப்பாடலில் பெருவெடிப்புக் கொள்கையின்படி பேரண்டம் விரிந்து நிற்பதை மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். உலகம் என்ற சொல் உலவு என்பதன் அடிப்படையாகப் பிறந்தது, உலவு என்றால் சுற்றுதல் என்று பொருள். தன்னையும் ஞாயிறையும் பூமி சுற்றுகிறது என்பதைக் காணமுடிகிறது.
திருவள்ளுவர் திருக்குறளில் “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” என்று குறிப்பிட்டுள்ளார். ஞாலம் என்ற சொல் “ஞால்” என்னும் சொல்லடியாகப் பிறந்தது, ஞால் என்றால் தொங்குதல் என்று பொருள். உலகம் பற்றுக்கோடின்றி அண்டவெளியில் தொங்குவதைக் குறிப்பிடுகிறது, வலவன் ஏவா வானூர்தி “ என்பதைப் புறநானூறு 27ஆம் பாடல் கூறுகிறது. இது செயற்கைக் கோளாக இருந்திருக்கலாம். வானத்தில் காற்றில்லாப் பகுதியும் உண்டு என்பதை ‘வறிது நிலை இய காயமும்’ புறம் 30 என்ற பாடல் வரி உணர்த்துகிறது. கரும்பைப் பிழிவதற்கும் இயந்திரங்கள் இருந்ததாகப் பதிற்றுப்பத்தின் ”தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” என்ற வரியின் மூலம் உணரலாம். நிலத்தில் இருந்து நீரை உறிஞ்சி இறைக்கும் ஆழ்துளைக் கிணறு அந்தக்காலத்தில் இருந்திருக்கலாம் என்பதை “அந்தக் கேணியும் எந்திரக்கிணறும்” என்னும் பெருங்கதை வரியின் மூலம் உணரலாம். பெருங்கதையில் வரும் எந்தியானை கிரேக்க தொன்மத்தில் குறிப்பிடப்படும் டிராய் போருடன் இணைந்து பேசப்படும் எந்திரக்குதிரையுடன் ஒத்தது.
அணுவைப் பிரிக்க முடியும் என்ற கருத்து பல காலத்திற்கு முன்பே தமிழில் இடம் பெற்றுள்ளது. அவ்வையார், “அணுவைத் துளைத்தேழ்கடலைப் புகட்டி” என்று திருவள்ளுவமாலையில் குறிப்பிடுகிறார். கம்பர் “ஊர் அணுவினை சத கூறிட்ட கோணினும் ஊன்” என்று குறிப்பிடுகிறார். “வானுறு மதியை அடைந்ததுன் வதனம் மறிகடல் புகுந்துன் கீர்த்தி” என்று நந்திக்கலம்பகம் கூறுகிறது. இது வானத்திலுள்ள நிலவைப் போல் முகம் ஒத்திருக்கிறது என்கிறது. திருக்குறளில் “மாதர்முகம் ஒளிவிடவில்லையேல் காதலை வாழி மதி” என்பதில் கூறப்படும் செய்தி நிலவு தானாக ஒளி வீசாது, சூரியனை சார்ந்தே இருக்கும் என்பதை அடையாளம் காட்டுகிறது.”புல்லாகிப் பூடாய்” என்கிறது திருவாசகம். உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்கிறது தொல்காப்பியம். தமிழில் கிடைத்த முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் அறிவியல் சிந்தனைகள் துளிர்விட்டன.
உலகில் தோன்றிய அறிவியல் கல்வியில் வானியல் கல்வி மிகவும் தொன்மையானதாகும். “நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் ஆதலின்” எனத் தொல்காப்பியம் பொருள் 635ல் கூறுகிறது. உலகமானது நிலம், நீர், வெப்பம், காற்று, வானம் ஆகிய ஐந்தும் உள்ளடக்கியது. இதனைப் புறநானூறுப் பாடலும் அப்படியே கூறுகிறது. “மண் திணிந்த நிலனும் நிலன் ஏந்திய விசும்பும் விசும்புதை வரு வளியும் வளித்தலை இய நீயும் தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை போல்” புறநானூறு 2ம் பாடல் கூறுகிறது. உலகம் உருண்டை என்பதை 15ஆம் நூற்றாண்டில் போலந்து நாட்டைச் சேர்ந்த ”நிக்கோலஸ் கிராப்ஸ்” என்பவர் கணித்துச் சொன்னார். 16ஆம் நூற்றாண்டில் கலிலியோ தொலைநோக்கியின் மூலம் ஆராய்ந்து உலகம் உருண்டை என்றார். மேலைநாட்டவரின் கண்டுபிடிப்புகளுக்கு முன்பே திருக்குறள் அறிவியல் ஆராய்ச்சிக்கு வித்திட்டுள்ளது. “தினையளவு போதா சிறுபுல் நீர் நீண்ட பனையளவு காட்டும்” என்று கபிலர் திருவள்ளுவமாலையில் குறிப்பிட்டுள்ளார். அவ்வையார் “ஆழ அமுக்கி முக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நிற்பதும்” என்ற பாடலில் நீர்ப்பொருளின் சுருங்காமையைக் குறிப்பிட்டுள்ளார்.
வானவெளியில் உள்ள மிகப்பெரிய விண்மீன் ஞாயிறு, இதனை வழிபடுவது வானியல் மரபால் உருவானது, இலக்கியம் வழியாக ஞாயிறை வழிபடச் சொன்னவை சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஆகும். “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்” என்ற சிலப்பதிகார வரிகள் இதன் பெருமையை உரைக்கின்றன. ஞாயிறின் சுற்றுப்பாதையை “ஞாயிறு வட்டம்” எனப் புறநானூறு அழைக்கிறது. “செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்பும் சூழ்ந்த மண்டிலமும்” என புறநானூறு 30ஆவது பாடல் கூறுகிறது. தானே ஒளியை உமிழக்கூடிய ஞாயிறைத் தமிழர்கள் நாள்மீன் என அழைத்தனர். ஞாயிறிடமிருந்து ஒளியினைப் பெற்று ஒளிவிடக் கூடிய திங்களை கோள்மீன் என அழைத்தனர். சந்திர கிரகணம் பற்றித் திருக்குறள் கூறுகிறது. இது திங்கள் மறைப்பு எனக் கூறப்படுகிறது.” திங்களைப் பாம்பு கொண்டற்று” என 1146ஆவது திருக்குறள் கூறுகிறது. கோள்களைத் தமிழர்கள் வாழ்வியலோடு இணைத்துக் காட்டியுள்ளனர். கோள்களை நிறம், வடிவம் அடிப்படையில் அறிந்திருந்தனர். கோள்களுக்கு நாள்களின் பெயரை வைத்தே அழைத்தனர். செந்நிறமாய் இருந்த கோளைச் செவ்வாய் என அழைத்தனர். வெண்மை நிறமான கோளை வெள்ளி எனவும், புதியதாகக் கண்டறிந்தது புதன் எனவும், வானில் தோன்றிய பெரிய கோளை வியாழன் எனவும் அழைத்தனர். வியா என்றால் பெரிய, நிறைந்த என்று பொருள். சூரிய உதயத்திற்கு முன்பே விடியலை அறிய விடிவெள்ளியைத் தமிழர்கள் கண்டறிந்தனர். புதன் கோளை அறிவன் என அழைத்தனர். சனிக்கோளை காரிக்கோள் என அழைத்தனர். சனிக்கோளில் கந்தகம் இருப்பதைக் கண்டறிந்தனர். கோவில்களில் கோள்கள் எந்த நிறம் என்பதை முன்பே அறிந்து அதற்குரிய நிறத்தில் துணியை அணிந்திருந்தனர். கோவில் சிற்பங்கள், கல்வெட்டுகள்,ஓவியங்கள் ஆகியவற்றில் அறிவியலைப் புகுத்தி இருந்தனர்.
வான ஜோதிடத்தில் மழை வருமா என்பதை முன்பே அறிந்திருந்தனர். “முக்கூடற்பள்ளு” இலக்கியத்திலே “ஆற்று வெள்ளம் நாளை வரத்தேற்றுதே ஈழ மின்னல் மலையாள மின்னல் சூழ மின்னுதே” என்ற வரிகள் மழை பெய்வதற்கான அறிகுறிகளைக் கூறுகின்றன. அறிவியல் இல்லாத இடங்களே இல்லை எனலாம். பறவையை முதன்மைப் பொருளாக வைத்து வானூர்தியைக் கண்டுபிடித்தனர். அம்மி, குலவிக்கல், விசிறி ஆகியவற்றை வைத்துத்தான் இன்றைய நவீன இயந்திரங்களை உருவாக்கியுள்ளனர். மயில்பொறி விமானம் பற்றி சீவகசிந்தாமணி கூறுகிறது, கம்ப இராமாயணத்தில் இராவணன் செலுத்திய விமானம் புட்பக விமானமாகும், வான்வெளிப் பயணங்கள் பற்றிய குறிப்புகள் மணிமேகலையில் காணப்படுகின்றன. வானூர்தி இயக்கம், வடிவம் பற்றி பெருங்கதை நூல் எடுத்துரைக்கிறது, பெருவெடிப்புக் கொள்கையைப் பற்றி திருவாசகம் கூறுகிறது, வால் நட்சத்திரங்களை தூமகேது என அழைத்தனர்.
இன்றைய வேதியியல் கூறுகளுடன் ஒப்பு நோக்கக்கூடிய கருத்தினை சிலப்பதிகாரம் கூறுகிறது. மண்ணின் தன்மைகளை வைத்து நிலத்தினை நிறத்தின் அடிப்படையில் செம்மண், சுவையின் அடிப்படையில் உவர்நிலம், தன்மையின் அடிப்படையில் களர்நிலம் என வகைப்படுத்தினர், “மண் தேய்த்த புகழினான்” என சிலப்பதிகாரம் கோவலனைச் சுட்டுகிறது. கம்ப இராமாயணத்தில் யுத்த காண்டத்தில் விமானம் பற்றி ஒரு பாடல் வருகிறது. அது”ஆண்டு பத்தோடு நாலும் இன்றோடு ஆறும் ஆயின் மாண்டதாம் இனி என்குலம் பரதனே மாயின் ஈண்டுப் போக ஓர் ஊர்தி உண்டா” 141ஆம் பாடல் கூறுகிறது, கம்பர் அயோத்தியா காண்டத்தில் “தூமகேது புவிக்கு எனத்தோன்றிய” என்று கூறுகிறார், வானத்தில் வால் நட்சத்திரம் தெரிந்தால் உலகுக்கு துன்பம் வரும், தூமகேது என்றாலே தீமைக்குறி என்ற பொருளும் உண்டு என்பதை இந்தப் பாடல்வரி உணர்த்துகிறது. பரிபாடலில் “விரிகதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப எரிசடை எழில் வேழம் தலையெனக் கீழிருந்து தெருவிடைப் படுத்த” என்ற பாடல் கார்த்திகை முதலாக் 27 நட்சத்திரங்கள் செல்லும் பாதயைச் சூரிய வீதி தெரு என்ற சொல்லால் அழைக்கிறது. சூரியனும் விண்மீன் தான் என சிறுபாணாற்றுப்படை “பல்மீன் நடுவண் பால்மதி போல” என உரைக்கிறது.
பாரதியார் “காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்றார். அதன் தாக்கமே தொலைபேசி உருவாவதற்கு வழிகாட்டியது. திருவள்ளுவர் “கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனுமில” என்றார். இரண்டு கண்கள் பார்க்கும்போது வாய்ச்சொற்களினால் பயன்கள் எதுவுமில்லை. அவர்களின் பார்வையே குறிப்பை உணர்த்தும் என்பது பொருளாகும். இதனை மணிமேகலையில் சீத்தலை சாத்தனார் உதயகுமாரன் மணிமேகலை இருவரும் பளிங்கு அறையில் இருக்கும் பொழுது ஒளி ஊடுருவாது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.