இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

31. புறநானூறு காட்டும் வீரத்தாய்


வி. சசிகலா
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.

முன்னுரை

பண்டைத் தமிழரின் தமிழ் இலக்கியங்கள் காதலையும், வீரத்தையும் முன்மொழிவன. தமிழரின் வீரவாழ்க்கை சங்கப் புலவர்களால் பல்வேறு விதமாகப் புனைந்துரைக்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியங்களில் புறநானூற்றுப் பாடல்கள் பல வீரர்களின் தனித்த அடையாளத்தைப் பறைச் சாற்றுவதுடன் அவ்வீரர்களின் தாய்மார்கள் வீரர்களின் வீரத்தையும் மிஞ்சும் அளவிற்குச் செயலாற்றியமையைப் பதிவு செய்துள்ளன. இயல்பு நிலையிலும் மீவியல்பு நிலையிலும் புறநானூற்றில் காணலாகும் வீரத்தாய்களை இனம் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வீரத்தாய்

ஆடவர் என்று பெயர் படைத்தார் எல்லாம் ஆண்மையுடையவராயிருத்தல் வேண்டும் என்பது பண்டைத் தமிழர் கருத்து. “பிள்ளையைப் பெற்று வளர்ப்பது தாயின் கடமை. சீலனாக்குதல் தந்தைக்குக் கடமை. வாள் எடுத்து வீசி வலிய யானையைக் கொன்று வருதல் அப்பிள்ளையின் கடமை” என்று பாடியுள்ளார் பொன்முடியார். மேலும் தமிழ்நாட்டில் பெண்களும் மனத்திண்மையுடைவராய் விளங்கினார்கள். தம் மக்கள் வீரப்புகழ் பெறல் வேண்டும் என்று விரும்பினார்கள். போர்க்களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட மைந்தர் செயல் கண்டு அவரைப் பெற்ற போதிலும் பெருமகிழ்வுற்ற வீரத்தாயர் பலர் தமிழ்நாட்டில் இருந்தனர் என்பதனைப் புறநானூறு தன் பாடலின் வழியே கூறிச்செல்கிறது.

“நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள்
முளரி மருங்கின், முதியோள் சிறுவன்
படை அழிந்து, மாறினன் என்று பலர் கூற,
‘மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன்
முலை அறுத்திடுவென், யான்’ எனச் சினைஇ,
கொண்ட வாளோடு படு பிணம் பெயரா
செங்களம் துழவுவோள், சிதைந்து வேறு ஆகிய
படு மகன் கிடக்கை காணூஉ,
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே” (புறம்: 278)

இப்புறநானூற்றுப் பாடல், வயது முதிர்ந்த ஒரு தாயின் மகன் போர் புரியச் சென்றான். அவன் போரில் வெற்றி பெற்று வருவான் என எண்ணிக் காத்திருந்தாள் அவன் தாய். ஒரு நாள் அவளிடம் சிலர், ‘உன் மகன் பகைவருக்குப் புறங்கொடுத்து ஓடினான்’ என்று சொல்லக் கேட்ட அத்தாய் கோபமுற்று எழுந்து ஓர் அரிவாளை எடுத்துக் கொண்டு போர்க்களத்தை நோக்கிப் புறப்பட்டாள். என் மகன் பேடியாய்ப் புறங்காட்டி ஓடியது உண்மையாயின் அவனுக்குப் பாலூட்டிய மார்பை இவ்வாளால் அறுத்திடுவேன் என்று கூறினாள். போர்க்களத்திலே பிணங்களோடு தலைவேறு, உடல் வேறாய்க் கிடந்த தன் மைந்தனைக் கண்டாள். அவனைச் சேர்த்தெடுத்து அணைத்து ஆனந்தம் கொண்டாள். மகனைப் பெற்றபோது அடைந்த இன்பத்தினும் அவன் விழுப்புண் பட்டுக் கிடைந்ததைப் பார்த்தவுடன் பேரானாந்தம் கொண்டாள் என்று பொருளுரைக்கின்றது.



தாயின் இன்பம்

மகன் இறந்தான் என்பதைப் பற்றிக் கவலைக் கொள்ளாது. எப்படி இறந்தான்? என்ற வினாவிற்க்கான பதிலைத் தேடும் வீரஉணர்வுடைய தாயாகத் திகழ்வதை இப்பாடல் புலப்படுத்துவதை அறியலாம்.

“மீன் உண் கொக்கின் துவி அன்ன
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
நோன் கழை துயல்வரும் வெதிரத்து
வான் பெயத்தூங்கிய சிதரினும் பலவே” (புறம் : 277)

என்ற புறநானூற்றுத் தும்பைத்திணை பாடல் ஒன்று நெடுங்காலம் பிள்ளையில்லா மாது ஒருத்தி முதுமைப்பருவத்தில் ஒரு புதல்வனைப் பெற்றாள். மலடி பெற்ற மகன் என்று ஊரார் மறைவாகப் பேசினர். அவன் காளைப்பருவம் எய்திய போது நாட்டிலே ஒரு போர் மூள போர்க்களம் செல்ல ஆசைப்பட்டுத் தன் தாயிடம் ஆசி பெற்றுச் சென்றான். போர்க்களத்தில், ஒரு யானையோடு போர் செய்து, இறுதியில் யானையைக் கொன்று தானும் இறந்தான். இச்செய்தியைக் கேட்ட தாய் பிறவியின் பயனைப் பெற்றது போல் பேரின்பம் கொண்டாள் என்று புறநானூறு கூறுகிறது.

“ஈன்ற பொழுதிற் பெரிதுஉவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்டத்தாய்” (குறள்:69)

என்கிற திருக்குறளை இப்புறநானூற்றுப் பாடலோடு ஒப்பு நோக்கலாம். ஒரு தாய் தன் மகன் இறந்தாலும் கூட அவன் சான்றோனாகவும், வீரனாகவும்தான் இறக்கவேண்டும் என்றும், இது அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியை விடப் பெரியதாகும் சங்கத் தமிழரின் வாழ்க்கை நெறிமுறையை உணர்ந்தே குறளும் வீரத்தாயின் உணர்வினை படம் பிடித்துக் காட்டியுள்ளது என்றும் மொழிகிறது திருக்குறள்.



வீரத்தாயின் துணிவு

“சிற்றில் நல் தூண்பற்றி நின்மகன்
யாண்டு உளனோ? என வினவுதி என்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலிசேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர் களத்தானே” (புறம்: 86)

என்ற வாகைத்திணைக்குரிய ‘காவற்பெண்டிர் பாட்டு’ சிறிய வீட்டில் உள்ள நல்ல துணைப் பற்றிய வண்ணம் உள்ள ‘உன் மகன் எங்கு உள்ளான்’ என ஒருபெண் வினவ, ‘என்மகன் எங்கிருந்தாலும் நான் அறிவேன். புலி இருந்து பின் பெயர்ந்து சென்ற கற்குகை போல அவனைப் பெற்ற வயிறு இதுவாகும். அவன் போர் நிகழும் களத்தில் இருப்பான், அவனைக் காண்பதற்கு அங்குச் செல்’ என்று தன்மகனின் மீது நம்பிக்கை வைத்து ஒரு தாய் கூறுவதாக அமைகின்றது. இப்பாடலில் தாய் தன் வயிற்றைப் ‘புலி கிடந்தக் குகை’ என்று கூறுவது வீரத்தின் அடையாளத்தைப் புலப்படுத்தும் சிறந்த உவமை எனலாம்.

“கெடுக சிந்தை கடிது இவள் துணிவே
மூதில் மகளிராதல் தகுமே
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை எறிந்து களத்து ஒழிந்தனனே
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெருநிரை விலக்கி ஆண்டு பட்டனனே
இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி
வேல் கைக்கொடுத்து வெளிது விரித்து உடீஇ
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒரு மகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே!” (புறம்: 279)

என்ற வாகைத்திணைப் பாடலொன்று, மறக்குடியில் பிறந்த ஒரு பெண் முதல் நாள் நடந்தப் போரில் இவளுடைய தந்தை யானையைக் கொன்றுத் தானும் இறந்தான். நேற்று நடந்த போரில் இவள் கணவன் இறந்தான். இன்று போர்ப்பறை ஒலிப்பதைக் கேட்டு விருப்பம் கொண்டு இருநாளிலும் போர்புரிந்து இறந்துப்பட்ட தந்தையையும் தலைவனையும் நினைத்து அவள் தயங்காமல் வீட்டுக்கொரு வீரன் போர்க்களம் போக வேண்டும் என்பதால் எஞ்சி நின்ற தன் சிறிய மகளை அன்போடு அழைத்து வெண்மையான ஆடையை உடுத்தித் தலையைச் சீவிமுடித்து வேலை எடுத்துக் கையிலே கொடுத்து போர்க்களத்தை நோக்கி அனுப்பி வைத்தாள். எனவே, அன்றைய காலத்தில் ஒரு தாய் என்பவள் தன் மைந்தனின் தாய் என்பதை விட ‘வீரத்தாய்’ என்பதிலேயே மகிழ்ச்சி பெற்றுள்ளாள் என்பதைப் பறை சாற்றுகின்றது.



வயிற்றை அறுத்த வீரத்தாய்

ஒருமகன் போர்க்களம் சென்றான். அவன் பகைவர் பலரை வென்றான். அதோடு அல்லன் ஒரு யானையின் மீதும் வேற்படையை வீசினான். அந்த யானை விழுந்துபடாமல் வேலோடு ஓடிவிட்டது. அப்போது வெறுங்கையனாய்த் திரும்பினான் மைந்தன். வீடுவந்து சேர்ந்தான். போர்க்களத்தில் நிகழ்ந்ததை அறிந்த அவன் தாய் மிக வருந்தி, இதுவரை யானையைப் போகவிட்டுப் புறங்காட்டித் திரும்பியவன் என் குடியில் எவரும் இல்லை. என்றுமில்லாத வசை இன்று வந்துவிட்டதே என்பதை,

“எம் இல் செய்யாப் பெறும்பழி செய்ய எல்லாக்
காளையை ஈன்ற வயிறே” (புறத்திரட்டு, 1460, சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்பு)

என்று மனம் நொந்து உரைத்து இவனைப் பெற்றபாழும் வயிற்றைப் பீறி எறிவேன் என்று உரைக்கின்றது. ஒரு தாய்க்குத் தன்மகன் வீரனாக இருக்க வேண்டும் என்பதே பெருவிருப்பம் அவன் கோழையானவன் என்று தெரிந்தவுடன் தான் சுமந்த வயிற்றைக் கூடக் அறுத்திடுவேன் என்று துணிந்து கூறுவது பண்டைத் தாயின் வீரஉணர்வை முன் வைக்கின்றது.

களிறெறிந்த காளை

நால்வகைப் படையும் சுற்றிநின்று போர் புரியும் போர்க்களத்தில் ஆண் யானைகளை அடித்து வீழ்த்துதல் வீரத்துள் வீரமாக மதிக்கப்பட்டுள்ளது. இதனை,

“கைவேல் களிற்றோடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்” (குறள் : 704)

என்கிறார் திருவள்ளுவர். ஒரு வீரன் போர்க்களத்தில் பிளிறிய யானையின் மீது தன் வேலை விட்டெறிய அஃது அடிபட்டு விழுந்தது. அப்பொழுது மற்றொரு யானை அவனைத் தாக்க வந்தது. இன்னொரு வேல் கிடைத்தால் இந்த யானையையும் கொன்றிடலாம் என்று அங்குமிங்கும் பார்த்தான். அந்நிலையில் அவன் மார்பில் தைத்திருந்த வேல் ஒன்றைக் கண்டான். அதுவரையும் போர்வெறியில் தன் மேனியிற் பாய்ந்திருந்த வேலையும் அறியாதிருந்த வீரன், அதை ஆர்வத்தோடு பறித்து இழுத்தான். வேழத்தைக் கொல்ல ஒரு வேல் கிடைத்ததே என்று மகிழ்ந்தான். ஒருவீரன் சாகும் தறுவாயில்கூடப் போரிடவேண்டும் என்ற மனஉறுதியுடன் செயலாற்றியதைப் புறநானுறு கூறுகிறது.


தாயின் உள்ளம்

“வேம்பு சினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லா மனையும் கல்லென்றவ்வே
வேந்து உடன்று எறிவான் கொல்லோ
நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே” (புறம்: 296)

போர்க்களத்திலிருந்து தன் மகன் காலம் தாழ்த்தி வந்தமைக்கான காரணத்தை எண்ணிப் பார்ப்பதாக இப்பாடல் அமைகிறது.

“கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண்
வெந்து வாய் மடித்து வேல் தலைப் பெயரித்
தோடு உகைத்து எழுதரூஉ துரந்து எறி ஞாட்பின்
வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி
இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய
சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி
வாடு முலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே” (புறம்: 295)

என்ற பாடல் கடலின் ஆரவாரம் போன்றது பாசறை, அப்பாசறையில் போர்க்களத்திற்குத் தேவையான படைக்கருவிகள் கூர்மையாகத் தீட்டப்பெற்றன. இவ்வாறு கூர்மை செய்யப்பெற்ற வேலை வீரர்கள் பகைவர்பால் திருப்பினர். தலைவன் ஒருவன் மறவர் தொகுதியை முற்படச் செலுத்தித் தானும் அவர்களோடு எழுந்து போருக்குப் புறப்பட்டான். போர்க்களத்தில் பகைவரைத் தாக்க முயலும் போது படைத்திரளின் இடையில் வெட்டுண்டு உடல் சிதைந்து வேறுபட்டான். புறம் காட்டி ஓடாத கொள்கையை உடைய காளைக்குத் தாயாகிய இவள் சிறப்புக்குரிய தன் மகனின் மறமாண்பு கண்டு அன்பு மேலிட அத்தாயின் வற்றிய முலைகளில் இருந்து பால் ஊறிச்சுரந்தன. எனவே தன் மகனை நினைத்து அத்தாய்க்குப் பெருமையுடன் கூடிய அன்பு பெருகியது என்றுரைக்கின்றது.

“பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்
செறா அது ஓச்சிய சிறுகோல் அஞ்சியோடு
உயவொடு வருந்தும் மனனே இனியே
புகர் நிறம் கொண்ட களிறட்டு ஆனான்
முன்நாள் வீழ்ந்த உரவேர் மகனே
உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு
மான் உளை அன்ன குடுமித்
தோல் மிசைக் கிடந்த புல் அணலோனே”(புறம்: 310)

சிறு பிள்ளையாக இருக்கும் போது கிண்ணத்தில் பாலை ஊற்றிக் கையால் எடுத்து ஊட்டினாலும் குடிக்கமறுத்த மகனை சிறுகோல் கொண்டு அடிப்பது போல மிரட்டியேப் பாலை குடிக்கும்படி செய்துள்ளாள் ஒரு தாய். இத்தகு இளமைக் காலத்தை எண்ணி கவலைப்பட்டு வருந்துகின்ற தாய் பின் தன் மனதை நோக்கி மனமே! என்மகன் முன்பொருநாள் பகைவருடன் வீரப்போர் புரிந்து வீழ்ந்த வீரன் பெற்ற வீரன் இவன் துதிக்கையை உடைய யானையை வீழ்த்தியது மட்டும் அல்லாமல் தன் மார்பில் அம்பு பாய்ந்தது கூட அறியாத வீரனாகக் கேடயத்தின் மீது வீழ்ந்து கிடந்தான். என் இனிய வீரமகன் என்று ஒரு தாய் தன் கணவனையும் தன் மகனையும் சிறப்பித்துக் கூறுவதாக அமைந்த பாடலும் ஒரு தாயின் வீரமாண்பினைப் பறைசாற்றுவதாக அமைகிறது.


முடிவுரை

சங்ககாலத்தில் பெண்கள் வீரமுடைய பெண்ணாகவும், வீரப்புதல்வர்களைப் பெற்ற வீரத்தாயாகவும் இருந்துள்ளனர். ஆண்குழந்தை வீரத்தின் அடையாளமாக, முக்கியமாகக் கருதப்பட்டதைப் போல அவர்களுக்கான வீரமும், வீரமரணமும் முக்கியமானதாக இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. புறநானூற்றில் வீரமகனைப் பெற்றெடுத்த தாயின் உணர்வுகள் மிகமிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

* பெற்றபோது மகிழ்ந்ததைவிட வீரன் என்ற சொல் கேட்ட போது மகிழ்வதும்,

* மகன் வீரமற்றவன் என்பதைப் பிறர் கூறக்கேட்டுத் தன் மார்பினையே அறுத்தெறிய முயன்ற போக்கும்,

* யானையால் வீரமரணம் அடைந்த தம் மகனைக்கண்டு மனம் கலங்காமல் அச்செயலைத் தனது பிறவிப்பயன் என்று கூறுவதும்,

* வீரமகனைப் பெற்ற வயிற்றைப் ‘புலிக்குகை’ என்று புனைந்துரைப்பதும்,

* தனது சிறிய மகனையும் போருக்கு அனுப்ப முயன்ற வீரவுணர்வும்,

* புறமுதுகிட்டு ஓடும் மரபு சார்ந்தவன் என்மகன் அல்லன் என்கிற மன உறுதியையும்

இப்புறநானூற்றுப்பாடல்கள் தெளிவாகப் புலப்படுத்திச் செல்வதை அறிந்து கொள்ள முடிகிறது.

துணைநூல்கள்

1. புறநானூறு மூலமும் உரையும் (ஞா. மாணிக்கவாசகன்)

2. தமிழின்பக் கட்டுரைகள் (பேரா ரா. பி. சேதுப்பிள்ளை)

3. புறநானூறு (தொகுதி - 1, 2)

4. தமிழர் நாகரீகமும் பண்பாடும் (அ. தட்சணாமூர்த்தி)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p31.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License