தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
36. புறநானூற்றில் விலங்குகள்
சி. சந்திரகுமார்
முன்னுரை
தமிழ்ச்சங்கத்தில் எழுந்த நூல்களில் இலக்கியம், அறிவியல், வாழ்வியல், இயற்கை வளம் போன்றவை பரவலாகப் பேசப்படும் பாங்கினைக் காணலாம். இந்நூல்கள் மக்கள் நலன் கருதியே எழுந்தனவாகும். மக்கள் இயற்கையுடன் இணைந்து, பிணைந்து வாழ்பவர்கள். அவர்கள் ஓரறிவு உயிரிலிருந்து ஆறறிவு உயிரனங்கள் வரைஅன்பு காட்டி அரவணைத்தும் தம் வாழ்வியலை நடத்துபவர்கள். அதில் அசைவற்ற, ஊர்வன, நீர் வாழ்வன, பறப்பன, நடப்பன ஆகிய உயிரினங்கள் பற்றிய செய்திகளை நம் இலக்கியங்களில் விலங்குகள் பற்றிக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
விலங்குகள்
யானை, சிங்கம், புலி, குதிரை, ஆடு, மாடு, பசு, மான், கரடி, முயல், பன்றி, நாய், பூனை, குரங்கு, எருமை, நரி, ஆமை, முதலை, உடும்பு, குரங்கு, கழுதை, பாம்பு, எலி, பல்லி போன்றவை மக்களோடு தொடர்புடையவை, இனி விலங்குகள் சங்க நூல்களில் பவனி வரும் பாங்கினைக் காண்போம்.
சங்கத் தமிழர் வாழ்வியலில் விலங்குகள் இயைபுறக் கலந்திருந்தன.
வளர்ப்புவிலங்கு - நாய்
வேட்டைக்குப் பயன்பட்டது, வீட்டுக் காவலுக்கு நாய் வளர்க்கும் வழக்கம் அன்றே இருந்தது.
புறநானூறு
விலங்குகள் கடைச் சங்கத்தில் எழுந்ததும் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றானதுமான புறம்பாடும் புறநானூற்றில் பற்பல விலங்கினங்கள் பற்றிய செய்திகளையும் காண்கிறோம். அவற்றில்;
யானை: களிறு, வேழம், பிடி, கைம்மா, கைமான்.
குதிரை: புரவி, கலிமா, வயமான், மா, பரி, கலிமான்
சிங்கம் : மடங்கல்
மான்: கவரி, கலை, பினை, மறி, புல்வாய், இரலை, கடமான், நவ்வி, மடமான்.
பூனை: வெருகு (காட்டுப்பூனை)
பாம்பு: அரவம், நாகம், அரா
குரங்கு: மந்தி, கடுவன், கலை
பசு: ஆன், ஆதிரை, கறவை
நாய்: நீர்நாய், கதநாய், ஒமலி
ஆடு: மறி, மடங்கல்
முதலை: கராம், கரா
பன்றி: முள்ளம் பன்றி, முளவுகேழல்
எருது: காளை, பகடு, ஏறு
நரி, அணில், உடும்பு, எருமை, கழுதை, ஆமை, பல்லி, முயல் ஆகிய விலங்கினம் ஒரு சில.
இவ்விலங்கினங்களில், யானை பற்றி அதிகமாகப் பேசப்பட்டுள்ளதையும் புறநானூற்றில் காண்கிறோம்.
யானைகளை வளர்க்கவும் போர்த் தொழிலுக்குப் பழக்கவும் நன்கு அறிந்திருந்தனர். பழந்தமிழர்கள் உயரமாக இருந்தலால் உம்பல், கருநிறம் என்பதால் கரி, துதிக்கையுடைய விலங்கு என்பதால் கைம்மா, பெரிய விலங்கு என்பதால் பெருமா, கையையுடைய மலை போன்ற தோற்றத்தைக் கொண்ட விலங்கு என்பதால் கைம்மலை எனவும் மேலும் இவை போன்ற காரணப் பெயர்களும் தமிழர்களால் யானைக்குச் சூட்டப்பட்டவையாகும்.
முடிவுரை
மனிதன் வாழ்க்கையில் விலங்குகள் முக்கிய பங்கு வகித்ததைப் புறநானூற்றின் வாயிலாக நாம் அறியக் காண்கிறோம்.
*****
 இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|