தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
40. நாடகத் தமிழில் அரங்கம் பற்றிய சிந்தனை மரபுகள்
ந. சரவணன்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருச்செங்கோடு.
முன்னுரை
இயல், இசை, நாடகம் எனும் முப்பிரிவினதாதலின் இங்ஙனம் இயம்புகின்றனர். இவ்வகை இணைந்த பகுப்பு வேறு எம்மொழியிலும் இல்லை. முத்தமிழ் என்பது என்ன என்பது பற்றி விரிவாகக் கீழே காண்போம்.
நாடகம்
• நாடு + அகம் = நாடகம் ஆகும். நாட்டின் முக்கால நீர்மையையும் தன்னுள்ளே பொதுலிக் காட்டுதல், அகத்தை - உள்ளத்தை நாடு - உணர் (அகம் நாடு) எனப் பலவாகப் பொருள்படும்.
• இயலிசையால் காதுக்கும் கூத்தால் கண்ணுக்கும் இன்பம் பயக்கும் இக்கலையினைக் ‘கலைக்கரசு’ நாகரிகத்திற்குக் கண்ணாடி, பாமர மக்களின் பல்கலைக்கழகம் என்கிறார் கலைஞர் டி. கே. சண்முகம்.
• இதற்கு அரிய கலையைத் தமிழ்க்கலை அன்று. ஆரியரோடு கலந்த பின்னரே தமிழர்களிடத்தில் நாடகத் தமிழ் உண்டாகியிருத்தல் வேண்டும் என்கின்றனர். இந்த நாடகம் என்கிற சொல் வடசொல்லாம். இதற்குப் பரிதிமாற்கலைஞரே மறுப்பு தருகிறார். வடமொழியில் வாய் என்பதற்குத் தக்க சொல்லில்லாமையால் வடமொழியார்க்கு வாய் இல்லை என்பது போலும்.
• கூத்து என்ற சொல்லே ஆதியில் தமிழர்கள் வழங்கியது. ஆகவே நாடகமென்ற சொல் வழக்கின் முன்னரே நாடகத் தொழில் வழக்கம் என நிறுவுகின்றனர்.
• தொல்காப்பியத்தில் நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் வாடா வயவர் ரத்தும் வல்லி (கூத்தும்) என வருதலான் அக்காலத்திலேயே தமிழ் நாடகம் நன்னிலைப் பெற்றிருக்க வேண்டும் எனக் கூறலாம். ஆனால் அக்காலத்தில் நாடகம் ஏதும் கிடைக்கவில்லை.
• இலக்கண நூல்களேயல்லாமல் இலக்கியங்கள் ஏதுமில்லை. இலக்கணங்களுக்கு முன்னே பல இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டுமல்லவா? எள்ளிலிருந்து தானே எண்ணெய்?
• இங்ஙனம் உயர்நிலையில் உலவிய நாடகம் மீண்டும் தன்னிலை இழந்தது. களப்பிரர் ஆட்சியும், இசையும், கூத்தும் காமத்தில் ஆழ்த்துவன என எண்ணி வெறுத்த சமண பௌத்த மதத் தாக்குதலுமே காரணங்களாம். இதனால் ஏறக்குறைய 10-ம் நூற்றாண்டு வரை பைந்தமிழில் நாடகங்கள் பிறக்கக் காணோம்.
• இராசராச சோழனின் வெற்றியைச் சிறப்பிக்கும் மாற்றான் இராஜராஜ விஜயம் எனும் நாடகம் அவன் காலத்திலேயே (986-1017) விஜயராஜேந்திர ஆசிரியனால் நடிக்கப்பெற்றதாகத் தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டு பேசுகிறது. நாடகம் நடிப்போர்க்குச் சோழ மன்னர்கள் மானியம் வழங்கினர்.
பரிதிமாற் கலைஞர்
• வடமொழி நாடக நெறியினைத் தழுவி தமிழ் மரபினையொட்டி நாடகவியல் எனும் நாடக இலக்கண நூல் ஒன்றை யாத்ததோடு அதன்படியே ரூபாவதி, கலாவதி, மானவிஜயம் எனும் நாடகங்களை எழுதி நல்லாற்றுப்படுத்தினார்.
• பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாடக இலக்கியம் இருபெருஞ்சுடர்கள் எனலாம். இவர்கள் காட்டிய வழியினைப் பின்பற்றி எண்ணரிய நாடகங்கள் எழுந்தன. கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரின் சரபேந்திர பூபாலக் குறவஞ்சி ஈண்டு நினைக்கத்தக்கது.
• நாடகங்களை ஒழுங்குபடுத்தி அரங்க அமைப்பு கொடுத்த பெருமைக்குரியவர், தஞ்சையில் மனமோகன நாடக மன்றம் அமைத்து நாடகமாடிய நவாப் கோவிந்தசாமி ராவ் ஆவார்.
• இந்த நூற்றாண்டில் தமிழ் நாடகத்தின் வித்தகராக விளங்கியவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். இவரைத் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என டி. கே. எஸ். அவர்களும் நாடக உலகின் இமயமலை என எஸ். எஸ். கேயும் வாழ்த்தியுள்ளனர்.
• நாடகக்காரர்கள் என்றால் நம்பிக் குடியிருக்க வீடு கூட கொடுக்கப் பயந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இவ்விழிவினைப் போக்கித் தமிழ் நாடகத்திற்குப் பெருமையும் நடிகர்கட்கு உயர்வும் தேடித்தந்த பெருமைக்குரியவர் தமிழ் நாடகத் தந்தை பத்ம்பூசன் பம்மல் சம்பந்த முதலியார் ஆவார். நாடகம், பாட்டு மயமாகவே இருக்க வேண்டும் எனும் நினைவை அகற்றிப் பேச்சாகவே வரலாம் எனக் காட்டியவர், உரையாடலில் எழுதி வெற்றிபெற முடியும் என முதன்முதலில் நிலை நாட்டியவர், நள்ளிரவில் தொடங்கிக் காலையில் முடிக்கும் முறையினை மாற்றி மாலை ஆறு மணிக்குத் தொடங்கி இரவு ஒன்பது மணிக்கு முடிக்கும் முறையினை வகுத்துக் காட்டியவர். எனவே, இவரால் தமிழ்நாடகம் புத்துயிரும் புதிவாழ்வும் பெற்றது எனலாம்.
• ஏறத்தாழ 450 குடும்பங்கள் இவர்களுக்கென தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சுண்ணாம்புக்காரர் தெருவில் உள்ளது. உடையப்பா, எம். என். கண்ணப்பா, மஜீத் நாகராஜ், பாகவதர் ஏ. எஸ். மகாதேவன், சித்ராதேவி, தாராபாய், ரேணுகா தேவி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
• மாசி சிவராத்திரி முதல் ஆவணி முடிய ஊர்களினின்று வந்து குழுமுவதால் விடிந்தே ஊர் திரும்ப முடியுமாதலால் விடிய விடியத்தான் நடத்த வேண்டும்.
• ஏறத்தாழ 100 குடும்பங்கள் திருவிழாக்களை இங்கு நோன்பி என்கின்றனர். இந்த நோன்பி நடக்கும் போதெல்லாம் புரட்டாசி தொடங்கி 5 திங்கள் அடுத்தடுத்த ஒவ்வொரு ஊரிலும் நாடகங்கள் நடைபெறுகின்றன. இசை நாடகங்கள் தான் வள்ளித் திருமணம், லவகுசா, கர்ணன் சண்டை, ஆரவல்லி, ஹரிச்சந்திரா, சக்களத்தி போராட்டம், சம்பூரண இராமாயணம், ஒட்ட நாடகம் போன்றவை.
முடிவுரை
நாடகத்தமிழின் வளர்ச்சியானது எப்படி இருந்தது, ஆசிரியர்கள் என்ன சொல்லுகிறார்கள், நூல்கள் எல்லாம் எப்படி இருந்திருக்கின்றது என்பதையெல்லாம் பற்றிப் பார்த்தோம்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.