இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

47. புதுவை ரா. ரஜனி சிறுகதைகள் வெளிப்படுத்தும் சகிப்புத் தன்மை சமுதாயம்


முனைவர் கை. சிவக்குமார்
உதவிப் பேராசிரியர், தழிழாய்வுத்துறை,
எம். ஜி. ஆர் கல்லூரி, ஒசூர்..

முன்னுரை

மனிதன் ஒவ்வொருவரும் சுதந்திரமாக இருக்கின்றனர் என்பதற்கு அவர்கள் வாழும் வாழ்க்கையும், செய்யும் தொழிலும் சாட்சியாக அமைகின்றன. குடும்பத்தில் ஆண், பெண் இணைந்த உறவுகளோடு மனநிறைவோடு வாழும் வாழ்க்கை இன்று சவாலாகவே உள்ளது. அதேபோல் வாழ்விற்குத் தேவையான பொருளை ஈட்ட செய்யும் வேலையிலும் மனநிறைவு என்பது பலரின் வாழ்வில் கானல்நீராகவே உள்ளது. இவ்வாறு இன்னல்களுக்கிடையில் வாழக்கூடியவர்களின் வாழ்க்கையில் எவ்வாறு வெற்றிப்பெறுகின்றனர் என்பது பற்றி இங்கு காண்போம்.

கைவினை மிசே என்ற சிறுகதைத் தொகுப்பை புதுவை ரா. ரஜனி எழுதியுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள தேவன் வருகை, பூனைகளும் கழுதைகளும், மழை ருசி என்ற மூன்று கதைகள் மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதில் பெறப்பட்ட தரவுகள் அடிப்படையாகக் கொண்டு வாழ்விலும், பணியாற்றும் இடங்களிலும் பெறும் சகிப்புத் தன்மையைப் பற்றி இக்கட்டுரை எடுத்து இயம்புகின்றது.
சகிப்புத் தன்மை

சகிப்பு என்பதற்கு அகராதிகள் விளக்கம் தருகின்றன. தனக்கு மாறானவற்றை அல்லது தனக்குப் பிடிக்காதவற்றைப் பொறுத்துக் கொள்ளும் அல்லது ஏற்றுக் கொள்ளும் தன்மை என்று க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி கூறுகின்றது (1)பொறுத்தால், மன்னிப்பு (2) எனக் கழகத் தமிழ் அகராதி கூறுகின்றது. இதன்மூலம் சகிப்பு என்பது மனித மனநிலையில் ஒன்றாகவேக் காணமுடிகின்றது.



இல்லத்தில் பெண்ணின் சகிப்புத் தன்மை

ஆண்கள் என்றாலே அதிகார வர்க்கம் என்பதற்கு ஏற்ப பெண்களிடமிருந்து அதிக வேலை வாங்கிவிடுகின்றனர். ஆண்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தாலும், வீட்டிலே இருந்தாலும் இதே நிலைதான். குறிப்பாக உடையில், பிறருடன் பேசுவதில் கட்டுப்பாடு என அவர்களின் சுதந்திரத்தில் கைவைத்தாலும் அதைப் பெண் ஏற்றுக்கொண்டு வாழ்கின்றாள். பணிக்குச் செல்லும் பெண் வேலைக்கு நேரமாச்சு என்றால் கூட உன்னை யார் வேலைக்குப் போகச்சொன்னது என்பர். இதுபோன்று பல பெண்கள்தினமும் வாழ்கின்றனர்.

சுமதி வேலைக்குச் செல்வதற்கு முன்பு வீட்டு வேலை, மகளை பள்ளிக்குத் தயார் செய்வது போன்ற வேலைகளை முடித்துவிடுகின்றாள். வேலைக்குச் சென்று மீண்டும் வந்த பிறகும் வீட்டுவேலைகளைக் கவனிக்க வேண்டும். கணவனுக்குத் தற்காலிகமாகப் பணி இல்லாவிட்டாலும் கூட அவரைக் கவனித்துக் கொள்ளவேண்டும். என எல்லா வேலைகளையும் பெண்மட்டுமே செய்ய வேண்டியிருக்கிறது என்பதை “வீட்டிலும் அவள்தான் எல்லாம் கவனிக்க வேண்டும். அகிலாவைப் பள்ளிக்கு அனுப்பும் வேலை முக்கியம். சிவராமனுக்கு கட்டுச்சோறு கட்டிக் கொடுத்து அனுப்புவாள்” (3) என்கிறார் ஆசிரியர். இல்லச் சுமை சுமப்பதோடு வேலைக்குச் செல்வதனால் அச்சுமையும் பெறுகின்றாள். இவ்வாறு தன் குடும்பத்தைக் காப்பது ஆணுக்கு ஒரு பங்கு என்றால் பெண்ணுக்குப் பல பங்கு என்பதை அறியமுடிகின்றது. வேலைக்குச் செல்லாத ஒரு சில பெண்களின் நிலையும் இதுவேதான் என்பதை எதார்த்த வாழ்வில் அறிந்து கொள்ள முடிகின்றது.

உறவுகளுக்குள் சகிப்புத் தன்மை

குடும்ப உறவுகளுக்குள் நட்புறவு நீடிக்க அவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் நிலையைக் காணமுடிகின்றது. அது கணவன் மனைவியாக இருந்தாலும் சரி, குடும்ப உறுப்பினர்களான மாமனார், மாமியார், மருமகள் போன்று யாராக இருந்தாலும் சரி. அவ்வாறு இல்லையெனில் வாழ்வில் இன்பமாக வாழமுடியாத சூழலைச் சந்திக்கின்றனர். குடும்பத்தில் யாதேனும் ஒரு தனிமனிதன் சகிப்புத் தன்மையோடு வாழ்தல் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.

பெண் திருமணமான பொழுது புகுந்த வீட்டிற்கு வருகின்றாள். அவ்வாறு வரும்பொழுது அமைதியாகதான் வருகின்றாள். பின்பு சிறிது காலம் கடந்ததும் அக்குடும்பத்தின் பொறுப்பை ஏற்கும் முழு உரிமையும் சிறிது சிறிதாகப் பெறுகின்றாள். அவள் கணவன் தாமு என்பவன் மளிகைக்கடையை விரிவுபடுத்தத் திட்டமிடுகின்றான். அதற்குப் பணம் தேவைப்படுகின்றது. பெண்வீட்டில் வாங்க முடிவு செய்கின்றனர். ஆனால் அவர்களோ உங்கள் வீட்டை விற்று விரிவுபடுத்துங்கள் என அறிவுறுத்துகின்றனர். அவனும் தன் தந்தையிடம் கேட்டுப் பார்க்கின்றான். அவன் தந்தை அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதற்குத் தாமுவின் தந்தை தான் சம்பாதித்து வாங்கியதாகவும் வீட்டை விற்கும் எண்ணம் இல்லை எனவும் கூறிவிட்டார். வேறு வழியின்றி தன் தந்தையிடம் பேசுவதை மட்டும் குறைத்துக் கொண்டு அவருடனே இருக்கின்றான். தாமுவுக்கு தன் தந்தையிடமிருந்த கோபம் அவன் மனைவி மீது வெளிப்படுகின்றது.

தாமுவின் மனைவி வீட்டை விற்றுக் கொடுக்காததனால் மாமனார் மீது குறை கூறத் தொடங்கினாள். தாமுவின் தந்தை பேரன் மீது உள்ள அன்பிற்காக மருமகள் செய்யும் கொடுமைகளைச் சகித்துக் கொண்டு அவர்களுடன் சேர்ந்து வாழ்கின்றார். அப்பெண்ணின் வெறுப்பு, தன் கணவன் மீதும் திரும்பியது. அதை கண்ட பெரியவர் தன் மகனை நினைத்து அவருடைய வாழ்வை நாயுடன் ஒப்புமைப் படுத்திக்கூறுகின்றார். “பேய்கிட்டகூட வாழ்ந்துடலாண்டா. இந்தப் பய எப்பிடித் தான் அவகூட குடும்பம் நடத்துறானோ? கடையை மூடிட்டு வந்தான்னா பொட்டிப் பாம்புதான். அவதான், நாய் வாயில குச்சி சொருகின மாதிரி கத்திட்டே இருப்பாள்" (4) என்று கூறுகின்றார். இவ்வாறு கணவன், மனைவி, வீட்டில் உள்ள பெரியவர் யாவரும் சகிப்புத் தன்மையோடு வாழ வேண்டியுள்ளதைக் காணமுடிகின்றது.

பெண் கோபம் கொண்டதற்காகக் கணவனும் சண்டையிட்டுக் கொள்ளவில்லை. அதனால் தான் தன் தந்தையைப் புரியவைத்து மீண்டும் தாங்கள் நினைத்ததைப் போலவே அந்த வீட்டை அடமானம் செய்து மளிகைத் தொழிலை விரிவுபடுத்தினர். அதே அப்பெண்ணிடம் குறைகூறி வரதட்சணை வாங்கி வரச் சொல்லியிருப்பின் வாழ்வில் வேறுவிதமான சூழல் உருவாகியிருக்கும். பெரியவரும் பேரப்பிள்ளைக்காக சகித்துக் கொள்வதினாலும் வீடு வீடாக இருக்கின்றது என்பதை அறியமுடிகின்றது.



பணியில் பெண்களின் சகிப்புத் தன்மை

‘மனையுரை மகளிருக்கு ஆடவர் உயிரே’ என்ற நிலை அக்காலம். இன்று பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை என்ற அளவிற்குப் பணிகளில் ஆர்வம் காட்டி சாதனை செய்து வருகின்றனர். எந்த வேலையாக இருந்தாலும் பெண்கள் சாதித்துக் காட்டிவிடுகின்றனர். அவ்வாறு வேலை செய்யும் பெண்கள் தான் செய்யும் வேலையில் முழுமனதோடும், சுதந்திரத்தோடும் பணியாற்றுகின்றனரா என்றால் ஐயமே! வேலைசெய்யும் இடங்களில் பெரும்பான்மை சகித்துக்கொண்டுதான் அவ்வேலையைச் செய்கின்றனர்.

சுமதி என்ற பெண் மூன்று நட்சத்திர விடுதியில் பணியாற்றுகின்றாள். அவள் வீட்டு வேலைகளையும் முடித்துவிட்டு அங்கு சென்றால் நிற்பதற்குக் கூட நேரம் இருப்பதில்லை. தொலைப்பேசியின் அழைப்பு, சுடுநீர் வராமை, சோப்பு, படுக்கை விரிப்புத் தூய்மை, மாண்புமிகு விருந்தாளிகள் வரும்பொழுது மலர்க்கொத்து தயாரிப்பது, கீழ்ப்பணியாற்றும் தொழிலாளர்களிடம் பேசி வேலை வாங்குவது இதுபோன்ற பல வேலைகளைப் பலர் செய்ய வேண்டியதைச் சகித்துக் கொண்டு ஒருவரே செய்வதை, "மூன்று நட்சத்திர ஹோட்டல் சுமதியைப்போல் பலருக்கு வேலை வாய்ப்பு அளித்தாலும் வாழ்வின் பெரும் பகுதியினை அதற்கே ஒதுக்க வேண்டியிருந்தது. ஒன்பது மணி நேர வேலை. விடுதி கூட்டமாய் இருந்தால், பத்துமணி நேரத்துக்கு நீண்டுவிடும் அடுத்தப் பணியாளர் வரவில்லை எனில் மறுபடியும் ஒரு ‘ஷிப்ட் தொடர வேண்டும்" (5) என்று வீட்டையும் பார்த்துக்கொண்டு வேலையையும் பார்த்துக்கொண்டு வேறுவழியின்றி சகித்துக்கொண்டு வாழ்வதை நாம் பார்க்க முடிகின்றது.

தலைவன் வறுமையுற்ற பொழுதும் ஒருநேரம் உண்டும் இரண்டு நேரம் உண்ணாதும் வாழ்ந்தது அந்தக் காலம். இன்று இல்லத்தில் தலைவன் மட்டும் பொருளீட்டினால் குடும்பத்தை மகிழ்வோடு நகர்த்த முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும் பெண்களின் மதிப்பைக் கூட்டுவதாகக் கருதுகின்றனர். ஆனால், அவ்வாறு செல்வது மனநிறைவோடு பணியாற்றுவதில்லை ஊதியம் பெறவேண்டும் நானும் வேலைக்குச் செல்கின்றேன் என்பது போலதான் உள்ளது. மனநிறைவான பணி கிடைக்காததனால் பல பெண்கள் பணிக்குச் செல்ல விரும்புவதில்லை என்பதையும் அறியமுடிகின்றது.

பணியில் ஆண்களின் சகிப்புத் தன்மை

மனிதனை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டே இருக்கின்றனர். உழைப்பவர்கள் உழைத்துக் கொண்டே தான் இருக்கின்றனர். ஏமாற்றுபவர்களிடம் ஒரு வேலை கொடுத்தால் ஏன் இந்தவேலையை நான் செய்ய வேண்டும், எதற்காகச் செய்யவேண்டும் என்ற வினாக்கள் தான் மிகுதியாக இருக்கும். அதே உழைப்பவர்களிடம் பணி வழங்கப்படுமாயின் அது போன்ற வினாக்களைத் தொடுப்பதில்லை. கொடுக்கும் வேலையைச் செய்து முடிப்பது தான் அவர்களின் கடனாகக் கொள்வர். இவ்வாறு இருவேறு பண்புடையவர்களை அன்றாடும் சந்திக்கின்றோம். வேலை வாங்குபவர்களின் மனம் உழைப்பவர்களை அடிமைகளாகவே கருதிவிடுகின்றனர்.

உழைப்பாளி ஒருவன் கைரிக்ஷா வண்டியில் வெள்ளைக்காரத் துரையை இழுத்து வருகின்றான். அப்பொழுது பாரதி அவன் கூடவே நடந்து வருகின்றார். பாரதி கைரிக்ஷாக்காரனிடம் சற்று நகரேன் நான் பிரெஞ்சு துரையை இழுத்துப் பார்க்கிறேன் என்றார். அதற்கு ரிக்ஷாக்காரன் "வேணாம் மிசே! என் போதாத காலம். துரையையும் இழுப்பேன், துரைசாணியையும் இழுப்பேன். இவங்க வி‘க்காத்து கொஞ்சம்கூட உங்கமேலே படக்கூடாது எனக்கென்ன பொதியும் ஒண்ணுதா… கழுதையும் ஒண்ணுதா…" (6) என்றான். பாரதி சிரித்து விட்டார். உழைப்பவர்கள் பணத்திற்காக வேலை செய்தாலும், தன்குடும்ப நிலை கருதி சில நேரங்களில் அவர்கள் சகிப்புத் தன்மையோடுதான் வாழ்கின்றனர்.

உழைப்பவர்கள் தான் படும் துன்பங்கள் மற்றவர்கள் படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர் என்பதைக் காட்டுகின்றார் ஆசிரியர். இன்றைய சூழலில் பலர் பல இடங்களில் கை கட்டாத அடிமைகளாகவே இருக்கின்றனர். அவ்வாறு இருப்பதற்கு அவர்களின் குடும்ப நிலைதான் காரணம் என்பது தெளிவாகின்றது.



குழுவின் சகிப்புத் தன்மை

பொருளீட்டுவது என்பது ஆணின் கடமை. பெண்கள் வேலைக்குச் செல்லவில்லை என்றாலும் யாரும் எதுவும் கூறுவதில்லை. ஆண்கள் வேலைக்குச் செல்லவில்லை என்றால் கேள்விக்கு ஆட்படுத்தப்படுவர். அதற்காக ஏதேனும் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றுவர். அந்த நிறுவனத்தில் ஊதியம் சரியாகவும், ஊதிய உயர்வும் கொடுக்கும் பொழுது அங்குப் பணியாற்ற மனம் விரும்பும். இல்லையெனில் குழுவாகச் சேர்ந்து போராடி முதலாளியிடமிருந்து ஊதிய உயர்வைப் பெறுவது வழக்கம். ஒரு சில நிறுவனங்கள் போராடக்கூடியவர்களைப் பணியிலிருந்து நீக்கிவிடுகின்றது. அதனால் போரட்டம் செய்ய நினைக்கும் குழு ஊதிய உயர்வு இல்லாவிட்டாலும் பரவாயில்லை வேலை கிடைத்தால் மட்டும் போதும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவதையும் இன்றைய எதார்த்த உலகில் காணமுடிகின்றது.

சிவராமன்அவனது குழுவும் பதினைந்து வருடங்களாக தொழிற்சாலையில் பணியாற்றுகின்றனர். அப்பொழுது அவனும் அவனைப் போன்ற சிலரும் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நிகழ்த்தினர். நிகழ்த்தியவர்களை உரிமையாளர் பணியிடை நீக்கம் செய்துவிடுகின்றார். மனம் உடைந்த அக்குழுத் தலைவர் சிவராமனிடம் அவர் நிர்ணயம் செய்த தொகையை விட கூடுதலாகக் கெஞ்சியாவது பெற்றிருக்கலாம் எனத் தோன்றுகின்றது என்கின்றார். இதனை, "பேசாமல் முதலாளிகள் நிர்ணயம் செய்த தொகையோடு கொஞ்சம் கெஞ்சி கெஞ்சி மேலும் சிறு தொகையோடு பிரச்சினையை முடித்திருக்கலாமோ என்று தோன்றியது. இருப்பினும் ரத்தம் கொதிக்கிறது" (7) என்று சகித்துக் கொண்டு அதே பணியில் முதலாளியிடம் பணிந்து போவதே சிறந்தது என்பதை வெளிகாட்டுகின்றார். மேலும் அவர் பதினைந்து வருடங்களாய் உழைத்துக் கருத்துப் போயாகிவிட்டது. மாடமாளிகை, கூட கோபுரங்கள் கட்டிக்கொண்ட பெரும் மனிதர்கள் இப்போது நஷ்டம் என்று கூறி ஆட்குறைப்பு என்று தீர்மானிக்கிறார்கள். ஊதிய உயர்வு நியாயமாய்க் கேட்பது தவறா?" (8) என வெளியில் பேச முடிவதை முதலாளியிடம் பேச முடியாத நிலையைக் காட்டுகின்றார் ஆசிரியர்.

முதலாளி சொல்லுக்குக் கட்டுப்பட்டு வாழ்க்கைக்கான பொருள் பெறுவதற்காகச் சகித்துக் கொண்டுதான் வாழ வேண்டியிருக்கிறது. அதற்குக் காரணம் தன்னை நம்பி இருக்கின்ற குடும்பம் என்பது தான். குடும்ப வாழ்வில் இணையும் பொழுதே மனிதன் பல சகிப்புத் தன்மைகளைப் பெற்றுவிடுகின்றான் என்பதை அறியமுடிகின்றது.


முடிவுரை

பெண் குடும்பத்திற்குள் இணைவதாக இருந்தாலும், ஆண் குடும்பத்திற்குள் இணைவதாக இருந்தாலும் ஆண், பெண், குடும்ப உறுப்பினர் இணைவதாக இருந்தாலும் சகிப்புத் தன்மை மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளதை அறியமுடிகின்றது. இந்நிலை மாற்றம் அடைந்து ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு அன்பான வாழ்க்கை வாழ்வதே இன்றைய தேவையாக உள்ளது.

வேலைக்குச் செல்லும் இடங்களில் கடுமையாக உழைத்தாலும் அதற்குப் பலன் இல்லை. உழைக்கும் வரை உழைப்பைச் சுரண்டிக் கொள்ளவும், முடியாத பொழுது சக்கையாக வீசுவதும் இன்றைய வேலைவாய்ப்பு உள்ளது. நிரந்தர பணி வழங்கி முதலாளிகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதன் மூலம் வேலை செய்யும் இடங்களில் மன நிறைவோடு வாழ முடியும் என்பதை ஆசிரியர் காட்டியுள்ளார். இல்லத்தில் புரிதலும், பணியிடங்களில் சுதந்திரமும் பெற்றால் தான் வாழ்வில் சிறப்பு என்பதை இதன் மூலம் அறியமுடிகின்றது.

குறிப்புகள்

1. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, இரண்டாம்பதிப்பு 2008, ப.523

2. கழகத் தமிழ் அகராதி, பத்தொன்பதாம் பதிப்பு 2004, ப.416

3. புதுவை ரா. ரஜனி, கைவினை மிசே!, முதற்பதிப்பு 2015, ப.17

4. மேலது.ப.6

5. மேலது.ப.16

6. மேலது.ப.2

7. மேலது.ப.18

8. மேலது.ப.18


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p47.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License