தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
48. கலித்தொகையில் விலங்குகளின் வாழ்க்கைமுறை
ந. சீனிவாசன்
முன்னுரை
மனித இனத்தின் அனுபவங்களையும், கற்பனைஉணர்வுகளையும் கலைநயத்துடன் எடுத்துரைப்பது இலக்கியம் ஆகும். கலைகள் பல தோன்றி வளரவும், நாகரீகம் வளர்ந்து மனிதம் செழிக்கவும் அடிப்படையானவை நம் இலக்கிய முறைகளாகும். உலகிற்கே நாகரீகமும், பண்பாடும் உருவாக அடிப்படையானவர்கள் நம் தமிழர்களே! அவர்களின் வாழ்வியல் முறைகளை இருவேறு கூறுகளாக்கி (அகம், புறம்) எனப் பகுத்தன. அவ்வாறே இலக்கியக் கூறுகளும் வகுக்கப்பட்டன. சங்க இலக்கியங்களில் முக்கியமான பேசப்படக் கூடியவை பத்துப்பாட்டும், எட்டுத்தொகையுமாகும்.
கலித்தொகை
எட்டுத்தொகையில் ஆறாவது நூலாக வைத்துப் போற்றக்கூடிய நூல் கலித்தொகையாகும். கலிப்பாவால் ஆன 150 பாடல்களைக் கொண்டதொகை நூல் இது. பரிபாடலால் ஆனது பிரிதொன்று இவ்விருபாக்களும் அகப்பொருளைப் பாடுதற்குச் சிறந்தயாப்பு வடிவங்கள் என்பார் தொல்காப்பியர்.
‘நாடகவழக்கினும் உலகியல் வழக்கிலும்
பாடல் சான்றபுலனெறிவழக்கம்
கலியேபரிபாட்டுஆயிருபாவினும்
உரியதாகும் என்மனார் புலவர் “ (தொ.999)
இதிலிருந்துஆசிரியத்தினும் சிறப்பாக அகம் பாடுதற்கு உரியவை இவ்விரு பாக்களுமே என்று அறியப்படும். ஐவகை நிலத்திற்கும் உரிய பாடுபொருள்களை செம்மையாகக் கையாண்டுள்ளனர். திணைக்கு ஒருவர் என்பது மாறி நல்லந்துவனாரே நூல் முழுமையும் பாடினார் என்றும் கூற்று விளங்குகின்றது.
மனிதனும் விலங்குகளும்
கற்கால மனிதன் நாகரீக வளர்ச்சியின்மையால், விலங்குகளை வேட்டையாடி தன் வாழ்வை மேற்கொண்டான். ஆரம்பத்தில் இயற்கையையும், விலங்குகளையும் கண்டு அஞ்சி வாழ்ந்த மனிதன் அவ்விலங்குகளையே உண்டு வாழ்ந்தான். காலப்போக்கில் அவ்விலங்குகளைத் தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும்ஆற்றல் பெற்றான். அன்றிலிருந்து விலங்குகளும் மனித சமுதாயத்தின் ஒரு அங்கமாயின. உழவுத் தொழிலுக்கும், தன் குழந்தைக்குத் தாயாகவும் (பால் கொடுப்பதால்) மதித்தான். நன்றியுள்ள நாய்களைத் தன் வீட்டின் பாதுகாவலாக்கினான்.
கலித்தொகையில் விலங்குகள்
கலித்தொகைப் பாடல்களில், பல்வேறு கதாபாத்திரங்களின் கூற்றுகளில் விலங்குகள் இடம் பெற்றுள்ளன. அதில் ஆமை, எருமை, காளை, குதிரை, குரங்கு, சிங்கம், நண்டு, நரி, நாய், பசு, பல்லி, பாம்பு, புலி, மான், முயல், மூதாய், யானை போன்ற பல்வேறு விலங்குகளை ஒப்புமைபடுத்தியுள்ளனர்.
நாய்
“கண்டோர் கூற்றும் தலைவழி கூற்றும்.
காட்பீயாய்,கதநாய்
கொளவுவேன்”
என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன.
மான்
“தலைவி கூற்று
தன் நிழலைக் கொடுத்து
அளிக்கும், கலைஎனவும்
உரைத்தனரே”
காளை (ஏறுதழுவுதல்)
முல்லைத்திணைப் பாடல்கள் பெரும்பாலும் ஆயர்குல மக்களின் வாழ்வியலைப் படையாக வைத்து எழுதப்பட்ட தொகுப்பாகும். அவர்களுடைய முக்கியமான பணி என்பது ஆநிரைகளை மேய்த்தலாகும். ஆயர்குலப் பெருமக்கள் கூரிய கொம்புகளையுடைய காளைகளை அடக்குவதையே வீரவிளையாட்டாகக் கருதினர். காளையை அடக்கிய காளையர்களையே ஆயர்குல மகளிர் கணவனாகத் தேர்ந்தெடுத்து மணந்தனர். காளையின் கொம்புகளுக்கு அஞ்சிய தலைவனை, மறுபிறவியலும் தழுவமாட்டாள் என்பதை;
“கொல்லேற்றுக் கொடஞ்சுவானைமறுமையும்
புல்லாளேஆயமகள்” (முல்லைக்கலி-3)
என்ற பாடல் விளக்குகிறது.
முடிவுரை
கலித்தொகையில் பேசப்படும் இத்தகைய விலங்குகளின் வாழ்க்கை முறையானது கற்பனைக்கு எட்டாதவையாக இக்காலகட்டத்தில் விளங்கலாம். ஆனால், மனிதர்களோடும், இயற்கையோடும், இரண்டறக் கலந்தவை இவ்விலங்கினங்கள். இலக்கியங்கள் உள்ளவரை விலங்குகளின் புகழ் போற்றப்படும்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.